ஒரு காட்டில் இரு கிளிகள் கணவன் மனைவியாக ஒரு மரத்தில் கூடுகட்டி வாழ்ந்துவந்தன அந்த கூட்டில் முட்டையிட்டு இரு கிளிகுஞ்சுகள் உருவாகியதை தொடர்ந்து அவ்விரண்டு பெற்றோர் கிளிகளும் தினமும் பகல் முழுவதும் காடுகளில் பறந்து திரிந்து தங்களுடைய பிள்ளைகளுக்கு தேவையான உணவினை தேடிபிடித்து கொண்டுவந்த ஊட்டி வளர்த்துவந்தன அவ்வாறு தாங்கள் இரைதேட செல்லும்போது பத்திரமாக இருக்குமாறு தம்முடைய குஞ்சுகளுக்கு அறிவுரை கூறி செல்வது வழக்கமான செயலாக இருந்துவந்தது இந்நிலையில் இந்த கிளிகளின் போக்கினை அறிந்து கொண்ட வேடன் ஒருவன் பெரிய கிளிகள் இரண்டும் காடுகளில் உணவினை தேட புறப்பட்டபின்னர் கிளிக்குஞ்சுகள் இரண்டையும் மடக்கி பிடித்து எடுத்து சென்றான் அப்போது ஒரு கிளிக்குஞ்சு மட்டும் எப்படியோ தப்பி பிழைத்து ஓடிச்சென்றுவிட்டது அதனால் மற்றொன்றை மிகபத்திரமாக வீட்டிற்கு கொண்டுவந்த கூண்டு ஒன்று செய்து அதில் வைத்து வளர்த்து வந்தான் அந்த கிளிக்குஞ்சும் வளர்ந்து அவர்களுடன் பேசி பழக ஆரம்பித்தது தப்பித்த மற்றொன்று காடுகளில் அலைந்து திரிந்து அருகிலிருந்த ஆசிரமத்தின் சோலையில் குடியேறி அமைதியாக அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றி சுதந்திரமாக வாழ்ந்துவந்தது இந்நிலையில் வழிபோக்கன் ஒருவன் வேடன் வீட்டின் திண்ணையில் கால்நடையாக நடந்து வந்த களைப்பாறுவதற்காக உட்கார்ந்தபோது உடன் கூண்டில் இருந்த இளைய கிளியானது "முட்டாள் இங்கு ஏன்டா வந்தாய் நான் உன்னுடைய குரல்வலையை கடித்து குதறிவிடுவேன் எழுந்துபோடா" என மிரட்டியது இதனை கேள்வியுற்றதும் அந்த வழிபோக்கன் உடன் களைப்பாறுதலை அப்புறம் பார்த்து கொள்ளலாம் என எழுந்து சென்றான் அதன் பின்னர் அந்த வழிபோக்கன் ஆசிரமத்திற்கு அருகே வந்தபோது "வாருங்கள்ஐயா வணக்கம் ஐயா இந்த மரநிழலில் நீங்கள் நடந்து வந்த களைப்பை ஆற்றுக இங்குள்ள சோலைகளில் உங்களுக்கு பிடித்தமான கணினிகளை உண்டு பசியாறுக இங்கிருக்கும் சுனையின் நீரினை அருந்தி தாகத்தை போக்குக" என முகமலர்ந்து வரவேற்புஅளித்த இளைய கிளியை கண்ணுற்ற அந்த வழிபோக்கன் மிகவும் ஆச்சரியத்துடன் உன்னை போன்றே வேடனிடத்தில் இருக்கும் கிளிமட்டும் எவ்வாறு கரடுமுரடாக திட்டுகின்றது என வினவியபோது அவரவர்கள் வாழும் சூழலே இவ்வாறான நிகழ்விற்கு காரணம் என இந்த இளைய கிளிக்கூறியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக