செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

தடையெதுவும் இல்லையென்றாலும் ஏற்கனவே பட்ட அனுபவத்தால் தடைஇருப்பதாக கற்பனை செய்துகொண்டு வேறு வழிகளில் முயற்சித்திடாமல் விட்டுவிடுகின்றோம்


கடல்வாழ் உயிரிகளை ஆய்வுசெய்திடும் ஆராய்ச்சியாளர் ஒருவர் மீன்களையும் சுறாவினை பற்றியும் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டார் இந்த ஆய்விற்காக ஒரு பெரிய நீர்தொட்டியில் சுறா ஒன்றையும் பல சிறிய மீன்களையும் விட்டு வளர்த்தார் அதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் சிறியமீன்கள் அனைத்தையும் பிடித்து சாப்பிட்டு விட்டதால் தனியாக வேறு உணவு ஏதேனும் கிடைத்திடுமாவென அந்த மீன் தொட்டியில் அந்த சுறாவானது அலைந்து திரிந்து நீந்திகொண்டிருந்தது அதன்பிறகு ஆய்வாளர் அந்த பெரிய மீன்தொட்டியை கண்ணாடியிழையினால் தடுப்புசுவர்போன்று இரண்டாக பிரித்து அந்த தொட்டியின் ஒரு பகுதியில் இந்த சுறாவையும் மறுபகுதியில் பலசிறியமீண்களையும் விட்டுவளர்த்தார் அதன்பின்னர் மறுபுறம் இருந்த சிறிய மீன்களை உண்பதற்காக அந்த சுறாவானது பாய்ந்த சென்றது ஆனால் இடையிலிருந்த கண்ணாடி-யிழையிலான தடுப்புசுவர் அதனை தடுத்துவிட்டது பின்னர் அந்த கண்ணாடி இழைதடுப்புசுவர் அருகில் சிறிய மீன்கள் நீந்திவரும்போது அவைகளை பிடித்து உண்பதற்காக சுறாவானது மீண்டும் பாய்ந்த செல்லும் ஆனால் கண்ணாடியிழைலான தடுப்பு சுவரின்மீது சுறாவானது மோதி திரும்பிவிடும் அதனால் பக்கத்தில் இருக்கும் சிறியமீன்களை பிடித்து உண்ண முடியவில்லையேயென கோபமுற்று மீண்டும் வேகமாக பாய்ந்து சென்றபோது மீண்டும் கண்ணாடி இழை தடுப்பு சுவரானது சுறாவினை தடுத்து விடும் இவ்வாறே கடுமையாக அந்த சுறா முயன்றாலும் அந்தசுறாவினால் சிறிய மீன்களை பிடித்து உண்ணமுடியாத நிலை ஏற்பட்டது இதே போன்று அந்த சுறாவானது தினமும் சிறிய மீன்களை உண்பதற்காக பாய்ந்து சென்று முயன்று பார்த்தாலும் அந்த சிறிய மீன்களை பிடிக்கமுடியாமல் சோர்வுற்று அதன்பின்னர் அவ்வாறான முயற்சியையே கைவிட்டுவிட்டது அதனை தொடர்ந்து அந்த கண்ணாடி இழைக்கு அருகில் அந்த சிறிய மீன்கள் நீந்துவதும் இந்த சுறாவானது அதற்கருகில் அவைகளை பிடித்து தின்னமுடியாமல் நீந்துவதும் வழக்கமான செயலாகி விட்டது இதன்பின்னர் சிறிதுகாலம் கழித்து இடையிலிருந்த கண்ணாடியிழையிலான தடுப்புசுவரினை அந்த ஆய்வாளர் எடுத்துவிட்டார் என்ன ஆச்சரியம் அப்போதும் அந்தசிறியமீன்கள் அந்த சுறாவின் அருகிலேயே நீந்தி சென்றாலும் அவைகளை பிடித்து உண்ணாமல் அந்தசுறாவானது வாழ்ந்துவந்தது

இந்த சுறாவினை போன்றே நம்மில் பலரும் கடந்த காலத்தில் செய்த செயல்களில் ஏற்பட்ட பின்னடைவுகள் , தோல்விகள் ஆகியவற்றை அனுபவித்து வாழ்ந்துவந்ததால் எதிர்காலத்தில் குறிப்பிட்ட நிகழ்வினால் மீண்டும் நமக்கு அவ்வாறான தோல்வியே ஏற்படும் என நம்பி அந்த செயலை செய்வதற்கான வேறு வழிமுறையை காண முயற்சிக்காமல் அதற்கான முயற்சியையே கைவிட்டுவிடுகின்றோம் அதாவது நம்முடைய வாழ்வில் எந்தவொரு செயலிலும் தடையெதுவும் இல்லையென்றாலும் ஏற்கனவே பட்ட அனுபவத்தால் தடைஇருப்பதாக கற்பனை செய்துகொண்டு வேறு வழிகளில் முயற்சித்திடாமல் விட்டுவிடுகின்றோம் என்பதே எதார்த்தமான உண்மை நிலவரமாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...