திங்கள், 20 பிப்ரவரி, 2017

ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிடும் நண்பர்களாக வாழ்வதே சிறப்பானதாகும்


முற்காலத்தில் ஆடுகளை வளர்த்து வந்த குடியானவனும் காட்டிற்கு சென்று விலங்குகளை வேட்டைநாய்களை கொண்டு வேட்டையாடும் வேடனும் கிராமம் ஒன்றில் அருகருகே வாழ்ந்துவந்தனர் வேடனுடைய வேட்டைநாய்களானவை அவ்வப்போது ஆடுவளர்ப்பவனின் வீட்டு எல்லைக்குள் புகுந்து ஆட்டு குட்டிகளை கடித்து தின்று செல்வது வழக்கமான செயலாக இருந்துவந்தன அதனால் அந்த குடியானவன் பக்கத்து வீட்டிலிருந்த வேடனிடம் சென்று ஐயா உங்களுடைய வேட்டைநாய்களானவை எங்களுடைய வீட்டின் எல்லைக்குள் வந்து ஆட்டு குட்டிகளை அடித்து சாப்பிட்டுவிடுகின்றன என்னுடைய பிழைப்பே அந்த ஆட்டுகுட்டிகளை வளர்த்து பெரியஆடாக ஆக்கியபின் விற்பனைசெய்வதால் வரும் வருமானம் தான் நான் வயிறார சாப்பிடமுடியும் அதனால் தயவுசெய்து உங்களுடைய வேட்டைநாய்களை எங்களுடைய வீட்டிற்குள் வந்திடாமல் கட்டிவைத்திடுங்கள் என பலமுறை கூறியும் செவிடன் காதில் ஊதிய சங்குபோன்று அந்த வேடன் அந்த குடியானவன் கோரியவாறு செய்யாமலேயே இருந்துவந்தான் ஒரு நாள் வேட்டைநாய்கள் மிகவும் கொடூரமாக ஏராளமான ஆட்டுகுட்டிகளை அடித்து சாப்பிட்டதுமல்லாமல் வீணாக அடித்து போட்டுவிட்டும் சென்றன அதனால் இதற்கு ஒரு தீர்வு கண்டே ஆகவேண்டும் என அந்த கிராமத்தின் நீதிபதியிடம் சென்று முறையீடு செய்தார் அந்த குடியானவன் உடன் அந்த நீதிபதியானவர் சரி ஐயா பக்கத்து வீட்டுகார வேடன் உனக்கு எதிரியாகவேண்டுமா நண்பனாக வேண்டுமா எனக்கூறினால் அதற்கேற்ற தீர்வினை உனக்கு வழங்குவேன் எனக்கூறியதை தொடர்ந்து முடிந்தவரை நண்பனாக இருந்தால் நன்றாக இருக்கும் என அந்த குடியானவன் தன்னுடைய கருத்தினை கூறியதை தொடர்ந்து அந்த குடியானவன் காதில் இரகசியமாக அதற்கான தீர்வினை கூறி இதனை நடைமுறை படுத்தினால் நீங்கள் இருவரும் நண்பர்களாகிவிடுவீர்கள் எனஆலோசனை கூறி அனுப்பினார் அந்த குடியானவனும் தன்னுடைய வீட்டிற்கு வந்த மறுநாள் இரண்டு சிறிய ஆட்டுக்குட்டிகளை கையில் எடுத்து கொண்டு பக்கத்துவீட்டிற்கு சென்று அந்த வேடனின் பிள்ளைகளிடம் ஆளுக்கு ஒன்று கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தான் சிறிதுநேரத்தில் அந்த வேடனின் பிள்ளைகள் அந்த ஆட்டுகுட்டியுடன் விளையாடுவதில் ஒன்றி போய்விட்டன காட்டிற்கு வேட்டைக்கு சென்ற வேடனும் திரும்பி வந்த பார்த்தபோது பக்கத்து குடியானவனின் ஆட்டுகுட்டிகளுடன் தங்களுடைய பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் விளையாடுவதை கண்டு பெருமகிழ்ச்சியுற்றான் அதனை தொடர்ந்து தன்னுடைய பிள்ளைகளிடமிருந்த ஆட்டுகுட்டிகளை திண்பதற்கு பாய்ந்த சென்ற தன்னுடைய வேட்டைநாய்களை சங்கிலியால் கட்டிவைத்துவிட்டான் அதுமட்டுமல்லாது இத்தனை நாட்கள் நம்முடைய வேட்டைநாய்கள் பக்கத்து வீட்டு குடியானவனின் ஆட்டுக்குட்டிகளை அடித்து கொன்று சாப்பிட்டுவந்தாலும் அதனை பெரிய பகையாக எடுத்துகொள்ளாமல் நம்முடைய குழந்தை நாம் இல்லாதபோது பொழுதுபோக்காக விளையாடுவதற்கு தன்னுடைய ஆட்டுகுட்டியை கொடுத்து விளையாட செய்த குடியானவனின் பெருந்தன்மையை மெச்சி நாமும் அவ்வாறே ஏதாவது அந்த குடியானவனுக்கு செய்திடவேண்டும் என தான் வேட்டையாடும்போது கிடைத்த முயல்குட்டிகளை பக்கத்து வீட்டு குடியானவனுக்கு பரிசாக அளித்தான் அதன்பின்னர் இவ்விருவரும் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிடும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...