முன்னொரு காலத்தில் ஜான் எனும் அரசனொருவன் இங்கிலாந்தில் அரசாட்சி செய்து வந்தான் அவன் தன்னைத்தவிர இந்த உலகில் ஒப்பாரும் மிக்காருமான மிகப்பெரிய மனிதன் யாருமே இல்லை என்ற இறுமாப்புடன் அரசாட்சி செய்துவந்தான் இந்நிலையில் அரசசபையில் இருந்த அரசகுரு ஒருவர் மிக வசதி வாய்ப்புகளுடன் ஆடம்பரமாக வாழ்ந்துவந்தது இந்த அரசன் கவணத்திற்கு வந்தது அதனால் அரசனானவன் மிக கோபமுற்று தன்னுடையு படைவீரர்களை அழைத்து உடன் அந்த அரசகுருவை கைது செய்து அரசசபைக்கு அழைத்துவரும்படி உத்திரவிட்டார் அதனை தொடர்ந்து அவ்வாறே அந்த அரகுருவை அரசசபைக்கு படைவீரர்கள் அழைத்தவந்தபோது "இந்த நாட்டில் அரசன் பெரியவரா அரசகுரு பெரியவரா யார் மிகவும் உயர்ந்தவர் என கூறுங்கள் அரசனைவிட ஆடம்பரமாக அரசகுரு வாழமுடியமா அதனால் வருங்காலத்தில் இந்த நாட்டிற்கு நீங்கள் அரசனாக முடிசூட்டி கொள்வீர்களா அவ்வளவு உயர்ந்த இடத்திற்கு நீங்கள் சென்றுவிட்டீர்களா அவைக்காவலர்களே இவருடைய தலையை உடனே வெட்டி வீழ்த்துங்கள்" என உத்தரவிட்டார். உடன் அரசகுருவானவர் "மதிப்பிற்குரிய ஐயா என்னை மன்னித்துவிடுங்கள் அரசன்தான் இந்த உலகில் உயர்ந்தவன்" என பதில் கூறியதும் அரசன் "அவ்வாறு மன்னிப்பு அளிக்கவேண்டுமெனில் நான் கேட்கும் பின்வரும் மூன்று கேள்விகளுக்கான பதிலை உடன் கூறுமாறு அரசன் கேட்டார்
"என்னுடைய(அரசனுடைய) மதிப்பு எவ்வளவு பெறும்? இந்த உலகை நான் (அரசன்) எவ்வளவு நேரத்தில் சுற்றிவந்து சேரமுடியும்? தற்போது என்னுடைய(அரசனுடைய) மனதில் என்ன எண்ணுகின்றேன்?” உடன் அரசகுருவானவர் நான்குநாட்கள் காலஅவகாசம் கொடுத்தால் இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதாக வேண்டி கொண்டதை தொடர்ந்து அரசனும் நான்கு நாள் கால அவகாசத்தினை அனுமதித்தான் அந்த அரசகுருவும் மிகவும் சோர்வுற்ற மனநிலையில் வீடு திரும்பினான் பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ஆகிய வற்றின் நூலகங்களில் இந்த கேள்விகளுக்கான பதிலை தேடிஅலைந்தான் மேலும் இந்த பல்கலைகழகங்களில் பணிபுரிந்த பேராசரியர்களிடமும் ஆலோசனை கோரியபோது அவர்களாலும் அவைகளுக்கான பதிலை கூறமுடியுவில்லை மிகவும் மனமுடைந்து தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வரும் நிலையில் ஆடுமேய்த்திடும் இளைஞன் ஒருவன் குறுக்கிட்டான் "ஏன் ஐயா மிக மனவருத்ததுடன் இருக்கின்றீர்" என வினவியபோது தன்னுடைய இக்கட்டான நிலையை அவனிடம் அரசகுரு கொட்டிதீர்த்தார் மேலும் தன்னுடைய உயிருக்கு மிகுதி இரண்டுநாட்கள்தான் அவகாசம் இருப்பதாகவும் கூறினார் "கவலைப்படாதீர்கள் ஐயா உங்களுக்கு பதிலாக நான் அரகுருபோன்று வேடமிட்டு அரசன் கேட்ட மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதற்கு தயவுசெய்து என்னை அனுமதிப்பீர்களா" என ஆடுமேய்ப்போன் கோரியபோது எப்படியோ தன்னுடைய உயிர்தப்பினால் போதுமென அரசகுரு ஆடுமேய்ப்பவனை அவ்வாறே செய்திட ஏற்று அனுமதித்தார்
உடன் ஆடுமேய்த்திடும் இளைஞன் அரசகுருவின் ஆடையை அணிந்து கொண்டவுடன் அச்சுஅசல் அரசகுருபோன்றே தோற்றமளித்தான் அதன்பின்னர் ஆடுமேய்த்திடும் இளைஞன் அரசகுருவின் வேடத்துடன் அரச சபைக்கு சென்றான்
அரசன் இந்த அரசகுரு இவ்வளவு விரைவில் தன்னுடைய மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதற்காக வந்துசேரவார் என எதிர்பார்த்திடவில்லை வந்தவன் அரசகுருவா வேறுயாராவது அரசகுருபோன்று வேடமிட்டுவந்தாரா எனவித்தியாசம் எதுவும் தெரியாமல் அரசனானவன் "ரொம்ப மகிழ்ச்சி அரசகுருவே நீங்கள் வாக்களித்தவாறே விரைவாக அரசசபைக்கு என்னுடைய மூன்று கேள்விகளுக்கான பதிலை கூறுவதற்கு வந்துள்ளீ்ர்கள்" என வரவேற்றபோது "ஆம் மேன்மைமிகு ஐயா அவர்களே என்னால் முடிந்தவரை அந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களை கூறுவதற்கு முயற்சிக்கின்றேன்" என கூறினான்
"நான் இந்த இங்கிலாந்து நாட்டின் அரசன் என்னுடைய(அரசனுடைய) மதிப்பு எவ்வளவு பெறும்?” என அரசன் தன்னுடைய முதல் வினாவினை எழுப்பினார்
உடன் அரசகுருவேடத்தில் இருந்த ஆடுமேய்ப்போன் "மேன்மைமிக்க ஐயா பைபிளின் படி இயேசுவானவர் இம்மூலகத்திற்கும் அரசனாவார் அவரை விற்பனை செய்தால் முப்பது ரூபாய் பெறுவார் உங்களுடைய மதிப்பு இயேசுவின் மதிப்பில் ஒருரூபாய் குறைவாகும் அதனால் இங்கிலாந்து நாட்டின் அரசனாகி தாங்கள் வெறும் 29 ரூபாய்தான் பெறுவீர்" என பதில் கூறினான்
உடன் அரசன் "அடடா என்னுடைய மதிப்பு வெறும் 29 ரூபாய்தானா" என சிரிக்கஆரம்பித்தான் சிரிப்பு அடங்கியபின்னர் "என்னுடைய இரண்டாவது கேள்வி இந்த உலகை நான் (அரசன்) எவ்வளவு நேரத்தில் சுற்றிவந்து சேரமுடியும்?” என்பதை எழுப்பினான்
உடன் அரசகுருவேடத்தில் இருந்த ஆடுமேய்ப்போன் "மேன்மைமிக்க ஐயா சூரியன் உதிக்கும்போது இந்த உலகை சுற்ற ஆரம்பித்து நாள் முழுவதும் சுற்றிவந்த பின்னர் இரவு முழுவதும் சுற்றிவந்து மறுநாள் காலை சூரியன் தோன்றும் நேரத்தில் அதாவது 24 மணிநேரத்திற்குள் இந்த உலகை சுற்றிவந்து விடுவீர்கள் ஐயா" என பதில் கூறினான்
உடன் அரசன் "வெறும் 24 மணிநேரத்திற்குள்ளாகவே நான் இந்த உலகை சுற்றிவந்து-விடுவேனா அடடா வித்தியாசமான பதிலாக இருக்கின்றதே" என விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான் அரசனுடைய சிரிப்பு நின்றபின் "என்னுடைய மூன்றாவது கேள்வியாக தற்போது என்னுடைய (அரசனுடைய) மனதில் என்ன எண்ணுகின்றேன்?” என கேட்டான்
உடன் அரசகுருவேடத்தில் இருந்த ஆடுமேய்ப்போன் "மேன்மைமிக்க ஐயா தற்போது தாங்கள் உண்மையில் நான் அரசகுருதான் என எண்ணுகின்றீர்கள் ஆனால் உண்மையில் நான் அரசகுரு அன்று சாதாரண ஆடுமேய்த்திடும் ஒரு இளைஞன் எனக்காக அரசகுருவை மன்னித்திடும்படி மிகபபணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்" எனக்கூறி தன்னுடைய அரசகுருவாக உருமாற்றம் செய்த உடைகளை களைந்து சாதாரண ஆடுமேய்த்திடும் இளைஞனின் உடைக்கு மாறியிபின் அரசனை வணங்கினான்
அரசன் தற்போது கோபமெதுவும் ஏற்படாமல்மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்
நீண்ட சிரிப்பிற்கு பின்னர் "தம்பி உன்னுடைய அறிவுத்திறனை நான் மெச்சுகின்றேன் நான் இன்றுமுதல் உன்னை அரசகுருவாக நியமிக்கின்றேன்" எனக்கூறியதை தொடர்ந்து "ஐயா நான் எழுதவும் படிக்கவும் தெரியாத சாதாரண ஆடுமேய்ப்பவன் அதனால் நான் அரசகுருவாக செயல்படமுடியாது என்னை மீண்டும் மன்னித்துவிடுங்கள்" என கோரினான்
உடன் அரசன் "பரவாயில்லை இன்றுமுதல் நீ உயிர்வாழும்வரை வாரத்திற்கு ஒருஇலட்சம் ரூபாய் அரசு ஊதியமாக பெறுவாய் உன்னுடைய இருப்பிடத்திற்கு நீ செல்லலாம் அரசகுருவை நான் மன்னித்ததாக கூறு அவரை அரசசபைக்கு வரச்சொல் " என விடை கொடுத்தனுப்பினான் அரசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக