ஒருநாள் ஆமையும் யானையும் எதிரெதிரே சந்திக்கொண்டன அதனால் யானையானது எகத்தாளமாக, " நீ மிகச்சிறியவன் என் வழியில் நீ குறுக்கிட்டுவிட்டாய் அதனாள் என்னுடைய ஒரு காலடியினால் நான் உன்னை நசுங்கிவிடுவேன் ." என மிரட்டியது இருந்தபோதிலும் அந்த ஆமையானது பயப்படாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தது யானையானது ஆமையை நோக்கி வந்தாலும் மிதிக்காமல் தான்டிச்சென்றது ஆனாலும் ஆமையானது யானையை பார்த்து " ஐயா யானையாரே உங்களுடைய உருவத்தை வைத்து பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டாம், நானும் உன்னைப் போல வலுவாக இருக்கிறேன்!" என்று சொன்னது, அதனால் யானையானது ஆமையை பார்த்து
" என்ன நீ என்னைபோன்ற பலசாலியாக இருக்கின்றாயா" என சிரித்தது. எனவே ஆமையானது யானையாரை பார்த்து அடுத்தநாள் தான் வாழும் மலைக்கு வந்தால் இருவரிலும் யார் வலுவானவர் என போட்டியிட்டு வெற்றிபெறுவதை வைத்து முடிவுசெய்யலாம் என சவால் விட்டது ஆமையின் அந்த சவாலை யானையாரும் ஏற்றுக்கொண்டது இதனிடையே அந்த ஆமையானது அந்த மலைக்கும் கீழ்பகுதியில் ஓடும் ஆற்றில் நீர் யானைவாழ்ந்துவந்தது அதனிடம் சென்று நான் உன்னை போல் வலுவானவனாக இருக்கிறேன் என்று! "ஆமை கூறி யது உடன் அந்த நீர்யானை அதனை கேட்டு சிரித்து உடன் நாம் இருவரில் யார்வலுவானவர் என நமக்குள் கயிறு இழுக்கும் போட்டியொன்றை வைப்போம் அதில் வெற்றி பெறுவது யார்என முடிவுசெய்திடுவோம் என ஆமையானது நீர்யாணையை போட்டிக்கு அழைத்தது அந்த போட்டியை நீர்யாணையும் ஏற்றுக்கொண்டது மறுநாள், சூரிய உதயத்திற்கு முன், அந்த ஆமை மலைக்கு கீழே ஆமை சென்றது பின்னரி ஒரு நீண்ட கயிறில் முடிச்சிட்டு இதனை உன்னுடைய வாயால் பிடித்துகொள் நான் மலையின் மேல்பகுதிக்கு சென்று தயார் எனக்கூறியவுடன் இந்த கயிற்றினை உன்வாயால் பிடித்து இழுத்து கொண்டிரு நான் விடுஎன கூறியவுடன் விட்டிடு என நீர்யானையை பார்த்து க்கூறி மலையின் மேல்பக்தியில் யானை நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்தது அங்கு அந்த யானையிடமும் மலையின் கீழ்பகுதியிலிருந்து இணைத்து கொண்டுவந்த கயிற்றின் மற்றொருமுனையை அதனிடம் கொடுத்து தான் மலையின் கீழ்பகுதிக்கு சென்று தயார் எனக்கூறியவுடன் இந்த கயிற்றினை உன்வாயால் பிடித்து இழுத்து கொண்டிரு நான் விடுஎன கூறியவுடன் விட்டிடு எனக்கூறிய பின் மலையின் கீழ்பகுதிக்கு ஓடிச்சென்றது பாதிதூரம் வந்தவுடன் தன்னை கீழேயிருந்து நீர்யானையும் மேலேயிருந்து யானையும் பார்க்கமுடியாதவாறு மறைந்து நின்று கொண்டு தயார் எனக்கூறியது உடன் யானையும் நீர்யானையும் அந்த கயிற்றின் இருமுனைகளையும் தங்களுடைய வலுவனைத்தும் சேர்த்தும் இழுத்துபார்த்தன ஆயினும் கயிற்றினை இழுத்து மற்றமுனையில் இருப்பவரை தோல்வியுற செய்யமுடியவில்லை இந்நிலையில் விடடிடு என ஆமைகூறியதும் அவையிரண்டும் இழுப்பதை அப்படியே விட்டிட்டன அதனை தொடர்ந்து அவை தங்களுடைய தோல்வியை ஒத்துகொண்டு ஆமையே தங்களைவிட வலுவானதுஎன ஒப்புக்கொண்டன
இவ்வாறு குறுக்குவழியில் வெற்றியடைய திட்டமிடுபவர்கள் இந்த ஆமையை போன்றே தம்முடைய குறுக்குவழிபுத்தியினால் நம்முடைய சக்திகளை / முயற்சிகளைத் திருடுவார்கள் / பயன்படுத்துவார்கள். அவ்வாறானவர்களால் நாம் பாதிக்கபடாமல் சரியான வழியில் நம்முடைய திறமையையும் அதிகாரத்தையும் நிரூபிக்க கற்றுக்கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக