சனி, 26 மே, 2018

யாரையும் அலட்சியமாக எண்ணி தீங்குசெய்தால் அதற்கான பாதிப்பு கண்டிப்பாக எதிர்கொள்ளவேண்டியிருக்கும்


ஒரு நகரத்தின் கடைத்தெருவில் ஒரு கடையும் அதனருகில் குடிசையொன்றும் இருந்தன அந்த கடைமுதலாளி நம்முடைய பெரிய கடைக்கு பக்கத்தில் இந்த ஒலைக்குடிசை இருப்பதால் நம்முடைய கடையின் தோற்றமும் நன்றாக இல்லை வியாபாமும் சரியாக நடைபெறவில்லை அதனால் இந்த குடிசையை எப்படியாவது காலி செய்யவேண்டும் எனஅந்த குடிசையில் வாழும் வயதானவரை அழைத்து தான் அந்தகுடிசையை விலைக்குவாங்க விரும்புவதாகவும் அந்த வயதானவரின் விருப்பத்தை கோரினார் அவர் மறுநாள் தன்னுடைய விருப்பத்தைகூறுவதாக சென்றுவிட்டார் மறுநாள் கடைகாரரின் சூழ்ச்சியை தெரிந்து கொண்டு சரி தம்பி இந்த குடிசையை விற்றுவிடுகின்றேன் அதற்கான தொகை எவ்வளவு தருவாய் என்றார் தற்போதை இதனுடைய மதிப்பு இரண்டுரூபாய்தான் பெறும் அதனை உடனே வாங்கி கொள் என மிரட்டுவது போல் பதிலிருத்தார் கடைகாரர் சரிதம்பி அந்த தொகையை எனக்கு இப்போது தரவேண்டாம் நீயேவைத்து கொண்டு நான் நாடுபூராவும் இருக்கும் கோவில்களுக்கு கால்நடையாக சென்று திரும்பி வரும்போது அந்த தொகையை ஒவ்வொரு ஆறுமாதத்திலும் கையிலிருக்கும்தொகையின் இருமடங்காக உயர்த்தி கொண்டேவந்து நான் கோரும்போது அன்றைய நாளின் தொகை. கொடுக்க வேண்டும் அதற்காக 10ரூபாய் முத்திரைதாளில் ஒப்பந்தம் எழுதி பதிவுசெய்து தர வேண்டும் எனஅந்த வயாதனவர் கோரியதை ஏற்று உடன் 10ரூபாய் முத்திரைதாளில் ஒப்பந்தம் எழுதி பதிவுசெய்துநகலை பெரியவர்கையில் கொடுத்த விட்டார் அந்த ஏழைவயதானவரும் நாடுகளில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு நடைபயனமாக சென்றுவிட்டார் பன்னிரண்டு ஆண்டு கழித்து அந்த வயது முதிர்ந்த முதியோர்அந்த நகரத்திற்கு வந்து தன்னுடைய குடிசையை வாங்கிகொண்ட கடைகாரரிடம் வந்த தம்பி ஒப்பந்தபடி நான் கொடுத்த தொகையை ஒவ்வொரு ஆறுமாதத்திற்கும் இரண்டுமடங்காக உயர்த்தி கணக்கிட்டு வழங்கிடு என கோரியபோது கடைகாரர் மொத்தம் பன்னிரண்டு ஆண்டு ஒவ்வொரு ஆறுமாதத்திற்கும் இரண்டுரூபாய்என கணக்கிட்டால் 25 X 2 = ரூபாய் 50 தான் வருகின்றது இந்தாங்க ஐயா 500 ரூபாய்என வழங்கினார் ஆயினும் அந்த முதியவர் தம்பி சரியாக கணக்கிட்டால் ஒருகோடியே அறுபத்தேழுஇலட்சத்து ஏழுபத்தேழாயிரத்து இருநூற்று பதினாறு ரூபாய் நீதரவேண்டி வருகின்றது ஒப்பந்தபடி அந்த தொகையை நீகொடுக்கவேண்டும் என கோரினார் அவ்வளவு தொகை என்னால் தரமுடியாது என அந்த கடைகார்ர் மறுத்தார் அதனால் முதியவர் அந்த கடைகாரர் ஒப்பந்தபடி தொகை தரவில்லை என நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார் உடன் கடைகார்ர் தன்னுடைய கடைவீடு ஆகியவற்றை விற்பணைசெய்தது மட்டுமல்லாமல் தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் விற்றுவந்த தொகை அனைத்தையும் நீதிமன்றத்தில் செலுத்தினார் அப்போதும் அந்த கடனை தீர்வுசெய்திடமுடியாமல் தத்தளித்தார் அதனால் யாரையும் அலட்சியமாக எண்ணி தீங்குசெய்தால் அதற்கான பாதிப்பு கண்டிப்பாக எதிர்கொள்ளவேண்டியிருக்கும்

ஞாயிறு, 13 மே, 2018

இந்திய ஆட்சி பணிக்கான நேர்முகத்தேர்வு


இந்திய ஆட்சி பணிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது அதில் இரு இளைஞர்கள் கலந்துகொண்டனர் தேர்வுக்குழு உறுப்பினர்கள் முதல்இளைஞனைஅழைத்து இந்தியாஎப்போது சுதந்திரம் அடைந்தது என்றகேள்வியை கேட்டனர் உடன் அந்த முதல் இளைஞன் அதற்காகமீகநீண்டநாட்களாக போராடவேண்டயிருந்து இறுதியில்அதிக சிரமத்துடன் 1947 இல் கிடைத்தது என பதிலிறுத்தார் அடுத்ததாக இந்தியசுதந்திரத்திற்காக யார்அதிகபாடுபட்டார்அந்த தலைவரின் பெயர் என்னஎன தேர்வாளர்கள் வினவினர் அந்தமுதல் இளைஞன் இந்தியசுதந்திரத்திற்காக பலர் அரும்பாடுபட்டனர் அவர்களுள் ஒருவர் பெயரைமட்டும் கூறினால் மற்றவர்கள் இந்திய சுதந்திரதிற்காக பாடுபடவில்லையாஎன்ற கேள்வி யெழும்அதனால் அனைவரும் அரும்பாடுபட்டனர் எனபதிலிறுத்தார் மூன்றாவதாக கையூட்டு பெறுவதுதான் இந்திய பொருளாதாரத்தின் மிகமுக்கிய எதிரியா எனவினவினர் தேர்வாளர்கள் உடன் முதல்இளைஞன் ஐயா இந்தகையூட்டு புகார்குறித்து ஆய்வுசெய்து அறிக்கைதருமாறு குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளதுஅந்த குழுவின்அறிக்கை கிடைத்தபின்னர் மட்டுமேஅதற்கானவிடையைஉறுதியாக கூறமுடியும் என கூறினார் தேர்வாளர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் முதல் இளைஞர் கூறியபதிலால் திருப்தியுற்று தம்பி வெளியேகாத்திரு மேலும் இந்த விவாதத்தை மற்றயாருக்கும் வெளியிடாதே என்ற உறுதியளிப்புடன் அனுப்பினர் வெளியவந்த முதல் இளைஞனை இரண்டாவது இளைஞன் தேர்வாளர்கள் எந்தெந்த கேள்விகேட்டனர் அதற்கு முதல்இளைஞன் கூறிய பதிலை கூறுமாறுமிகவம்வற்புறுத்திக தெரிந்து கொண்டார் பின்னர் இரண்டாவது இளைஞரை உள்ளே அழைத்தனர் இரண்டாமவரிடம் நீஎப்போது பிறந்தாய்எனகேட்டனர் உடன் இரண்டாவது இளைஞன் ஐயா அதற்காகமிகவும் கடுமையாக போராடினார்கள் இருந்தபோதிலும்இறுதியாக 1947 இல் நான் பிறந்தேன் எனபதிலிருத்தான் இந்த பதிலாள் தேர்வாளர்கள் குழம்பிவிட்டனர் சரிதம்பி உன்னுடைய தந்தையின் பெயர் என்ன என தேர்வாளர்கள் கேள்விகேட்டனர் உடன்ஐயா அதற்காகபலர்அரும்பாடுபட்டனர்அவர்களுள் ஒருவரின்பெயரை கூறினால் மற்றவர்களுக்கு துரோகம் செய்தவனாவேன்அதனால்பலரும் அரும்பாடுபட்டனர்எனஇரண்டாமவன் பதிலிறுத்தவுடன் தேர்வாளர்கள அனைவரும் மிகஅதிர்ச்சியாக ஒருவர்முகத்தை மற்றொருவர் பார்த்து கொண்டனர் இறுதியாக சரி தம்பி உனக்குபுத்தி தெளிவாகஇல்லையா என கேட்டனர் உடன் ஐயாஇந்த புகார்குறித்து ஆய்வுசெய்து அறிக்கைதருமாறு குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளதுஅந்த குழுவின்அறிகைகிடைத்தபின்னர் மட்டுமே அதற்கானசரியான விடையைஉறுதியாக கூறமுடியும் எனகூறினார் இதனை கேளவியுற்ற அனைத்து தேர்வாளர்களும் மிகவும் அதிர்ச்சியுடன் அப்படியே சிலைபோன்றஅமர்ந்துவிட்டனர்.

ஞாயிறு, 6 மே, 2018

மற்றவர்களை பற்றி அவர்கள் இல்லாதபோது புறங்கூறுவதை விட்டிடுக


ஒரு பள்ளியில் பயிலும் மாணவன் அம்மாணவனுடைய ஆசிரியரும் சேர்ந்து பள்ளிக்கு அருகிலிருந்த பூங்காவில் வழக்கம்போன்ற விவாதித்துகொண்டு காலாற நடந்து சென்றுகொண்டிருந்தனர் அப்போது அம்மாணவன் தன்னுடைய ஆசிரியரிடம் "ஐயா நான் என்னுடைய நண்பர்களை பற்றி அவர்கள் இல்லாதபோது அவர்களைபற்றிய குறைகளை விவாதிக்கும் மனநிலை எப்போதும் எனக்கு ஏற்படுகின்றது இதனை நான் எவ்வாறு தவிர்ப்பது என எனக்கு அறிவுரை கூறுங்கள்" எனக்கோரினான் ஆசிரியர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்த பின்னர், 'தம்பி நீ கைபேசி வைத்திருக்கின்றாயா?'எனவினவினார் உடன் அந்த மாணவன் தனது கைபேசியை எடுத்துஆசிரியரிடம் காண்பித்தான். அது சமீபத்தில் வெளியிடப்பட்ட மாதிரிகளில் ஒன்றாகும்.அம்மாணவன் அந்த கைபேசியை அதிகமாக நேசித்தான் பின்னர் ஆசிரியர் மாணவனிடம், அந்த கைபேசியை அருகிலுள்ள சேற்றுப் பகுதியில் தூக்கி வீடிஎறிந்திடுமாறு கூறினார். அவ்வாறான ஆசிரியரின் ஆலோசனையை கேள்வியுற்றதும் அதிர்ச்சி அடைந்த மாணவன், 'அதுஎப்படி ஐயா நான் அதிகம நேசிக்கும் புதியதாக வாங்கிய என்னுடையகைபேசியை சேற்றில் தூக்கி எறிய முடியும்? இதனை நான் அதிக பணம் செலவழித்து வாங்கினேன் ' என அந்த மாணவன் பதிலிறுத்தான் அதனை தொடர்ந்து ஆசிரியர் 'தம்பி உன்னுடைய நண்பர்களின் மரியாதையும் கூட மற்றவர்களுடைய பார்வையில் சிறந்ததாகவும் மதிப்புமிக்கதாகவும் இருக்கிறது. அதனை எவ்வாறு எளிதாகக் குறைக்க முடியும்? ' அதனால் அவ்வாறு மற்றவர்களை பற்றி அவர்கள் இல்லாதபோது புறங்கூறுவதை விட்டிட்டு நல்ல மாணவனாக நடந்து கொள்அப்போதுதான் உன்னைபற்றியும் மற்றவர்கள் மரியாதை குறைவாக நடத்தாமல் இருப்பார்கள் என அறிவுரைகூறினார் அதன்பின்னர் அம்மாணவன் மனந்திருந்தி அவ்வாறு புறங்கூறுவதை அறவே தவிரத்து வந்தான்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...