ராமு எனும் பத்து வயது சிறுவன் அவனுடைய பெற்றோருக்கு ஒரேயொரு மகனாவான் ஆயினும் தினமும் ராமு விழித்தெழுமுன் அவனுடைய தந்தை தன்னுடைய வியாபார நிறுவனத்தை நிருவகிக்க சென்றுவிடுவார் அதனை தொடர்ந்து இரவு ராமு தூங்கிய பின்னரே மீண்டும் திரும்பி வீடுவந்துசேருவார் ஒரு நாளாவது தன்னுடைய தந்தையுடன் மாலைநேரத்தில் சேர்ந்து விளையாடலாம் என ராமு நீண்டநாட்களாக ஏங்கி கொண்டிருந்தான் ஆனால் அதற்கான வாய்ப்பே இதுவரையில் கிடைக்கவேயில்லை
ஆனால் ஒருநாள் மட்டும் மிக உலகமகா அதிசயமாக ராமுபள்ளிமுடிந்து வீடுவந்து சேரும்போது அவனுடைய தந்தையானவர் வீட்டில் இருந்தார் "அப்பா இந்த மாலை நேரத்தில் நான் உங்களை நம்முடைய வீட்டில் பார்ப்பது மிக அதிசயமாக இருக்கின்றதே" என வினவினான் ராமு "ஆமாம் ராமு இன்று நான் கலந்து கொள்ளவேண்டிய குழுக்கூட்டம் ரத்துசெய்யப்பட்டது அதனால் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன் ஆனாலும் இன்னும் ஒருமணிநேரத்தில் நான் திருச்சிக்கு செல்லும் விமானத்தை பிடிக்கவேண்டும் அதனால் தேவையான பொருட்களை எடுத்து செல்லவீட்டிற்கு வந்தேன்" என அவனுடைய தந்தையானவர் பதிலளித்தார் தொடர்ந்து ராமு"நீங்கள் திருச்சியில்இருந்து எப்போது திரும்பி வருவீர்கள்?"என வினவியபோது அவனுடைய அப்பா "நாளை மதியம்." என பதில் கூறினார் ராமு சிறிதுநேரம் ஆழ்ந்த சிந்தனையுடன் இருந்தபின்னர் , "அப்பா, நீங்கள் ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?" என்று ராமு கேட்டான்.
இதனை கேட்டவுடன் ராமுவின் அப்பாவானவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இருந்தபோதிலும், " மகனே, அது மிகப்பெரிய தொகை, அதை உன்னால் கணக்கிட்டு புரிந்து கொள்ள முடியாது." என அவனுடைய அப்பா ராமுவிற்கு விளக்கமளித்தார் தொடர்ந்து"சரி அப்பா, நீங்கள் சம்பாதிக்கும் அளவுக்கு சந்தோஷமாக இருக்கிறீர்களா?" என ராமு மீண்டும் தன்னுடைய அப்பாவிடம் வினவினான் அதனைதொடர்ந்து "ஆம் மகனே. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மையில் ஒரு சில மாதங்களுக்குள் நம்முடைய நிறுவனத்தின் புதிய கிளையொன்றை திருச்சியில் துவங்க திட்டமிட்டுள்ளேன் அதற்கான முன்னேற்பாடு செய்வதற்காகத்தான் இன்று திருச்சி செல்லவிருக்கின்றேன் பணிமுடிந்து நாளை மாலைவீடு திரும்பலாம் என திட்டமிட்டிருக்கின்றேன் மேலும் ஒரு புதிய வியாபாரத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன். அது பெரிதல்லவா? "என ராமுவின் தந்தை விளக்கமாக கூறினார்
உடன் "ஆமாம், அப்பா. அதை கேட்க மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனாலும் நான் இன்னும் ஒரு கேள்வி மட்டும் உங்களிடம் கேட்கலாமா? " என தனது தந்தையிடன் ராமு கோரிக்கை வைத்தான் ராமுவின் தந்தை "அதற்கென்ன மகனே தாராளமாக என்னிடம் நீ கேள்வி கேட்கலாம் ." என பதிலிறுத்தார்
அதனை தொடர்ந்து "அப்பா, நீங்கள் நாளொன்றிற்கு எவ்வளவு சம்பாதிக்கமுடியும் ?" என்ற வினாவினை அவனுடைய தந்தையிடம் வைத்தான் உடன் அவனுடைய தந்தையானவர் மிகவும் தடுமாறி"ராமு, நீ ஏன் இந்த கேள்வியை கேட்கிறாய்?" என பதில்கேள்வி கேட்டார்
ராமு தொடர்ந்து . "தயவுசெய்து .நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள் என்றாவது என்னிடம் சொல்ல முடியுமா? "எனகேட்டான் அதனால் ராமுவின் தந்தையானவர், "ஒரு மணி-நேரத்திற்கு சுமார் ரூ.250 / இருக்கலாம் மகனே." என பதில் கூறினார் அதனை தொடர்ந்த ராமு விறுவிறுவென வீட்டின் மாடியில் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு ஓடிச்சென்று சேமிப்பு உண்டியலை கையில் எடுத்து கொண்டு திரும்பிவந்து அதனை திறந்து எவ்வளவு சேமிப்பு என எண்ணிய போது ரூ500 இருந்தது
இந்தாருங்கள் அப்பா என அந்ததொகையை அவனுடைய அப்பாவிடம் கொடுத்து நீங்கள் இரண்டுமணிநேரத்தில் சம்பாதிக்கும் தொகை இது அப்பா நான் இப்போதே உங்களுக்கு முன்பணமாக கொடுத்துவிட்டேன் நாளை மாலை திருச்சியில் இருந்துவந்தவுடன் இரண்டுமணிநேரம் மட்டும் மெரினா கடற்கரைக்கு என்னுடன் வந்து என்னுடன்சேர்ந்து விளையாடமுடியுமா சேர்ந்து இரவு உண்ணமுடியுமா உங்களுடைய நாளைய நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் என்னுடன் சேர்ந்து இருப்பதற்கும் விளையாடுவதற்கும் நேரம் ஒதுக்கமுடியுமா என கோரிக்கை வைத்தான் ராமு
அதை கேட்டவுடன் ராமுவினுடைய அப்பாவானவர் அப்படியே அயர்ந்து அமர்ந்துவிட்டார் தொடர்ந்து "மகனே நாளை என்ன இன்றே மெரினா கடற்கரைக்கு நாம் அனைவரும் செல்வோம்" என தன்னுடைய திருச்சி செல்லும் முடிவை வேறொரு நாளைக்கு ஒத்திவைத்து விட்டார் ஆம் நாம் எப்போதும் பணம் பணம் என அலைந்து கொண்டிருக்கின்றோமே தவிர நம்முடைய பிள்ளைகளுடன் குடும்பத்தாருடன் ஒருநாள்கூட சேர்ந்து இருப்பது மிகஅபூர்வமான செயலாகிவிட்டது பணத்தினால் உலகில்உள்ளஅனைத்தையும் வாங்க முடியாது! என்ற உண்மைநிலைய மனதில் கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக