சனி, 16 நவம்பர், 2019

மற்றவர்கள் ஏமாற்ற முயற்சிக்காதீர்கள்


ஒருகிராமத்து விவசாயி ஒருவர் தனது நிலத்திலிருந்த கிணற்றை மற்றொரு விவசாயிக்கு விற்றார். அடுத்த நாள் அந்த கினற்றினை வாங்கிய விவசாயி ஆனவர் தன்னுடைய நிலத்தில் இருந்த பயிர்களுக்கு தண்ணீரை பாய்ச்சுவதற்காக அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்கச் சென்றபோது, கினற்றை விற்ற விவசாயி ஆனவர் அந்தகினற்றிலிருந்து தண்ணீரை எடுக்க அனுமதிக்கவில்லை. மேலும் அதற்கான காரணமாக அவர் , "நான் உங்களுக்கு கிணற்றை மட்டுமே விற்றேன், அதிலிருக்கும் தண்ணீரை அல்ல, எனவே நீங்கள் இந்த கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க முடியாது." என்ற கூறினார் இதனால் அந்த கினற்றைவாங்கிய விவசாயி மிகவும் சோகமாகி பேரரசர் அக்பரிடம் சென்று நிகழ்வுகள் அனைத்தையும் விவரித்து கூறி தனக்கு நீதி கேட்டார். உடன் பேரரசர் தன்னுடைய மதியூக மந்திரியான பீர்பாலிடம் ஒப்படைத்து அதற்கு தக்கதீர்வு காணுமாறு உத்திரவிட்டார் . கிணற்றை விற்ற நபரை பீர்பால் அழைத்து, “கிணற்றின் தண்ணீரை ஏன் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. அந்த கிணற்றை மற்றொரு விவசாயிக்கு விற்றுவிட்டீர்கள். அல்லவா ” என கேட்டார் உடன் கினற்றை விற்ற நபர்,“ ஐயா, நான் கிணற்றை மட்டுமே விவசாயிக்கு விற்றேன், அதிலுள்ள தண்ணீர் அல்ல. அதனால் அந்த கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க அவருக்கு உரிமை இல்லை. ” என பதில்கூறினார் அதனை தொடர்ந்து பீர்பால் புன்னகைத்து , “நல்லது, ஆனால் பாருங்கள், நீங்கள் இந்த விவசாயிக்கு கிணற்றை மட்டுமே விற்றுள்ளீர்கள், தண்ணீர் உங்களுடையது என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்பதால், உங்கள் தண்ணீரை அந்த விவசாயியின் கிணற்றில் வைத்திருக்க உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் தண்ணீரை அவரது கிணற்றில் வைத்திருக்க விவசாயிக்கு நீங்கள் வாடகை செலுத்தவேண்டும், அல்லது அந்த தண்ணீரை உடனடியாக அவருடைய கிணற்றிலிருந்து வெளியே எடுத்து கொள்ளவேண்டும். ” என தீர்ப்புகூறினார் இவ்வாறு பீர்பால் தீர்ப்பு கூறியதும் கினற்றை விற்றவர் தான் மிகவும் சிக்கலில் மாட்டிகொண்டதை அறிந்து கொண்டு தான்இனி அந்த கினற்றை விற்றவருடன் தகராறு செய்து தண்ணீர் எடுப்பதை தடுக்கமாட்டேன் ஒத்துகொண்டார் நீதி :மற்றவர்கள் ஏமாற்ற முயற்சிக்காதீர்கள். நாம் எவ்வளவு புத்திசாலி என்று நினைத்தாலும் அதற்காக விலை செலுத்தவேண்டியிருக்கும் என்பதை கவணத்தில் கொள்க.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...