முன்னொரு காலத்தில் மரம்வெட்டிடும் தொழிலாளி ஒருவர் மரவியாபாரியிடம் தனக்கு மரங்களை வெட்டிடும் பணிவழங்கும்படி கோரினார் அந்த தொழிலாளி நல்ல திறனுடைய வர் என்பதால் மரவியாாரியும் தன்னுடைய வியாபாரத்திற்கு தேவையான மரங்களை வெட்டிடுவதற்காகஅந்த மரம்வெட்டும் தொழிலாளியை பணியில் அமர்த்தி மரம் வெட்டுவதற்கான கோடாளி ஒன்றினை கொடுத்து அன்று காட்டில் குறிப்பிட்ட பகுதியில் மரம்வெட்டிடும் பணியை முடிக்குமாறும் சாயுங்காலம் எவ்வளவு மரம் வெட்டுகின்றாரோ அதற்கேற்ப கூலி வழங்கபெறும் என உத்திரவிட்டார் அதனை தொடர்ந்து அந்த மரம் வெட்டிடும் தொழிலாளி நாள்முழுதும் பாடுபட்டு 20 மரங்களை வெட்டி முடித்து தன்னுடைய முதலாளியிடம் அதனை காண்பித்தார் மரவியாபாரியும் ஆஹா பரவாயில்லையே இன்று 20 மரங்களை வெட்டியுள்ளாயே வாழ்த்துகள் இதேபோன்று தினமும் உன்னுடைய பணி நன்றாக இருக்கவேண்டும் என பராட்டி அன்றைய மரம் வெட்டியதற்கான கூலியை கொடுத்தனுப்பினார் மறுநாள் அந்த தொழிலாளி முதல்நாளைவிட கடுமையாக முயன்றும் 18 மரங்களை மட்டுமே வெட்டிமுடித்திடமுடிந்தது அன்றைய நாள் முடிவில் வியாபாரியும் பரவாயில்லை இன்னும் சிறிது முயற்சிசெய்திருக்கலாம் என கூறிஇரண்டாம் நாள் மரம் வெட்டியதற்கான கூலியை கொடுத்தனுப்பினார் இவ்வாறு அடுத்தடுத்த நாட்களிலும்அந்த தொழிலாளி வெட்டிடும் மரங்களின் எண்ணிக்கையானவை இரண்டிரண்டாக குறைந்து கொண்டே வந்து அந்தவாரம் முடிவில் எவ்வளவுதான் மிககடினமாக முயன்று பணிபுரிந்தாலும் அந்த மரம்வெட்டிடும் தொழிலாளியால்8 மரங்களை மட்டுமே வெட்டிமுடிக்க முடிந்தது அதனால் அன்று அந்த மரவியாபாரி என்னதம்பி தினமும் நீ வெட்டிடும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றன என வினவியபோது நீங்கள் வேண்டுமானால் நேரில் வந்து பாருங்கள் ஐயா நான் முந்தைய நாட்களைவிட மிககடுமையாக முயன்றும் வெட்டுகின்ற மரங்களின் எண்ணிக்கை யானவை குறைகின்றன காரணம்தான் எனக்கு தெரியவில்லை என அப்பாவிபோன்று கூறினார் சரிதம்பி நீ மரம் வெட்டுவதற்காக உன்னிடம் கொடுத்த கோடாளியை தினமும் கூர்தீட்டினாயா என அந்த வியாபாரி வினவியபோது அந்த மரம்வெட்டிடும் தொழிலாளியானவர் பொழுதுக்கும் மரம் வெட்டவே நேரம் சரியாக போய்இருட்டிவிடுகின்றது அப்புறம்எங்கே கோடாளியை கூர்தீட்டுவது என பதில்கூறினார் அந்த தொழிலாளி .அதெல்லாம் பரவாயில்லை தினமும் பணியை துவங்கிடும் முன் முதலில் கோடாளியை கூர்தீட்டு அதன்பிறகு மரம் வெட்டிடும் பணியை துவங்கிடு என முதலாளி கூறியதால் மறுநாள் தன்னுடைய மரம் வெட்டிடும் பணியை துவங்கிடும் முன் கோடாளியை நன்கு கூர்தீட்டியபின் மரம் வெட்டஆரம்பித்தார் என்ன ஆச்சரியம் பணியில்சேர்ந்த முதல் நாளில்வெட்டிய அளவு அன்று மரங்களை அந்த தொழிலாளியால் வெட்டிமுடிக்கமுடிந்தது
அதேபோன்று நாம் அன்றன்றுநம்முடைய பணியை துவங்கிடும் முன் அந்த பணியை எவ்வாறு செய்து முடிப்பது என நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்தினால் நம்முடைய பணியின்எண்ணிக்கையும் அதன் தன்மையும் குறைவுபடாமல்தொடர்ந்து செய்து முடிக்கமுடியும் என தெரிந்து கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக