முன்பு ஒருகாலத்தின் அன்பு என்பவன் மிகவும் புத்திசாலியானதிருடனாக இருந்துவந்தான் .ஆயினும் அன்பு எப்போதும் பணக்காரர்களிடமிருந்து பொருட்களையும் பணத்தையும் திருடி வயதானவர்களுக்கும்,நோய்வாய் பட்டவர் களுக்கும் ஏழைஎளியவர்களுக்கும் அதாவது உதவி தேவைப்படுவர்கள் அனைவருக்கும் அவற்றை பிரித்து பகிரந்து வழங்குவது அன்பினுடைய வழக்கமான செயலாகும். இவ்வாறான திருடிய பொருட்களை ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்ற அன்பினுடைய செயலை மற்ற திருடர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளமறுத்தனர் அதனால் அவர்கள் அனைவரும் நம்முடைய பிழைப்பை இந்த அன்பு கெடுத்துவிடுவான் அதனாஆல் அன்பு எங்காவது திருடிடும்போது காட்டிகொடுத்தல் அல்லது திருடவே முடியாத இடத்தில் திருடுமாறு செய்து இந்த திருட்டு தொழிலிலிருந்து அன்பை விரட்டிவிடவேண்டும் என ஒருமனதாக முடிவுசெய்தனர் .அதற்காக ஒரு நாள் அவர்கள் அன்பு என்ற திருடனிடம் அந்நாட்டு அரசன் போட்டிருக்கின்ற உடையை தங்களால் திருடி கொண்டுவரமுடியும் என்றும் அன்பினால் அவ்வாறு அரசன் அணிந்து கொண்டிருக்கின்ற உடையை திருடிகொண்டுவரமுடியுமா எனவும் அவ்வாறு அரசன் அணிந்து கொண்டிருக்கின்ற உடையை திருடிகொண்டுந்தால் அன்பினை தங்களுடைய கூட்டத்தின் தலைவனாக ஏற்றுக்கொள்வோம் எனும் புதிய போட்டிஒன்றிற்கு அழைத்தனர் .அந்த போட்டியை அன்பு ஏற்றுகொண்டான் அதற்கான ஆயத்த பணிகளை செய்தபின்னர் இறுதியாக, அரசனுடைய அரண்மனைக்கு சென்றான் . அப்போது அரசன் தன்னுடைய படுக்கையில் படுத்து தூங்கி கொண்டுஇருப்பதை கண்டவுடன் தன்கைவசம் நிறைய கட்டெறும்புகளை பாதுகாத்து வைத்திருந்த கண்ணாடி புட்டியின் மூடியை திறந்து விட்டான். உடன் அடைபட்டிருந்த கட்டெறும்புகள் சுதந்திரமாக வெளியேறி அரசனின் உடல்முழுவதும் கடிக்கஆரம்பித்தன.ஏராளமான கட்டெறும்புகள் அரசனின் உடல்முழுவதும் கடிக்கஆரம்பித்ததால் வலிதாளாமல் அரசன் விழித்தெழுந்து கத்தி கூப்பாடு போடஆரம்பித்தான் உடன் அரண்மனையில் பணிபுரியும் பணியாளர்கள் விரைவாக அரசனின் படுக்கை அறைக்கு ஓடிவந்து அரசனுடை உடலை கடித்து கொண்டிருந்த கட்டெறும்புகளை துடைத்து எறியத்துவங்கினர் இந்நிலையில் அன்பு எனும் திருடன் அரசனுடைய பணியாளரில் ஒருவனைன்போன்று அரசனின் உடையை கழற்றுவதற்கு உதவிசெய்து அதனை அரண்மனையுில் வேறு அறையில் வைப்பதற்கு எடுத்து செல்வதை போல நாடகமாடி அவைகளை எடுத்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி மற்ற திருடர்களிடம் கொண்டுசென்று அரசன் அணிந்திருந்த உடைகளைதான்திருடி வந்ததை காண்பித்தான். அதனை தொடர்ந்து திருடர்கள் போட்டியின் விதியின்படி மறுபேச்சு எதுவும் பேசாமல் அன்பினை தங்களுடைய கூட்டத்தின் தலைவனாக ஏற்றுக்கொண்டனர் .
எப்போதும் புத்திசாலித்தனமாக இருந்திடுக
சனி, 28 நவம்பர், 2020
சனி, 14 நவம்பர், 2020
நிர்வாகத்திற்கு அவர்களின் பணியாளர்கள் அனைவருடைய அடையாளமும் தெரியுமா?
ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உற்பத்தி சரியாக நடைபெறுகின்றதா தொழிலாளர்கள் அனைவரும் விழிப்புடன் பணிபுரிகின்றனரா என ஆய்வு செய்வதற்காக தங்களுடைய தொழிற்சாலைக்குள் பார்வை யிட்டு கொண்டே சென்றபோது, ஒரு இளைஞன் மட்டும், பணி எதுவும் செய்யாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு வெட்டியாக பொழுது போக்குவதைக் கவனித்தார் . உடன் அந்த இளைஞனை அருகில் அழைத்து , "நீங்கள் மாதம் ஒன்றிற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்?" என நிருவாக இயக்குநர் வினவினார் . அந்நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் தன்னிடம் இது போன்ற தனிப்பட்ட கேள்வி கேட்கப்பட்டதில் அந்த இளைஞன் மிகவும் ஆச்சரியப்பட்டான், இருந்தபோதிலும் , "ஐயா! நான் ஒரு மாதத்திற்கு ரூ.20000.00 சம்பாதிக்கிறேன், ஐயா! என்னிடம் ஏன் அவ்வாறு கேட்கின்றீர்கள்? ஐயா !" என அந்த இளைஞன் பதிலுக்கு அவரிடம் வினவினான். உடன் நிருவாக இயக்குநர் பதிலேதும் சொல்லாமல், தனது பணப்பையிலிருந்து ரூ.60000.00 பணத்தை எடுத்து எண்ணிக்கை செய்து அந்த இளைஞனிடம் கொடுத்து, "இங்கே தொழிற்சாலையில் பணி செய்வதற்காக மட்டுமே தொழிலாளர்களுக்கு சம்பளம் தருகிறேன், வெட்டியாக பணிஎதுவும் செய்திடாமல் பொழுது போக்குவதற்காக அல்ல! இதோ உங்களுடைய 3 மாத சம்பளம், வாங்கி கொண்டு இப்போதே நீங்கள் இந்த தொழிற்சாலையில் விட்டு வெளியில் செல்லலாம் நாளைமுதல் நீங்கள் இங்கு பணிசெய்வதற்காக திரும்பி வர வேண்டாம் ".என க்கூறி அந்த இளைஞனை விரட்டினார் அதனை தொடர்ந்து அந்த இளைஞனும் தொழிற்சாலையிலிருந்து விரைவாக வெளியேறிச் சென்றான். பின்னர் அந்த தொழிற்சாலையின் நிருவாக இயக்குநர் அருகில் நின்றுகொண்டிருந்த ஒருசில பணியாளர்களிடம் , "இதே செயல் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் உங்கள் அனைவருக்கும் பொருந்தும்".என்று மிகவும் கோபத்துடன் கூறினார் அதன் பின்னர் அங்குஇருந்த தொழிலாளர்களில் ஒருவரை அழைத்து, "நான் இப்போது பணியை விட்டு வெளியேற்றிய இளைஞன் யார்?" என வினவினார் அதற்கு அந்த தொழிலாளியிடமிருந்து - "அந்த இளைஞன் தேநீர் இடைவேளையில் தொழிலாளர் அனைவருக்கும் தேநீர் வழங்கிடுபவன், ஐயா!" எனும் ஒரு அற்புதமான பதில் வந்தது.
சனி, 7 நவம்பர், 2020
ஒரு போர்வீரனின் கதை
வியட்நாம் நாட்டுடனான போரில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்த கொண்டிருந்த ஒரு போர்வீரன் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து தனது பெற்றோரை தொலைபேசியில் அழைத்தார். “அம்மா! அப்பா!, நான் இப்போது வியட்நாம் நாட்டுடனான போர்முடிந்து நமது வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருக்கின்றேன், ஆனாலும் உங்களிடம் ஒரு கோரிக்கை ஒன்று உள்ளது. அதை நிறைவேற்றுவீர்களா ?." என தன்னுடைய பெற்றோரிடம் கோரியபோது,அவனது பெற்றோர்கள் “மகனே! நன்றாக இருக்கின்றாயா உன்னுடைய கோரிக்கையை கூறு நாங்கள் கண்டிப்பாக நிறைவேற்றிடுவோம்." என உறுதி அளித்தார்கள் . அதனை தொடர்ந்து “ அதாவது , என்னுடன் சக போர்வீரர் நண்பர் ஒருவரை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வர விரும்புகின்றேன். " என அந்த போர்வீரன் கூறினான். உடன் அந்த போர்வீரனுடைய பெற்றோர்கள்,“மகனே ! கண்டிப்பாக நாங்கள் அவரை சந்திக்க விரும்புகிறோம்" என பதிலளித்தனர். தொடர்ந்து “ஆனாலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது,” என்று அவர்களுடைய மகன் கூறியபோது ,“அந்த செய்தி என்னவென்று கூறு மகனே !" என மிகஆவலுடன் பதிலளித்தனர். “நடந்துமுடிந்த வியட்நாம் போரில் நண்பர் மிகவும் மோசமாக காயமடைந்து ஒரு காலையும் ஒரு கையையும் இழந்து விட்டார் .அதனால் நம்மை போன்று அவரால் நன்றாக நடக்கவும் வாழவும் முடியாது. அவர் வேறு எங்கும் செல்லவிரும்பவில்லை, அதனால் அவர் நம்முடன் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ”எனக்கூறினார். அதனை தொடர்ந்து “அவருடைய இந்த நிலையை கண்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்மகனே! இருந்தபோதிலும், அவர் வேறு எங்காவது அனாதைகள் இல்லத்தில் வாழலாம் அல்லவா! ” என அந்த போர்வீரனின் பெற்றோர்கள் பதில் கூறியபோது அவர்களுடைய மகன் "இல்லை!இல்லை! அவர் நம்முடன் நம்முடைய வீட்டில் மட்டுமே வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."என பிடிவாதமாக கூறியபோது “மகனே!, நீ என்ன கேட்கின்றாய் என்று உனக்குத் தெரியாது. அத்தகைய ஊனமுற்ற ஒருவர் நம்முடன் இருக்க அனுமதித்தால் அவர் நமக்கு பயங்கர சுமையாக இருப்பார்.நாம் வாழ்வதற்கு நம்முடைய சொந்த வாழ்க்கை இருக்கிறது, இதுபோன்று தேவையில்லாத சுமைஒன்றை தூக்கிகொண்டு செல்லுமாறான நிலைக்கு அனுமதிக்க முடியாது. நீ மட்டும் நம்முடைய வீட்டிற்கு வந்து சேர் உன்னுடைய நன்பரை மறந்துவிடு. உன்னுடைய நண்பர் தான் சுயமாக வாழ அவரே ஏதாவது ஒரு வழியைக் கண்டு பிடிப்பார். ” என மறுத்து பேசினர் .அதனை தொடர்ந்து அவர்களுடைய மகன் தொலைபேசியை பாதியில் வைத்துவிட்டான். அவர்களுடைய மகனிடமிருந்து வேறு எந்த தகவலும் அந்த போர்வீரனின் பெற்றோர்களுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், ஒருசில நாட்களுக்குப் பிறகு, அந்த போர்வீரனின் பெற்றோர்களுக்கு சான் பிரான்சிஸ்கோ போலீசாரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பின்போது அவர்களது மகன் ஒரு கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டான் என்ற தகவல் அவர்களிடம் கூறப்பட்டது. இது ஒரு தற்கொலை என்று போலீசார் நம்பினர். அந்த பெற்றோர்கள் சான் பிரான்சிஸ்கோவிற்கு மிகவும் மனவருத்ததுடன் விரைந்து சென்றனர் அங்கு அவர்களுடைய மகனின் உடலை அடையாளம் காண அந்நகர சவக்கிடங்கிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்நகர சவக்கிடங்கில் தங்களுடைய மகனை அடையாளம் கண்டுகொண்டனர், ஆனால் அவர்களின் மகனுக்கு ஒரு கையும் ஒரு காலும் மட்டுமே இருந்தன. என்ற அவர்கள் அறியாத ஒன்றையும் கண்டுபிடித்தனர், அதனை தொடர்ந்து அதிக மனவருத்தத்துடன் “ஐயய்யோ! தன்னுடைய உடல் குறையை மறைத்து உடல் குறைபாடுடை தன்னுடைய நண்பனசேர்ந்து வாழ அனுமதிகோட்டதை மறுத்துவிட்டோமே!" என அந்த போர்வீரனின் பெற்றோர்கள் அழுது புரண்டனர் .
நீதி : இந்த கதையில் வரும் பெற்றோர்களை போன்றே நம்மில் பலரும் வாழ்ந்துவருகின்றோம். அதாவது உடல் குறையில்லாத சகமனிதர்களிடம் நாம் அன்புசெலுத்தவிழைவோம் , ஆனால் உடல் குறையுடன் நமக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அல்லது நமக்கு சங்கடத்தை உருவாக்கும் நபர்களை நாம் ஒருபோதும் அன்பு செலுத்த விரும்புவதில்லை. அதாவது உடல்குறையுள்ளவர் களிடமிருந்து நாம் விலகி இருப்போம். அதாவாது இவ்வாறானவர்கள் நமக்கு சுமையாக இருப்பார்கள் என நினைத்து அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழவிரும்புவோம்ஆனாலும் அவ்வாறானவர்களிடம் அன்பு செலுத்தவும் சகமனிதர்கள் போன்று அரவணைத்து செல்லவும் வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...