சனி, 3 ஏப்ரல், 2021

நாம் என்ன செய்கின்றோமோ அதன்விளைவே நமக்கு கிடைக்கும்


மிகவும் வெற்றிகரமான தொழிலதிபர் ஒருவர், ஒருநாள் தனது அலுவலகத்திற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தார். அவர் தனது மகிழ்வுந்தில் ஏறுவதற்காக அதன் கதவைத் திறக்கமுயன்றபோது, அவரது மகிழ்வுந்திற்கு அடியில் தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று திடீரென வெளியே வந்து என்ன இவன் நம்முடைய தூக்கத்தை கெடுக்கின்றானே என அந்த தொழிலதிபரின் காலை கடிக்கவந்தது! அத்தொழிலதிபர் மிகவும் கோபமடைந்து விரைவாக ஒரு சில கற்களை எடுத்து நாய் மீது வீசினார், ஆனால் அத்தொழிலதிபர் வீசிய கற்கள்எதுவும் நாய்மீது படவில்லை. அந்த நாயும் அடிஎதுவும் படாமல் தப்பித்தால் போதுமென வேகமாக பாய்ந்தோடிவிட்டது.
அவர் தனது அலுவலகத்தை அடைந்ததும், அத்தொழிலதிபர் தனக்கு கீழ்பணிபுரியும் அனைத்து துறைத்தலைவர்களையும் அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைத்தார், அந்த துறைதலைவர்களின் கூட்டத்தின் போது அவர் நாயின் மீது இருந்த கோபத்தை அவர்கள் அனைவரின் மீது காண்பித்து யாரும் தங்களுடைய கடமையை சரியாக செய்வதில்லை என திட்டி அனுப்பிவைத்தர்.
கூட்டம் முடிந்ததும் துறைத்தலைவர்கள் அனைவரும் தங்களுடைய முதலாளி தங்களிடம் காண்பித்த கோபத்தால் வருத்தப்பட்டு கொண்டே சென்று தங்களுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டு அன்றைய பணியை கவணிக்க ஆரம்பித்தனர்
இருந்தபோதிலும் தங்களுக்கு கீழ்பணிபுரியும் மேற்பார்வையாளர்களிடம், தங்களுடைய கோபத்தை காண்பித்தனர். இந்த எதிர்வினையின் சங்கிலி ஊழியர்களின் கீழ் மட்டம் வரை சென்று கொண்டே இருந்தது, இறுதியாக, அந்த கோபம் அலுவலக த்தில்பணிபுரிந்த அலுவலக உதவியாளரை சென்றடைந்தது. இப்போது, அவ்வலுவலக உதவியாளரின் கீழ் வேறு யாரும் பணிபுரிய வில்லை! எனவே, அவரிடமே தங்கிஇருந்தது
அன்று சாயுங்காலம் அலுவலகபணி நேரம் முடிந்ததும், அவ்வலுவலக உதவியாளர் தனது வீட்டை சென்றடைந்தார்,அவரது மனைவி வீட்டின் கதவைத் திறந்தார். அப்போது அவருடைய மனைவி அவரிடம், “ ஏன் இன்று காலதாமதமாக வருகின்றீர்கள்?” என்று கேட்டவுடன். தன்னிடம் அடக்கி வைத்துகொண்டிருந்த கோபத்தால் , தன்னுடைய மனைவிக்கு ஒரு அறை கொடுத்தார்! மேலும், “நான் ஒன்றும் கால்பந்து விளையாடுவதற்காக அலுவலகத்திற்குச் செல்லவில்லை, நான் அலுவலக பணிக்குச் சென்றுவருகின்றேன், உன் முட்டாள்தனமான கேள்விகளால் என்னை எரிச்சலடையச் செய்யாதே!” என கோபத்தில் பொரிந்து தள்ளினார் .எப்போதும் இவ்வாறு கோபப்படாத அவ்வுதவி யாளரால் , இப்போது ஒரு திட்டும் அறையும் தனக்கு கிடைத்ததே என்று அவ்வுதவியாளரின் மனைவி மிகவும் வருத்தப்பட்டார். அதனால் வீட்டில் தொலைகாட்சிபெட்டியில் அன்றைய நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த தங்களுடைய மகன் மீது காண்பித்தார் அதாவது தங்களுடைய மகனின் கன்னத்தில் ஒரு அறைகொடுத்து, “எப்போதும் தொலைகாட்சி பெட்டியே கதியென்றி நீ இருப்பாய், படிப்பதில் உனக்கு ஒன்றும் ஆர்வம் இல்லை! இப்போது தொலைகாட்சியை நிறுத்து! ” என கோபமாக திட்டினார் . அவர்களுடைய மகன் என்ன இது நம்முடைய அம்மா இன்றுமட்டும் நம்மை இவ்வாறு அடித்து திட்டுகின்றாரே என மிக வருத்தப்பட்டான்! தொடர்ந்து அவர்களுடைய மகன் அந்த வருத்தத்தில் தங்களுடைய வீட்டினை விட்டு வெளியேவந்தான் ஒரு நாய் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான் அதனால் கோபத்திலும் விரக்தியிலும் ஒருகல்லை எடுத்து அந் நாயை நோக்கிவீசி எறிந்தான். அந்த நாய்,ஆனது அந்தகல்லால் அடிபட்டு, வலியால் குரைத்து கொண்டே ஓடியது. காலையில் தொழிலதிபரைக் கடிக்கமுயன்ற அதே நாய் தான்தான்இது.
நீதி: ஒருவர் விதைத்ததைப் போலவே அறுவடை செய்வார். நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் செயல்படுகிறது. நம்முடைய செயல்களின் அடிப்படையில் நம்மனைவருக்குமான மகிழ்ச்யும் துக்கமும் உருவாகின்றது,அதனால் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்தினால் போதும். நல்லது செய்தால், நல்லது வந்து சேரும், தவறு செய்தால், தண்டனை வந்துசேரும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...