செவ்வாய், 13 ஏப்ரல், 2021

எளியவர்களுக்கு உதவியாக இருந்திடுக

 

திரு. கண்ணன் என்பவர் அன்றைய அலுவலகபணியை முடித்து விட்டு தங்களுடைய வீட்டிற்குசெல்வதற்குத் தயாராகி கொண்டிருந்தார், மேலும் அன்று பணிமுடிந்து வீடுதிரும்பும்போது ஒரு கிலோ வாழைப்பழங்களை கண்டிப்பாக வாங்கிகொண்டு வருமாறு இன்றுகாலையில் அவரது மனைவி கோரியதை அவர் நினைவில் கொண்டார். . திரு. கண்ணன் வழக்கமாக அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பிடும்போது தங்களுடைய அலுவலகத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு பெரிய பழக் கடையில் இருந்து பழங்கள் வாங்கிசெல்வதுவழக்கமாக கொண்டிருந்தார் , ஆனால் இன்று அவர் அவசரமாக வீட்டிற்குச் செல்லவேண்டி இருந்ததால், அவர் வீட்டிற்கு திரும்பி செல்லும்வழியில், சாலையோரத்தில் ஒரு வயதான பெண்மணி வாழைப்பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்தை கண்டார் இன்று மட்டும் அந்த சாலையோர கடையிலேயே வாழைப்பழங்களை வாங்கி செல்வோமே என ஆலோசித்தார். அதனால்அவர் அந்த வயதான பெண்மணியிடம் சென்று வாழைபழத்திற்கான விலை எவ்வளவு என வினவியபோது. அந்த வயதான பெண்மனி "ஐயா ஒரு கிலோ வாழைப்பழம் $ 70/- ",என கூறினார். உடன் திரு.கண்ணன் என்பவர், "ஆனால் அம்மா நான் வழக்கமாக வாங்கும் பழக்கடையில் எனக்கு ஒரு கிலோ வாழைப்பழங்களை $ 50/- க்கு கொடுத்தனரே, அதனால் அதே விலையில் நீங்கள் எனக்கு கொடுக்கலாமே?" எனவினவினார். அதனை தொடர்ந்து அந்த வயதான பெண்மனி, “இல்லை ஐயா, அந்த விலைக்கு என்னால் கொடுக்க முடியாது. வேண்டுமானால் உங்களுக்காக ஒருகிலோ வாழைப்பழங்களை $ 60 /- க்கு நான் வழங்க முடியும். உங்களுக்காக நான் கொடுக்கக்கூடியது இதுதான். ”என பதில் கூறினார் திரு. கண்ணன் அந்த வயதான பெண்மனியிடம், “பரவாயில்லைஅம்மா” என்று கூறி . அவர் தான் வழக்கமாக பழங்களை வாங்கிடும் கடையை நோக்கி புறப்பட்டார். அவர் அந்த கடையின் உள்ளே சென்று நல்ல வாழைங்களாக எடுத்துகொண்டு அதற்கான பணம் செலுத்த காசாளரிடம் சென்றார், அந்த கடையின் காசாளர் ஒரு கிலோ வாழைப்பழங்களின் விலை $ 100/- என்று கூறி அந்த தொகையை வழங்கிடுமாறு கூறியபோது திரு. கண்ணன் ஆச்சரியப்பட்டார். அதனால் திரு. கண்ணன் காசாளரிடம், "நான் ஒரு சில ஆண்டுகளாக இங்கிருந்து மட்டுமே பழங்களை வாங்கிவருகின்றேன், விலை அதிகமாக இருக்கின்றது ஒரு வழக்கமான வாடிக்கையாளராக இருப்பதற்காக எனக்கு விலைகுறைத்து வழங்க முடியாதா?" எனக்கோரினார் அந்த கடையின் மேலாளர் இதனை கண்ணுற்று அங்கு வந்தார். தொடர்ந்து அவர் திரு. கண்ணனிடம், "மன்னிக்கவும் ஐயா, ஆனால் எங்கள் கடையில் பொருட்களின் விலைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன, எங்களால் பேரம் பேசி அதைவிட குறைக்கமுடியாது." எனக்கூறினார் திரு. கண்ணன் அந்த அணுகுமுறையால் அதிர்ச்சியடைந்தார். அவர் ஒரு நொடி யோசித்து அந்த வாழைப்பழங்களை மீண்டும் அதனுடைய இடத்தில் வைத்துவிட்டு அந்த பழக்கடையை விட்டு வெளியேறி மீண்டும் வயதான பெண்மணியின் சாலையோர கடைக்கு சென்றார். திரு கண்ணனை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டு அந்த வயதானபெண்மனி, “ஐயா!, என்னால் நீங்கள் கோரிய அந்த விலைக்கு வழங்க முடியாது, என்னால் நட்டத்திற்கு வியாபாரம் செய்ய முடியாது” என்று சொன்னார். திரு.கண்ணன் அந்த வயதான பெண்மனியிடம், “அம்மா! இப்போது நான் விலையைப் பற்றி கவலைப்படவில்லை, தற்போது நான் உங்களுடைய கடையிலுள்ள வாழைப்பழங்களை கிலோஒன்றிற்கு $ 100/- வாங்கிகொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்! எனக்கு 2கிலோ வாழைப்பழங்களை கொடுங்கள். ” எனக்கூறினார் உடனடியாக 2 கிலோ வாழைப்பழங்கள் விற்பணையாகின்றதே என அந்த வயதான பெண்மனி மிகவும் மகிழ்ச்சியடைந்தார், அதனால் அவர் 2 கிலோ வாழைப்பழங்களை பையில் வைத்து, “ஐயா! நான் ஒருகிலோ வாழைப்பழங்களை $ 100/- என்ற அதிக விலைக்கு வழங்க விரும்பவில்லை , ஆனால் உங்களுக்காக நான் ஒரு கிலோஒன்றிற்கு $ 70/- இற்கு வழங்குகின்றேன். . ”எனக்கூறினார் மேலும் திருகண்ணனிடம், “என் கணவர் ஒரு சிறிய பழக் கடை வைத்திருந்தார், ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை.அவரால் எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. அதனால் அந்த பழக்கடையை அவரால் தொடர்ந்து நடத்தமுடியவில்லை எங்களை ஆதரிப்பதற்கு பிள்ளைகளோ அல்லது உறவினர்களோ யாரும் இல்லை. அவரது மருத்துவ கட்டணங்களை ஈடுகட்டவும் நாங்கள் இருவரும் உயிர்வாழவும் போதுமான வருமானம் கிடைப்பதற்காக நான் இந்த பழக்கடையை தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது, அதனால் எங்களுடைய எஞ்சிய வாழ்நாளை இருப்பதற்கு போதுமான வருமானம் மட்டும் கிடைத்தால் போதுமானதாகும்” அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது." திரு. கண்ணன் அந்த வயதான பெண்மனியிடம், "கவலைப்படாதே, அம்மா , நாளை முதல், நான் உங்களிடமிருந்து மட்டுமே பழங்களை வாங்குவேன்" என்று கூறினார். அவர் தனது பணப்பையை வெளியே எடுத்து அதிலிருந்து $ 1000/-தாளொன்றினை எடுத்து அந்த வயதான பெண்மனியிடம் கொடுத்து, “இதை எடுத்துக் கொள்ளுங்கள், நாளை விற்க இன்னும் பலவிதமான பழங்களைக் கொண்டு வாருங்கள், நான் உங்களிடமிருந்து வாங்கும் பழங்களுக்கான முன்பணமாக இதை எண்ணிக்கொள்ளுங்கள். பழங்களை வாங்கி விற்க உங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தால் நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம் அல்லவா. ” எனக்கூறியவாறு தொகையை வழங்கினார் வயதான பெண்மனி அவருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், அவர் தனது சக பணியாளர்கள் பலரை அந்த வயதான பெண்மணியிடமிருந்து பழங்களை வாங்க பரிந்துரைத்தார். திரு. கண்ணன் மற்றும் சக பணியாளர்களின் ஆதரவுடன், அந்த வயதான பெண்மனியானவர் ஒரு சிறந்த வாழ்க்கையை மேற்கொண்டார்.
பெரும்பாலும் நாம் பெரிய கடைகளிலேயே பொருட்களைவாங்குவதை தேர்வு செய்கிறோம். அக்கடைகளில் எப்போதும் பேரம் எதுவும் பேசாமல் அவர்கள் குறித்த விலையை செலுத்துகிறோம். பெரிய கடைகளில் பொருட்களை கொள்முதல் செய்யும் போது பேரம் பேச நமக்கு தைரியம் இருப்பதில்லை, அவர்கள் குறிப்பிட்ட விலையை கொடுக்கு தயாராக இருக்கின்றோம் ஆனால் தெருவோரம் விற்பணைசெய்கின்ற சிறிய விற்பனையாளர்களுடன் மட்டும் பேரம் பேச முயற்சிக்கிறோம்? அது ஏன் என சிந்தித்திடுக.
இவ்வாறான எளியவர்கள் அன்றாட உயிர்வாழ்வதற்கு போதுமான அளவு வருமானம் வந்தால் போதுமென வாழ்பவர்களுக்கு எப்போதும் உதவியாகவும் ஆதரவாகவும் இருக்க முயற்சித்திடுக


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...