வெள்ளி, 30 ஏப்ரல், 2021
நம்முடைய பலவீனத்தையே நம்முடைய பலமாக மாற்றிகொள்க
10 வயது சிறுவன் ஒருவன் மிகப்பெரிய கார் விபத்தில் தன்னுடைய இடது கையை இழந்த போதிலும், ஜூடோ எனும் கலையை கற்றுகொள்ள முடிவு செய்தான். அச்சிறுவன் ஒரு வயதானஅனுபவமிக்க ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் ஜூடோ எனும் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ளதுவங்கினான். அச்சிறுவன் நன்றாக அந்த கலையை கற்றுகொண்டுவந்தான், அவ்வாறான மூன்று மாத பயிற்சியில் ஜூடோ ஆசிரியர் அவனுக்கு ஒரே ஒரு அசைவைமட்டுமே கற்றுக் கொடுத்தார். அதனால் அச்சிறுவன் தன்னுடைய ஆசிரியரை “சென்ஸி,” (ஜப்பானிய மொழியில் ஆசிரியரை விளிப்பது),என அழைத்து “நான் அதிக நகர்வுகளைக் கற்றுக் கொள்ள வேண்டாமா?” என தன்னுடைய சந்தேகத்தினை கேட்டான். "இது உனக்குத் தெரியவேண்டிய ஒரே அசைவு, ஆனால் நீ தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே அசைவும் இதுதான்" என்று சென்ஸி பதிலளித்தார். மிகச்சிறந்த ஜூடோ எனும் கலையில் ஒரேயொரு அசைவு மட்டுமா இருக்கும் ஆனால் ஒன்றுமட்டும் போதுமென்று ஆசிரியர் கூறுகின்றாரே என அவனுடைய மனம் மிகவும் புரியாமல் குழப்பமாக இருந்தது, ஆனாலும் தனது ஆசிரியரை நம்பி, அச்சிறுவன் தன்னுடைய பயிற்சியைத் தொடர்ந்தான். பல மாதப்பயிற்சிக்குப் பிறகு, சென்ஸி யானவர் அச்சிறுவனை முதன்முதலான ஒரு போட்டிக்கு அழைத்துச் சென்றார். அச்சிறுவன் ஜூடோவின் முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வென்றான். மூன்றாவது போட்டி மிகவும் கடினம் என்று நிரூபிக்கப்பட்டது, ஆனால் சிறிது நேரம் கழித்து, அவனது எதிர்ப்பாளர் பொறுமையிழந்து அச்சிறுவன்மீது குற்றம் சாட்டினார்; அச்சிறுவன் தனது ஒரு நகர்வை மிகநேர்த்தியாகப் பயன்படுத்தி போட்டியில் வென்றான். தனது வெற்றியைக் கண்டு வியப்படைந்தான். அச்சிறுவன் தற்போது இறுதிசுற்றுக்கு தயாராக இருந்தான். இந்நிலையில், அவனது எதிர்போட்டியாளர் இவனைவிட வயதுமுதிரந்த பெரியவர், மிகவும் வலிமையானவர், மேலும் அனுபவம் வாய்ந்தவர். அதனால், அச்சிறுவன் தன்னுடன் போட்டியில் கலந்துகொள்வதற்கு பொருந்தாதவனாக அவருக்குத் தோன்றினான். அதனால் சிறுவனுக்கு காயம்ஏதேனும் ஏற்படக்கூடும் என்ற கவலையில், நடுவர் போட்டியை அதோடு முடிந்ததாக அறிவித்தார். ஆனால் அந்த சிறுவனின் சென்ஸி தலையிட்டு. "தேவையில்லை போட்டி தொடரட்டும்," என வலியுறுத்தினார், அந்த போட்டி மீண்டும் தொடர்ந்தபோது , அவனது எதிர்ப்பாளர் ஒரு முக்கியமான தவறைச் செய்தார்: அதாவது அவர் தனது பாதுகாப்பைக் கைவிட்டார். உடனடியாக, சிறுவன் தனது நகர்வைப் பயன்படுத்தி அப்போட்டியாளரை வீழ்த்தினான். போட்டியில் வென்றான். அவன் சாம்பியனாக அறிவிக்கப்பட்டான. அந்த போட்டி முடிந்து வீட்டிற்கு திரும்பிச்செல்லும் வழியில், சிறுவனும் சென்ஸியும் சற்றுமுன் நடைபெற்ற போட்டியின் ஒவ்வொரு அசைவையும் மதிப்பாய்வு செய்தனர். பின்னர் சிறுவன் தன் மனதில் எழுந்த சந்தேகத்தை தீர்வுசெய்வதற்காக. "சென்ஸி, ஒரே ஒரு நகர்வுடன் நான் எப்படி போட்டியை வென்றேன்?" எனவினவியபோது "நீ இரண்டு காரணங்களால் வென்றாய்ள்" எனசென்ஸி பதிலளித்தார். “முதலில், எல்லா ஜூடோவிலும் மிகவும் கடினமான அசைவுகளுள் ஒன்றை கிட்டத்தட்ட தேர்ச்சி பெற்றுவிட்டாய். இரண்டாவதாக, அந்த நடவடிக்கைக்கு அறியப்பட்ட ஒரே பாதுகாப்பு உன்னுடைய எதிரி உன்னுடைய இடது கையைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அதில் அப்போட்டியாளர் அதனை தவற விட்டார்” சிறுவனின் மிகப்பெரிய பலவீனம் அவனது மிகப்பெரிய பலமாக மாறியது.
ஒருசில நேரங்களில் நமக்கு ஒருசில பலவீனங்கள் இருப்பதாக உணர்கிறோம், அதற்காக சூழ்நிலைகளை அல்லது சுற்றியிருப்பவர்கள் குறை கூறுகிறோம், ஆனால் நம்முடைய பலவீனங்கள் ஒரு நாள் நம்முடைய பலமாக மாறக்கூடும் என்பதை நாம் ஒருபோதும் அறியாமல் வாழ்ந்துவருகின்றோம். , எனவே நமக்கு எந்தவொரு பலவீனமும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதீர்கள், அவ்வாறு இருந்தால் அந்த பலவீனத்தையே நம்முடைய பலமாக மாற்றிகொள்க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக