சனி, 17 ஏப்ரல், 2021

வேர்களை வலுவாக்குங்கள்

தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்ட காப்பீட்டு முகவர் , ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆகிய இருவரும் அருகருகே வசித்து வந்தனர். அவர்கள் இருவரும் தங்களுடை வீட்டின் பின்புறத்திலுள்ள் தோட்டத்தில் ஒரேமாதிரியான செடிகளை நட்டு வளர்த்துவந்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் தனது தோட்டத்திலுள்ள செடிகளுக்கு போதுமான அளவு தண்ணீரை மட்டும் பாய்ச்சிவளர்த்து வந்தார். அதே நேரத்தில் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள மற்றொருவர் தனது தோட்டத்திலுள்ள செடிகளுக்கு நிறைய தண்ணீரை பாய்ச்சியும் ஏரளான அளவிற்கு எரு ,உரம் போன்றவைகளை இட்டு அதிகபாதுகாப்புடன் கண்ணும் கருத்துமாக அவற்றை நன்றாக கவனித்து வந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரின் செடிகள் எளிமையாக அழகாக இருந்தன. காப்பீட்டு முகவரின் செடிகள் மிகவும் வளமாகவும் அதிக பசுமையாகவும் இருந்தன. ஒரு நாள், இரவு புயல் ஒன்று உருவாகி பலத்த காற்றுடனும் மழையும் சேர்ந்து அவர்களுடைய பகுதி முழுமையாக சேதம் ஏற்படுத்திசென்றது. அடுத்த நாள் காலை, அவ்விருவரும் தங்களுடைய வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில் தாங்கள் வளர்த்துவந்த செடிகள் எவ்வாறு உள்ளன என காணசென்றனர். காப்பீட்டு முகவரின் வீட்டுதோட்டத்தில் செடிகள் முழுவதும் வேரோடு பிடுங்கப்பட்டு தரையில் சாய்ந்து முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். ஆனால், ஓய்வுபெற்ற ஆசிரியரின் செடிகள் அவ்வாறு சேதமெதுவும் இல்லாமல், உறுதியாக நின்றுகொண்டிருந்தன. அதனால் காப்பீட்டு முகவர் பக்கத்து வீட்டுதோட்டத்தின் செடிகள் புயல்காற்றிற்கு சாயாமல் நிலையாக நின்றுகொண்டிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார், அவர் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் , “நாமிருவரும் ஒரேமாதிரியான செடிகளை ஒரேமாதிரியாகவே பயிரிட்டு வளர்த்துவந்தோம், உங்களை விட என்னுடைய தோட்டத்தின் செடிகளை நான் நன்றாக கவனித்து எருவிட்டு அதிக தண்ணீர் பாய்ச்சி பாதுகாப்பாக வளர்த்து வந்தேன். ஆனாலும், என்னுடையவீட்டு தோட்டத்தில் அனைத்து செடிகளும் வேரோடு பிடுங்கப்பட்டு தரையில் சாய்ந்துவிட்டன, அதே நேரத்தில் உங்களுடைய தோட்டத்தில் அவ்வாறு இல்லாமல் செடிகள் அனைத்தும் நன்றாக உள்ளனவே. அது எப்படி சாத்தியம்?" என வினவியபோது ஓய்வுபெற்ற ஆசிரியர் புன்னகைத்து, “நீங்கள் உங்கள் செடிகளுக்கு அதிக தண்ணீரையும் பாதுகாப்பினையும் கவனத்தையும் வழங்கினீர்கள், அதனால் அவை தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் எளிதாக கிடைத்ததால்அவைகளை பெறுவதற்காாக அதிகம் உழைக்கத் தேவையில்லை. என சோம்பேறியாக தங்களுடைய வேர்களை தரையில் ஆழமாக வளராமல் நிறுத்தி கொண்டன அதனால் அவை நேற்றைய புயல்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்டன . ஆனால் நான் என்னுடைய தோட்டத்தில் செடிகளுக்கு போதுமான அளவிற்குமட்டும் தண்ணீரை வழங்கினேன் அதற்குமேலும் தேவையெனில் அவை தங்களுடைய வேர்களைை தரையில் மிகஆழத்திற்கு வளரச்செய்து வலுவாக நின்றுகொண்டிருந்தன. அதனால்தான் என்னுடையதோட்டத்து செடிகள் நேற்றையை புயல்காற்றில் தப்பி பிழைத்தன ”.என பதில் கூறினார்
நீதி: இங்குகூறியவாறு காப்பீட்டு முகவரின் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட செடிகளை போன்றே நாமும் நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான.அனைத்தும் வழங்கினால்,அவற்றை சம்பாதிப்பதற்கான கடின உழைப்பை பற்றி அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தமக்கு தேவையானவைகளை பெறுவதற்காக தாங்களே உழைக்கவேண்டும் என்ற அடிப்படை உண்மைய தெரிந்து கொள்ள மாட்டார்கள். அவ்வாறு அவர்களுக்கு தேவையானஅனைத்தையும் வழங்குவதற்குப் பதிலாக அவற்றினை எவ்வாறு சம்பாதித்து பெறுவது எனஅவர்களுக்கு வழிகாட்டுவது நல்லது.


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...