சனி, 1 மே, 2021

யாரையும் அவர்களின் தோற்றத்தினை வைத்து முடிவு செய்யாதீர்கள்

 

ஒரு கிராமத்தில் வயதானவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எல்லா கலைகளையும் நன்கு அறிந்தவர். அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார், ஆனால், அவர் மிகவும் ஏழை. அவருக்கு என்று தனியாக வீடு இல்லை. அவர் தனக்கான உணவை மிகுந்த சிரமங்களுடன் பெற்று வாழந்துகொண்டிருந்தார். அந்த பெரியவர் தனது உணவுக்காக அவ்வூரில் வீடுவீடாக சென்று பிச்சை எடுத்து சாப்பிட்டு காலம் கழித்துவந்தார். அவரது உடைகள் கூட மிகவும் கிழிந்து கந்தாலாகி இருந்தன. . அவரது பழைய ஆடைகளைப் பார்த்ததும் பலர் அவரை, “போ போ” என்று விரட்டி அவருக்கு தேவையான உணவினை வழங்காமல் தங்களுடைய வீட்டின் கதவை மூடினார்கள். அதனால் பல நாட்கள் அவர் உண்பதற்கு உணவு கிடைக்காததால் சாப்பிடாமல் பட்டினியாக காலம் கழித்துவந்தார். ஒருமுறை பணக்காரர் ஒருவர் அவருக்கு புதிய ஆடைகளை வழங்கினார். அந்த பெரியவர் தனக்கு கிடைத்த அந்த புதிய ஆடைகளை அணிந்து முன்பு போலவே அந்த கிராமத்தில் பிச்சை எடுக்கச் சென்றார். அவர் சென்ற முதல் வீட்டின், வீட்டுக்காரர், “ஐயா, தயவுசெய்து உள்ளே வாருங்கள். தயவுசெய்து நீங்கள் எங்கள் வீட்டில் அமர்ந்து உங்களுடைய வயிறார உணவை சாப்பிடுங்கள்” என்றார். இவ்வாறு கூறி, மிகுந்த மரியாதையுடன், வயதானவரை தங்களுடைய வீ்ட்டின் உள்ளே அழைத்துச் சென்று உட்காரசெய்து அவருக்கு பல்வேறு உணவுவகைகளை பரிமாறினார். அவ்வயதானவர் அந்த வீட்டில் சாப்பிட அமர்ந்தார். அவருக்கு பலவிதமான, உணவு வகைகள், இனிப்புகள் சாப்பிடுவதற்கு வழங்கப்பட்டன. முதலில் வயதானவர் தன்னுடைய , கையால் இனிப்பு ஒன்றினை எடுத்து, “சாப்பிடு, சாப்பிடு!” என தன்னுடைய புதிய உடைமீது தேய்த்தார் .அதைப் பார்த்ததும் அவ்வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டனர், அவர்களால் அந்த பெரியவரின் செயலை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, அவர்கள் , “உடைகள் எவ்வாறு உணவினை சாப்பிடும்? ஓ, பெரியவரே, ஏன் நீங்கள்அணிந்துள்ள உடைகளுக்கு உணவு வழங்குகிறீர்கள்? ” என வினவினர் .அதற்கு அந்த பெரியவர், “உண்மையில் இந்த புதிய ஆடைகளின் காரணமாகதான் இன்று நீங்கள் என்னை உங்களுடைய வீட்டிற்குள் அழைத்து அமர்ந்து உணவினை உண்ணும்படி எனக்கு உணவு வழங்கினீர்கள். நேற்று நான் பழைய உடையில் வந்து உணவு வழங்கிடுமாறு கோரியபோது நீங்கள் என்னை விரட்டினீர்கள். இந்த புதிய உடைகள் காரணமாக நான் உணவைப் பெற்றதால், நான் இந்த புதிய உடைகளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இதனால்தான் நான் இந்த உடைகளுக்கு உணவளிக்கிறேன். ” என பதில் கூறினார் அந்த பெரியவர். அந்த பெரியவரின் இந்த பதிலை தொடர்ந்து அந்த வீட்டுக்காரர் மிகவும் வெட்கப்பட்டார். 

நீதி: ஒருபோதும் யாரையும் அவர்களின் தோற்றத்தினை வைத்து முடிவு செய்யாதீர்கள்.


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...