சனி, 22 மே, 2021

ஏழையாக இருந்தாலும் நேர்மையானவர்கள்

 ஒரு பணக்கார தம்பதியினர் தங்களுடைய வீட்டில்  வரவிருக்கின்ற குடும்ப நிகழ்வினை பெரிய விருந்துடன் திருவிழா போன்று கொண்டாட விரும்பினார். எனவே அவர்கள்   ஏற்கனவே  விற்பனை விலை குறிப்பிட பட்டதும் அதிக விலைவைத்து பொருட்களை விற்பணை செய்கின்ற கடையில் அவ்விருந்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்யச் சென்றனர். அவர்கள் தாங்கள் கொள்முதல்செய்திடும் பொருட்களுக்கு விற்பணைவிலை எவ்வளவாகஇருந்தாலும் பரவாயில்லை ஆனால் அந்த பொருட்கள் தரமுடன் இருக்கவேண்டும் என விரும்பினர், எனவே தாங்கள் கொள்முதல் செய்திடும் பொருட்களுக்கு விலைகுறைக்கும்படி பேரம் பேசாமல் பொருட்களை வாங்கிகுவித்தனர். அவ்வாறு தங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொள்முதல் செய்த பிறகு, கொள்முதல் செய்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து்ச் சென்று தங்கள் வீட்டிற்கு கொண்டு சேர்த்திட ஒரு கூலியாளை  அழைத்தனர். அந்தகூலியாள் மிகவும் வயதானவர்,  ஆரோக்கியமானவர் அன்று, அவரது உடைகள் கிழிந்திருந்தன, தன்னுடைய அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத வாறு அவருடைய தோற்றம் இருந்தது. அப்பணக்கார தம்பதிகள்  தாங்கள் கொள்முதல் செய்த பொருட்களை தங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்த சேர்ப்பதற்கான கட்டணம் குறித்து சுமைகூலியிடம் கேட்டபோது. அவ்வயதான கூலியானவர் ரூ 200/- மட்டும் வழங்குமாறு கோரினார், இது தனது வண்டியின்மூலம் பணக்கார தம்பதியினரின் வீட்டிற்கு பொருட்களை  கொண்டுசேர்ப்பதற்காக வழக்கமாக வாங்கும் தொகையைவிட மிகவும் குறைவானதாகும். ஆனாலும், பணக்கார தம்பதியினர் கூலியாளிடம் அந்த கட்டணத்திலிருந்து மேலும் குறைப்பதற்கான பேரம்பேசுவதிலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்  இறுதியாக ரூ 150/- க்கு ஒப்புகொண்டார். கூலியாள் அந்த தொகையைகொண்டு  குடும்பத்துடன் ஒரு வேளை உணவைக் கூட முழுமையாக உண்ணமுடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டார், . பணக்கார தம்பதியினர்பெரிய கடையில் விலை அதிகமான பொருட்களை ஒன்றும் பேசாமல் கடைகாரர் குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர் ஆனால்  ஏழை கூலியாளிடம்  மட்டும் பேரம் பேசி ரூ 50/-ஐ குறைத்துவிட்டதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தனர், அந்த வயதான கூலியாளிடம் ரூ 150/-ஐ  முன்கூட்டியே பணம் கொடுத்து தங்களுடைய வீட்டிற்கு அந்த பொருட்களை, உடன் கொண்டுவந்து சேர்த்திடுமாறு தங்களுடைய  வீட்டின் முகவரியைக் கொடுத்துவிட்டு வீடுவந்து சேர்ந்தனர்., இரண்டு மணிநேரம் கடந்துவிட்டது, ஆனால் அந்த வயதான கூலியாள்  இன்னும் தங்களுடைய பொருட்களை கொண்டுவந்த சேர்க்கவில்லை. மனைவி தனது கணவர் மீது கோபப்படத் தொடங்கினார், “இதுபோன்ற நபரை  நம்ப வேண்டாம் என்று எப்போதும் கூறுகிறேன், ஆனாலும் நீங்கள் ஒருபோதும் என் பேச்சைக் கேட்க மாட்டீர்கள்.  அந்த கூலியாள் , நம்முடைய வீட்டில் நடைபெறும் பெரிய விருந்துக்காக நாம் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தீர்கள். ஆனால்நம்முடைய வீட்டில்கொண்டுவந்து  சேர்ப்பதற்கு பதிலாக,  எல்லாவற்றையும் எடுத்துகொண்டு வேறுஎங்காவது காணாமல் போயிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதுபற்றி விசாரிக்க நாம் உடனடியாக கடைத்தெருவிற்குச் சென்று விசாரித்த பின்னர் அந்த கூலியாள் மீது புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் ”. எனக்கூறினார் அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் கடைத்தெருவினை நோக்கி சென்றனர். சந்தைக்கு அருகில் செல்லும் வழியில், அவர்கள் தங்களுடைய பொருட்களை எடுத்து கொண்டு மற்றொரு கூலியாள் வருவதை கண்டனர்.  கோபமடைந்த மனைவி அவரிடம், “அந்த வயதான திருடன் எங்கே? இவை எங்களுடைய  பொருட்கள்  எங்கள் வீ்ட்டிற்குதானே கொண்டுவந்த சேர்க்கவேண்டும். நீங்கள் திருடர்கள் எங்களுடைய பொருட்களை வேறு எங்காவது விற்கப் போகிறீர்கள் என்று தெரிகிறது ”. என திட்டினார் அதற்கு அந்த கூலியாள் , “அம்மா, தயவுசெய்து அமைதியாக நான்கூறுவதை கேளுங்கள். அந்த  முதியகூலியாள் கடந்த மாதம் முதல் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.  ஒருநாள் உணவை  சாப்பிட போதுமான அளவுகூட அவரால் சம்பாதிக்க முடியவில்லை. அவர் உங்கள் பொருட்களை வழங்குவதற்காக இந்த வழியில் வருவதற்காக தயாராக  இருந்தார், ஆனால் பசியுடன் இருந்ததாலும், நோய்வாய்ப்பட்டிருந்ததாலும், நண்பகலின்  வெப்பத்தில் சாலையில் வண்டியில் கொண்டுவருவதற்கான தெம்பு அவரிடம் இல்லை அவரால் மேலும் நடக்க  முடியவில்லை . அவர் கீழே மயங்கி விழுந்து என்னிடம் ரூ 150/ ஐ ஒப்படைக்கும் போது, அவருடைய கடைசி சொற்கள், “நான் இந்த பொருட்களை கொண்டுவந்து சேர்ப்பதாக  முன்பணம் வாங்கிவிட்டேன், அதனால் இந்த பணத்தை பெற்றுகொள்க மேலும் தயவுசெய்து தாளில் உள்ள முகவரிக்கு இந்த பொருட்களை கொண்டுசென்று சேர்த்துவிடுக”.எனகடைசியாக கூறினார்  “அம்மா, அவர் மிகப்பசியுடன் இருந்தார், அவர் ஏழை, ஆனால் அவர் ஒரு நேர்மையான மனிதர். அவரின் வேண்டுகோளின்படி நான் உங்கள் வீட்டில் வயதான மனிதனின் கடைசி வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக இந்த பொருட்களை கொண்டுவந்துகொண்டு இருந்தேன் ”, எனஅந்த கூலியாள் கூறினார். இதைக் கேட்டதும், அந்த தம்பதியரில் கணவரின் கண்களில் கண்ணீர் வந்தது,
நீதி: நேர்மையாக இருப்பதற்கு இனப்பாகுபாடு நிதிநிலை பாகுபாடு ஆகிய எதுவும் இல்லை. ஏழையாக இருந்தாலும் நேர்மையாக இருப்பார்கள் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...