தற்போது நாமனைவரும் பல்லூடகங்களின் பிடியில்அதிலும் முகநூல்(facebook) போன்ற சமூக ஊடக உலகில் வாழ்ந்துகிறோம், அந்த சமூகஊடகங்களில் நாம் ஒவ்வொரு நிமிடமும் புதிய பிரபலமான தலைப்புகளை காண்கிறோம் , கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் நம்முடைய கருத்தை பதிவுசெய்கிறோம். சமூக ஊடகங்களில் பெரும்பாலானவை உள்ளடக்க பிரச்சாரத்தால் இயக்கப்படுகிறது. நம்முடைய உண்மையான குறிக்கோள்களை மறந்துவிட்டு, "விராட் அல்லது தோனி யார் சிறந்தவர்?" என்பன போன்ற நமக்கு தொடர்பே இல்லாத பிரச்சினைகளில் அறிமுகமில்லாத அந்நியர்களுடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கி விடுகின்றோம் "அவர்களுள்எந்த பிரபலம் சிறந்தவர்?" என்றவிவாதம் நம்மைப் பற்றியதா? நம்முடைய வாழ்க்கையை பற்றியதா எனகவலைபடாமல் அனல்பறக்கின்ற அளவிற்கு விவாத்தினை நடத்தி அதிலேயே நாள்முழுவதும் மூழ்கிவிடுகிறோம். உண்மையில் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ்கிறார்கள், ஆனால் நம்மைப் பற்றி கவலைப்படாதஇந்த பிரபலங்களுக்காக நம்முடைய இருப்பையே மறந்து அதனை பற்றிய விவரம் கூட அறிந்து கொள்ளமல் நாம் அவர்களைப் பற்றி சண்டையிடுகிறோம்.
இதைபோன்ற நிகழ்வுகளில் கருத்துகளை உருவாக்குவதற்கும், நமக்குப் பொருட்படுத்தாத பிரச்சினைகளில் பயனற்ற முறையில் போராடுவதற்கும் நம்முடைய நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கிறோம். இது நமது மன அமைதியையும் தெளிவாக பாதிக்கிறது. இவை அனைத்திற்காகவும் நாம் செய்யும் தர்க்கத்தைப் பற்றி யோசித்துப் பார்த்திடுக? சில செய்திகளை அப்படியே விட்டுவிட வேண்டும். நம்மால் அதை மாற்ற முடியாது. நமக்குப் பிடித்த நடிகர் அல்லது அரசியல்வாதியைப் பற்றிய மற்றவரின் கருத்தை நம்மால் மாற்ற முடியாது, எனவே,இதுபோன்ற செய்திகளில் ஒருவருக்கொருவர் நேரத்தையும் சக்தியையும் ஏன் வீணாக்க வேண்டும்? தேவையற்ற செய்திகளின் தேவையற்ற அதிகப்படியான தகவல்களை நாம் எடுத்துச் செல்கிறோம், இது நம்முடைய வாழக்கையின் இலக்குகளிலிருந்து நம் கவனத்தை மாற்றுகிறது. மட்டைபந்துவிளையாட்டிலிருந்து இன்னொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு சிறந்த , சாதாரண மட்டைபந்தாளர்களுக்கு இடையேயான வேறுபாடு என்னவெனில், சிறந்த மட்டைபந்தாளருக்கு வீசுகின்ற பந்துகளில் எந்த பந்தை அடிக்காமல் விடுவது எதை மிகச்சரியாக அடிப்பது என்பது பற்றிய விவரம் நன்கு தெரியும். அது அவரது அடிக்கின்ற பாதுகாப்பு எல்லைக்கு வெளியே இருந்தால், அவர் அதை அடிப்பதற்காகபாதுகாப்பு எல்லையைவிட்டு வெளியேறாமல் பந்தை மிகச்சரியாக அடித்து விளையாடுவார் அவரது மனவலிமை அல்லது பந்துகள் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும்வரை ஓட்டங்களை எடுப்பார். அப்படி செயல்படுவதான் மூலமாக மட்டுமே அவர் வெற்றி பெறுகிறார். நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தான். அமைதியாக இருக்க முயற்சி செய்க நம்முடைய பணியில் அதிக கவனம் செலுத்துக. நம்மைச் சுற்றி பல தவறுகள் நடக்கின்றன. அவை எல்லாவற்றையும் நம்மால் மாற்ற முடியுமா? அவற்றில் நம்மால் மாற்ற முடிந்தவைகளை மட்டும் மாற்ற முயற்சித்திடுக ஆயினும் அவற்றுள் ஒவ்வொரு செயலிலும் நாம் தொடர்ந்து தலையிட்டுக்கொண்டே இருந்தால், நாம் எப்போது நம்முடைய இலக்கை நோக்கி செயல்படமுடியும்? சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரத்தின் கைப்பாவையாகநாம் இருக்கவேண்டாம். சமூக ஊடகங்களில் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி கவலைபடாமல் அவைகளை அப்படியே போகட்டும் என விட்டிடுக ஆனால் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும், நமக்கான புதிய திறன்களையும் செயல்களையும் கற்றுக் கொள்வதற்கான சிறந்த தொரு கருவியாக அதனை பயன்படுத்தி கொள்க.
அதை நேர்மறையாக மட்டும் பயன்படுத்திடுக. நமக்கும் நம்முடைய தொழிலுக்கும் தொடர்பில்லாத முக்கியமில்லாத செய்திகளை அப்படியே விட்டுவிட கற்றுக்கொள்க.