சனி, 26 பிப்ரவரி, 2022

தக்காளிப் பை - ஆசிரியரால் குழந்தைகளுக்கான பணி ஒதுக்கீடு

 


ஒரு நாள் ஒரு ஆசிரியை தன் மாணவர்களிடம், "நாளை, நீங்கள் அனைவரும் ஒரு பையில் சில தக்காளிகளை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு வாரவேண்டும், ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் எத்தனை தக்காளிகளை கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது" என்றார். உடன் மாணவர்கள் அனைவரும், "அந்த நிபந்தனை என்ன ?" என ச்ந்தகேம் எழுப்பினார் அதற்கு அவ்வாசிரியர், "நீங்கள் வெறுக்கும் ஒவ்வொருநபரின் பெயரைச் சொல்லி ஒவ்வொரு நபருக்கும் ஒரு , தக்காளி வீதம் நீங்கள் வெறுக்கும் நபர்களுக்கு சமமான எண்ணிக்கையில் தக்காளிகளைக் கொண்டு வர வேண்டும் . உதாரணமாக ஒரு மாணவன் ஐந்து நபர்களை வெறுக்கிறான் என்றால் அவன் ஐந்து தக்காளிகளைக் கொண்டு வர வேண்டும். என்றவாறு நீங்கள் ஒவ்வொரு நபரும் எத்தனை நபர்களை வெறுக் ன்றீர்களோ அதற்கேற்ற எண்ணிக்கையில் தக்காளிகளை கொண்டுவர வேண்டும்" என்ற நிபந்தனைய கூறினார். அவ்வாறே மறுநாள, மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்தவுடன் தங்களுடைய வகுப்பு ஆசரிரயர் ோரியவாறு தாங்கள் கொண்டுவந்த தக்காளிகளை ஆசிரியரிடம் காட்டினார்கள். சில மாணவர்களிடம் இரண்டு, சிலரிடம் ஐந்து, சிலரிடம் இருபது தக்காளிகள் கூட அவர்களுடைய பைகளில் இருந்தன. தொடர்ந்து அவ்வாசிரியர்ர், "உங்கள் அனைவருடைய பணி என்னவெனில், நீங்கள் அனைவரும் இந்த தக்காளிப் பையை வாரம் முழுவதும் எங்கு சென்றாலும் எப்போதும் கைகளில் எடுத்துச் செல்ல வேண்டும், என்பதேயாகும்" எனக்கோட்டுகொண்டார் அதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் அந்த பணியை ஒப்புக்கொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல, தக்காளிகள் கெட்டுப்போக ஆரம்பித்த, அதன் காரணமாக பையில் இருந்து கெட்டுப்போன தக்காளிகளின் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அந்த வார முடிவில், ஆசிரியர் மாணவர்களிடம், "இந்த ஒரு வாரம் எப்படி உணர்ந்தீர்கள்?" என்ற கேள்வியை எழுப்பினார் உடன் அனைத்து மாணவர்களும் , "மோசமா துர்நாற்றத்துடன் கூடிய தக்காளிகளுடன்கூடிய பையை தொடர்ந்து கைகளில் எடுத்துச் செல்வதால் அதிக எடையும் துர்நாற்றமு்ம் தாங்க முடியவில்லை" என இது குறித்து புகார் தெரிவித்தனர். இதனை கண்டு ஆசிரியர் புன்னகைத்து, " நீங்கள் வெறுக்கும் நபரை தொடர்ந்து உங்களுடைய மனதில் சுமந்து கொண்டு செல்வதற்கு இது மிகவும் ஒத்திருக்கிறது, நீங்கள் ஒருவரைப் பிடிக்காதபோது, ​​​​அந்த வெறுப்பை நீங்கள் எங்கும் கொண்டு செல்கிறீர்கள், அந்த வெறுப்பு மனத்தை ஆரோக்கியமற்றதாக்குகின்றது. கெட்டுப்போன தக்காளியின் துர்நாற்றத்தினையே உங்களால் ஒரு வாரத்திற்குத் தாங்க முடியாவில்லை, அவ்வாறே நீங்கள் வெறுக்கும் நபரை பற்றிய எண்ணத்தினை மனதில் நீங்கள் தினமும் எடுத்துச் செல்லும்போது வெறுப்பின் கசப்பு உங்கள் மனத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். அதனால் யாரையும் வெறுக்கின்ற சிந்தனையை மனதில் கொணடு செல்லாதீர்கள்" என அறிவுரை கூறினார்

நம்முடைய மனம் ஒரு அழகான தோட்டம் போன்றது, தேவையற்றவற்றை தொடர்ந்து மனதில் வைத்து கொண்டிருக்காமல் அதனை அவ்வப்போது துடைத்து சுத்தம் செய்திடுக


ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

விளைச்சலின் பங்கு பிரிப்பதில் நண்பர்களின் வாக்குவாதம்

 


ஒரு கிராமத்தில் சிவப்பன் கருப்பன் ஆகிய இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் சேர்ந்து ஒரு நிலத்தை வாங்கி, அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தனர். நாள் முழுவதும் உட்கார்ந்து பிரார்த்தனை செய்தால் கடவுள் தனக்காக எல்லா பணிகளையும் செய்து தனக்கு தேவை.யான பொருட்களை கொடுத்திடுவார் என்று சிவப்பன் நம்பினான்ஆனால்ருப்பன் தங்களுடைய நிலத்தில் இரவும் பகலும் கடினமாக உழைத்தான். ருப்பன் சிவப்பனை தன்னை போன்று தங்களுடைய வயலில் இறங்கி தன்னுடன் சேர்ந்து பணிசெய்யுமாறு பலமுறைகோரினான், ஆனால்சிவப்பன் அதனை மறுத்து, அதற்குப் பதிலாக கோவிலுக்குச் சென்று அங்கேயே உட்கார்ந்து நாள்முழுவதும் கடவுளை தியானித்து கொண்டிருப்பான். நாட்கள் பலகடந்த, பல மாதங்கள் கழிந்தபின்னர், வயலில் பயிர் அறுவடைக்குத் தயாராகஇருந்தது.ருப்பன் தங்களுடைய வயலில் விளைந்த பயிரை அறுவடை செய்த சந்தைக்கு எடுத்துச் சென்று நல்ல விலைக்கு விற்றான், பினனர் ருப்பன் சிவப்பனிடம், "நான் வயல்களில் இறங்கி கடினமாக உழைத்தவன் என்பதால் எனக்கு அதிக பங்குஇருக்வேண்டும்" என்று கூறினான். இதைக் கேட்ட சிவப்பன், "இல்லையில்லை. நான் கோவிலுக்குச் சென்று நல்ல விளைச்சலை தருமாறு இரவு பகலாக கடவுளிடம் பிரார்த்தனை செய்ததால்தான் நமக்கு அதிக விளைச்சல் கிடைத்தது அதனால் எனக்குதான் அதிகப் பங்குஇருக்க வேண்டும்" என்றான்.இருவருக்கும் வாக்குவாதம்ம்ஏற்பட்டது தகராறாக முற்றியது. இறுதியாக, அவர்கள் இருவரும் இறுதி முடிவுக்காக கிராமத் தலைவரிடம் சென்றனர். இருவரது பேச்சையும் கேட்ட ஊர் தலைவர் மண்ணும் கற்களும் கலந்த இரண்டு மூட்டை அரிசியை எடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு மூட்டை வீதம் கொடுத்து, "நாளை காலைக்குள், நீங்கள் இருவரும் இந்த மூட்டை யிலுள்ள அரிசியிலிருந்து மண்ணையும் கற்களையும் பிரித்து கொண்டுவர வேண்டும். அவ்வாறு நாளை கொண்டு வந்தால் உங்களுடைய வயலில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் யாருக்கு அதிக பங்கு கிடைக்கும் என்பதை தீர்மானிக்க முடியும். " என கேட்டுகொண்டார் பிறகுஇருவரும் மண்ணும் கற்களும் கலந்த அரிசி மூட்டையுடன் தங்கள் வீட்டிற்குச் சென்றனர்.ருப்பன் இரவு முழுவதும் கண்விழித்து அரிசியுடன் கலந்திருந்த மண்ணையும் கற்களையும் பிரித்து சுத்தமான அரிசியை மட்டும் தனியாக எடுத்தான் சிவப்பன் அரிசி மூட்டையுடன் கோவிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து தனக்கு அரிசியிலிருந்து மண்ணையும் கற்களையும் பிரித்துத் தரும்படி இரவு முழுவதும் கடவுளிடம் வேண்டிக் கொண்டேயிருந்தான். மறுநாள் காலை இருவரும் அரிசி மூட்டையுடன் வந்தனர். கிராமத் தலைவர் முதலில்கருப்பனிடம் அரிசி மூட்டையைக் காட்டச் சொன்னார். இரவெல்லாம் கண்விழித்து அரிசி மூட்டையிலிருந்து மண்ணையும் கற்களையும் பிரித்ததால் கருப்பனின் அரிசி சுத்தமாக இருந்தது. பின்னர் சிவப்பனிடம் சுத்தம் செய்த அரிசியைகாட்டும்படி கோரினார்.சிவப்பன் இரவுமுழுவதுமான தன்னுடைய வேண்டுதலினால் கடவுள்கண்டிப்பாக தன்னுடைய மூட்டையிலிருந்த அரிசியை சுத்தம் செய்திருப்பார் என்ற தன்னம்பிக்கையுடன் தனது அரிசி மூட்டையை கிராமத்த தலைவரிடம் காட்டி, "எனக்கு கடவுள் மீது முழு நம்பிக்கை உள்ளது. இரவு முழுவதும் நான் பிரார்த்தனை செய்ததால் அரிசி அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டிருக்கும்"என்றான். கிராம்த்தலைவர் சிவப்பனின் அரிசி மூட்டையைத் திறந்து பார்த்தபோது , அரிசியுடன் மண்ணும் கற்களும் கலந்தவாறுஅப்படியே இருந்தன. சுத்தமான அரிசியை காணமுடியவில்லை உடன் கிராம்த்தலைவர், "பயிர்களை விற்று வரும் பணத்தின் முக்கால் பங்குருப்பனுக்குச் சேரும் என்றும் கால்பங்கு மட்டுமே சிவப்பனுக்கு சேரவேண்டும் என்றும்" தீர்ப்பதளித்தார். சிவப்பன் இந்த தீர்ப்பில் மிகுந்த ஏமாற்றம் அடைந்தான். அதனால் கிராமத் தலைவர் ிவப்பனிம், " பிரார்த்தனை செய்வது நல்லதுதான் ஆனால் கடவுள் கூட நன்கு கடினமாக உழைப்பவரர்களுக்கே உதவுவார் உன்னைபோன்று உழைக்காமல் சோம்பேறிகளுக்கெல்லாம் உதவமாட்டார் போய் முதலில் நான்கு கடினமாக உழைக்க துவங்கு ." என அறிவுரித்தினார் ரிசிவப்பன் தன் தவறை உணர்ந்து, அன்று முதல் அவனும் தன் நண்பனுடன் வயலில் இறங்கி கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்.

சனி, 5 பிப்ரவரி, 2022

ஆற்றில் பேராசை யுடன் மீன்பிடித்தல்

 

ஒரு காட்டில். எப்பொழுதும் அதிகஅளவு உணவு உண்ணுவதையும் உறங்குவதையுமே தொழிலாக கொண்ட கரடி ஒன்று  வாழ்ந்துவந்தது. ஒருநாள் காலை உணவு உண்டபின் நன்றாக உறங்கிவிட்டது திடீரென.  விழித்தெழுந்தபோது  மதியம்அதிகநேரம் ஆகிவிட்டதால் அந்த கரடிக்கு வயிற்றில் அதிகமாக பசி எடுத்தது. மழை பொழிந்து கொண்டும் மேகமூட்டத்துடனும் இல்லாமல் அன்று வானம் மிகத்தெளிவாகவும் பிரகாசமாகவும் இருப்பதைக் கண்டது.

. "இன்று பரவாயில்லை மழையெதுவுமில்லாமல்  வானிலை நன்றாக உள்ளது  இத்தகைய நல்ல வானிலையில்  அருகிலுள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றால் நன்றாக இருக்கும்", என எண்ணிக் கொண்டே அருகிலிருந்த ஆற்றை நோக்கி நடந்தது. ஆற்றங்கரைக்கு சென்றதும், "ஆற்றில் இன்று  பெரிய மீன் ஒன்றுமட்டும் கிடைத்தால் கூட போதும் நம்முடையப்  பசி அடங்கிவிடும் ஆனால் சிறியமீனாக இருந்தால் நிறைய பிடிக்க வேண்டும்"  என நினைத்தது. அதனால்  பெரிய மீன் கிடைக்கவேண்டும் என்ற அதிக எதிர்பார்ப்புடன் ஆற்றில்இறங்கி ஓடிடும் தண்ணீரில்  கைகளால் துழாவியபோது கையில் ஒரு மீன் சிக்கியது. மிகவும் மகிழ்ச்சியாக "ஆஹா! இன்று ஆற்றில் இறங்கி மீன் பிடிப்பதற்காக கைகளால் துழாவ துவங்கிய உடனேயே நமக்கு ஒருமீன் கிடைத்து விட்டதே!” என மிக மகிழ்ச்சியாக கையை தண்ணீருக்கு வெளியில் எடுத்து  பார்த்தபோது: அது ஒரு சிறிய மீன் என அறிந்து மிக ஏமாற்றமடைந்துவிட்டது

"இவ்வளவு சிறிய மீனைக் கொண்டு எப்படி என் பசியைப் போக்க முடியும்" என்று நினைத்தது.  "பெரிய மீன் ஒன்று மட்டும் கிடைத்து சாப்பிட முடிந்தால், பசி முழுதாக அடையும்:” என நினைத்துக் கொண்டு கையில் கிடைத்த அந்த சிறிய மீனை மீண்டும் ஆற்றில் வீசிவிட்டு கரடியானது  அந்த ஆற்றில்மீண்டும் மீன் பிடிக்கத் தயாரானது. சிறிது நேரம் கழித்து  மீண்டும் மற்றொரு மீன் கையில்சிக்கியது, வெளியிலெடுத்து பார்த்தபோது  அதுவும் சிறியதாக இருந்தது. அதனால் அந்த சிறியமீனையும் மீண்டும் ஆற்றில் வீசி எறிந்தது.

இவ்வாறு கரடியானது அந்த ஆற்றில் கையால் துழாவி பல முறை மீனை பிடித்தபோதும், ஒவ்வொரு முறையும்  கையில்  சிறிய மீன்தான் கிடைத்ததே தவிர பெரிய மீன் கிடைக்கவேயில்லை, அதனால் ஒவ்வொருமுறையும் அடுத்த முறை பெரிய மீன் நம்முடைய கையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் மீண்டும் கையில் கிடைத்த சிறிய மீன்களை ஆற்றில் வீசுி எறிந்து கொண்டேயிருந்தது.

அவ்வாறு அவ்வப்போது கையில் கிடைத்த சிறிய மீனை ஆற்றில் நாள் முழுவதும் மீண்டும் எறிந்து கொண்டே யிருந்ததால் மாலைநேரமாகிவிட்டது, பெரிய மீன்பிடிப்பதற்கான பணியும் தாமதமாகிகொண்டே வந்தது .ஆயினும் இதுவரையிலும்  ஒரு பெரிய மீனைக் கூட அந்த கரடியின் கைகளில் சிக்கவில்லை. வயிற்று பசியும் தீரவில்லை கூடுதலாகி கொண்டே யிருந்தது மிகவும் சோர்வாகிவிட்டதால், அதற்குமேலும் உணவைத் தேட முடியாமல், வெறும் வயிற்றோடு அந்த ஆற்றங்கரையிலேயே கிழேதரையில் படுத்துவிட்டது. அவ்வாறு படுத்துகொண்ட பின்னர் இதுவரையில், தன்னுடைய கைகளால் பிடித்து மீண்டும் ஆற்றில் வீசிய சிறு மீன்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது "அடடா.! பெரிய மீன் ஒன்று இருந்தால் தான்  , நம்முடைய வயிற்று பசியை நிரப்புமுடியும்  என்ற பேராசையில் கையில் கிடைத்த  சிறிய மீன்களை எல்லாம் மீண்டும் மீண்டும் ஆற்றில் வீசி எறிந்துவிட்டேனே அவைகளை ஒவ்வொன்றாக  சாப்பிட்டிருந்தால் கூட நம்முடைய பசி அடங்கி யிருக்குமே இவ்வளவு பசியினால் சோர்வாகி படுத்திருக்க மாட்டேனே!" என எண்ணியது காலம் கடந்தபின் ஞானம் வந்து  என்ன பயன்.?

நம்மிடம் உள்ள எந்தவொரு பொருளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்க. அது சிறியதாக இருந்தாலும், எதையும் விட அதுவே சிறந்தது எனஅறிந்து கொள்க.


பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...