சனி, 14 மே, 2022

வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த நேரம் எது


ஒருமுறை கோடீஸ்வரர் ஒருவரிடம் ஒருவர் நேர்காணல் செய்தார். நேர்காணல் செய்பவர் கோடீஸ்வரரிடம், "ஐயா, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த நேரம் எது?" என வினவினார்
  இதற்கு கோடீஸ்வரர், “நான் வாழ்க்கையின் மகிழ்ச்சியில் நான்கு நிலைகளைக் கடந்துள்ளேன், இறுதியாக  உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தம் புரிந்தது.
 நான் செல்வத்தையும் வளங்களையும் குவித்தது என்னுடைய முதல் கட்டமகிழ்ச்சியாகும். அதாவது இந்த கட்டத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன், ஆனால் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.
நான் மதிப்புமிக்க பொருட்களையும் அரிய பொருட்களையும் சேகரிக்கத் தொடங்கியபோது இரண்டாவது கட்டமகிழ்ச்சியாகும், ஆனால் இதுவும் தற்காலிகமானது விலைமதிப்பற்ற பொருட்களின் பளபளப்பினால் உருவான என்னுடைய மகிழ்ச்சி  நீண்ட காலம் நீடிக்காது என்பதை உணர்ந்தேன்.
பின்னர் மூன்றாவது கட்டம் வந்தது, அதில் எனக்கு பெரிய செயல்திட்டம் கிடைத்தது, அந்த நேரத்தில் எனது நாட்டில் பெட்ரோலிய விநியோகத்தில் 95% மீது நான் கட்டுப்பாட்டை வைத்திருந்தேன், மேலும் ஆசியாவிலும்  ஆப்பிரிக்காவிலும் உள்ள நாடுகளுக்கு கிடையே கடல் போக்குவரத்தினை கட்டுபடுத்திடுகின்ற மிகப்பெரிய கப்பல் உரிமையாளரானேன். ஆனால் அந்த நேரத்திலும் நான் நினைத்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.
பின்னர் நான்காவது கட்டம் வந்தது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகள் வாங்கித் தருமாறு எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டபோது. நண்பரின் ஆலோசனையின்படி உடனடியாக அவற்றை கொள்முதல் செய்தேன் அதனை தொடர்ந்து  அவருடன் சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகளை நானே ஒப்படைக்க வேண்டும் என்று என் நண்பர் வலியுறுத்தினார். அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் நான் ஒப்புக்கொண்டு அவருடன் சென்றேன்.
நான் அந்த இடத்தை அடைந்து, அந்தக் குழந்தைகளுக்கு நானே சக்கர நாற்காலிகளைக் கொடுத்தேன். அந்த சக்கர நாற்காலிகளை அவர்களிடம் ஒப்படைக்கும் போது, அந்தக் குழந்தைகளின் முகத்தில் ஒரு வித்தியாசமான மகிழ்ச்சியை கண்டேன். பின்னர், அவர்கள் அனைவரும் அந்த சக்கர நாற்காலியில் அமர்ந்துமிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதை கண்டேன்.
நாங்கள் அனைவரும் சுற்றுலா மையத்தில் இருப்பது போலவும், அவர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது போலவும் எனக்கு மனத்தில் காட்சி தோன்றியது.
அப்போது எனக்குள் உன்மையான மகிழ்ச்சியை உணர்ந்தேன். நான் அவ்விடத்தை விட்டு கிளம்பும் போது, அந்தக் குழந்தைகளில் ஒருவன் என் கால்களை இறுக்கமாக கட்டிபிடித்துகொண்டான்.
நான் குனிந்து அக்குழந்தையிடம்  - உனக்கு வேறு ஏதாவது தேவையா? என வினவியபோது அந்த குழந்தை  - இல்லை, நான் உங்கள் முகத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன், அதனால் நான் உங்களைமீண்டும் சந்திக்கும் போது, நான் உங்களை அடையாளம் கண்டு மீண்டும் ஒருமுறை நன்றி கூற முடியும்.
எனப்பதில் கூறியது இந்த பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், வாழ்க்கையைப் பற்றிய எனது பார்வையை முற்றிலும் மாற்றியது. அந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தேன், உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை உணர்ந்தேன்.
கற்றல்: மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற செயலே உண்மையான மகிழ்ச்சியாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...