ஒருமுறை அரசன் ஒருவனின் கனவில் தன் பற்கள் அனைத்தும் உடைந்திருப்பதை போன்றும் பெரிய முன்பல் ஒன்று மட்டும் எஞ்சியிருந்ததைபோன்றும். கண்டார் அந்த அரசன் அத்தகைய கனவைக் கண்டதால் மிகவும் மனம்கலங்கினார்.
மறுநாள் காலையில், அந்த அரசன் தனது கனவை அமைச்சரிடம் விவரித்தார், அதன் அர்த்தத்தை அறிய விரும்பினார். உடன் அவ்வாறான கனவுகளுக்கான அர்த்தத்தை கூறுகின்ற கனவு நிபுணர்களை அழைத்து அந்த கனவின் அர்த்தம் குறித்து கேட்க வேண்டும் என்று அமைச்சர் அரசனிடம் அறிவுறுத்தினார்.
அதனால் தன்னுடைய நாட்டில் உள்ள கனவு நிபுணர்கள் அரசவைக்கு நேரில் வந்து, அரசனின் கனவின் அர்த்தத்தை சரியாக கூறிடுமாறும் அதைச் சரியாகக் கணிக்கக்கூடிய எவருக்கும்தகுந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் அந்த நாடுமுழுவதும் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது, .
ஒரு நாள் கழித்து, கனவு நிபுணர் ஒருவர்அரசவைக்கு வந்து அந்த அரசனை வணங்கி, “அரசே! உங்கள் கனவின் சரியான அர்த்தத்தை என்னால் கூற முடியும்". எனக்கூறினார்
அரசன் தான் கண்ட தனது கனவு முழுவதையும் அவரிடம் கூறியபின்னர் , "சொல்லுங்கள், இந்த கனவின் அர்த்தம் என்ன?" என அவரிடம் வினவினார்
தொடர்ந்து கனவு நிபுணர் சோகமான முகத்துடன், “அரசே! உங்கள் கனவு சோகமானது. உங்களது உறவினர்கள் அனைவரும் உங்களுக்கு முன் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிடுவார்கள் என்பதை இந்தக் கனவு உணர்த்துகின்றது". என அரசனின கனவிற்கான அர்த்தமாவதாகக் கூறினார்
இதைக் கேட்ட மன்னன் கோபமும் வருத்தமும் அடைந்து தன் காவலாளிகளை அழைத்து உடனடியாக அந்த கனவு நிபுணரை கைது செய்து சிறையில் அடைக்கு மாறு உத்தரவிட்டார்.
அடுத்த நாள், மற்றொரு கனவு நிபணர் அந்த அரசவைக்கு வந்து, “அரசே! இப்போது என்னிடம் உங்கள் கனவைச் சொல்லுங்கள், அதன் அர்த்தத்தை நான் உங்களுக்குச் சொல்ல முடியுமா என முயற்சிசெய்கின்றேன்" என வேண்டி நின்றார். அரசன் அந்த கனவு நிபுணரிடம் தனது கனவை விவரித்தார்
அதைக் கேட்டஅந்தமற்றொரு கனவு நிபணர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “அரசே இது ஒரு நல்ல கனவு. நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அந்த கனவு உங்கள் உறவினர்களை விட நீங்கள் நீண்டநாட்கள் நிறைவான வாழ்க்கையைப் பெறுவீர்கள் என்பதே இதன்அர்த்தமாகும்" எனக்கூறினார்
இதைக் கேட்ட அரசன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அவருக்கு ஏராளமான பொற்காசுகளை பரிசாக வழங்கினார்
, இருவரும் அரசனின் கனவுக்கு ஒரே அர்த்தத்தைதான் கூறினார்கள், ஆனால் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார், மற்றவர் பரிசு பெற்றார். முதல் கனவு நிபுணர் அரசனுக்கு கனவின் அர்த்தத்தை சொல்ல நேர்மறையானசொற்களை பயன்படுத்தாததால் கைது செய்யப்பட்டார், மற்றொருவர் அதே செய்தியை தெரிவிக்க நேர்மறையான சொற்களை பயன்படுத்தி கனவின் அர்த்தத்தை கூறினார் அதனால் பரிசுகளை பெற்றார்.
கற்றல்: நாம் ஒரு செய்தியைச் சொல்லும்போது, அதை எவ்வாறுச் சொல்கிறோம்,அதாவது அந்தச் செய்தியை மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு நாம் தேர்ந்தெடுக்கும்சொற்கள் நேர்மறையாகவா அல்லது எதிர்மறையாகவாஎன்பதை பொருத்து, பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அதனால் எப்போதும் செய்திகளை கூறும் சொற்களை புத்திசாலித்தனமாக நேர்மறையானதைதேர்ந்தெடுத்திடுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக