ஒரு மனிதன் பழக்கடைை ஒன்றிற்கு பழங்கள் வாங்கச் சென்றார். அவர் கடைக்காரரிடம், "வாழைப்பழம் என்னவிலை?, ஆப்பிள் என்ன விலை ?" என வினவினார்.உடன் பழக்கடைக்காரர் ,"வாழைப்பழம் டசன் 20ரூபாய், ஆப்பிள் கிலோ 100ரூபாய்." என பதலளித்தார்.அதே நேரத்தில், ஒரு பெண் அந்த பழக்கடைக்கு வந்து, "அண்ணா, எனக்கு ஒரு கிலோ ஆப்பிள் ஒரு டஜன் வாழைப்பழம் வேண்டும். அவை என்ன விலை ?" என வினவினார் .அதனை தொடர்ந்து அந்த பழக்கடைக்காரர், "வாழைப்பழம் டசன் 5 ரூபாய், ஆப்பிள் கிலோ 25ரூபாய் " என்றார்.
பழக்கடையில் ஏற்கனவே பழங்களின் விலையை கேட்டு நின்றுகொண்டிருந்த வாடிக்கையாளர் பழக்கடைக்காரரை கோபமாக கொன்றிடும்மனநிலையுடன் பார்த்தார், இதைக் கவனித்த பழக்கடைகாரர், அவரிடம் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறினார்.
அந்தப் பெண் தனக்கு தேவையான பழங்களை எடுத்துக்கொண்டு அவைகளுக்கான விலையைச் செலுத்தியிபின், "மிக்க நன்றி அண்ணா, இன்று எங்களுடைய குழந்தைகள் இந்த பழங்களை மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்." என பழக்கடைக்காரரிடம் நன்றிகூறியவாறு மிகமகிழ்ச்சியுடன் கடையை விட்டு வெளியேறினாள்
அந்த பெண் சென்ற பிறகு. பழக்கடைக்காரர் கோபப்பார்வையுடன் ஏற்கனவே காத்துகொண்டிருந்த வாடிக்கை யாளரைப் பார்த்து, "மிக்கநன்றி சகோதரரே, நான்இந்த பழங்களுக்குஉங்களிடம் அதிக விலைகூறி உங்களை ஏமாற்றவில்லை" எனக்கூறத் துவங்கியபின் சிறிது நேரம் நிறுத்தியபின் தொடர்ந்தார், "இப்போது நீங்கள் பார்த்த இந்த பெண் ஒரு ஏழை விதவை, நான்கு குழந்தைகளின் தாய், அவள் எங்களுடைய வீட்டிற்கு அருகில் வசிக்கிறாள், அவளுக்கு உதவ நான் பல முறை முயற்சித்தேன், ஆனால் அவள் யாரிடமிருந்தும் எந்தவொரு உதவியையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அதனால் அவளுக்கு உதவ தற்போதைய இந்த வழியை யோசித்தேன். அவள் இந்த பழக்கடைக்கு பழங்கள் வாங்க வரும்போதெல்லாம், நான் அவளுக்கு விலையை குறைத்து பழங்களைக் கொடுக்கிறேன். நான் உதவி செய்வதா கவோ, மற்றவர்களைச் சார்ந்து இருப்பதாகவும் அவள் உணர முடியாதவாறு இந்த வழி யமைந்துள்ளது. அவளுக்கு நான் உதவியை வழங்குவதற்கான இதுதான் சரியான ஒரே வழியாகும் மேலும் அண்ணே, இந்தப் பெண்மணி வாரத்திற்கு ஒருமுறை இந்த பழக் கடைக்கு வரும்போது, அந்தநாளில் , என் கடைவிற்பனையும் கூடுகிறது." என மிக நீண்ட விளக்கமளித்தார் இதைக் கேட்டு வாடிக்கையாளர்களின் கண்களில் கண்ணீர் பெருகியது, அவர் கடைக்காரரிடம் கைகுலுக்கி பேரம் பேசாமல் மகிழ்ச்சியுடன் பழங்களை வாங்கி சென்றார்.