சனி, 2 ஜூலை, 2022

ஒருவரின் தவறை துடைக்க முயற்சி! -

 இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதிலை தன்னுடைய பேனாவைப் பயன்படுத்தி எழுதத் தொடங்கிய ஒரு மாணவன், எழுதும் போது தவறு நேர்ந்துவிட்டதால் ஆசிரியரிடம் சமர்ப்பிக்கும் முன் அதை அழிக்க முயன்றான் அதற்காக அந்த மாணவன் அழிப்பதற்கான மையை பயன்படுத்தி அழி்க்க முயற்சிசெய்தான், ஆனால் சிறிது நேரம் கழித்து, தனது தவறு  தெரியும் என எண்ணியதால், தனது தவறை அழித்து நீக்கம் தன்னுடைய உமிழ்நீரை பயன்படுத்தி அழித்தான் அது வேலை செய்தது ஆனால் அம்மாணவனது காகிதம் பொத்தலாகிவிட்டது.
 அம்மாணவன் தான் எழுதிய கேள்விக்கான பதிலை ஆசிரியரிட ம் அப்படியே சமர்ப்பித்தான். இவை அனைத்தின் காரணமாக, அம்மாணவனது குறிப்புத்தாள் அழுக்காகிவிட்டது, மேலும் இவ்வாறு மோசமான பணியின் காரணமாக  தனது ஆசிரியரின் திட்டுதலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
வேறொரு நாள், மற்றொரு ஆசிரியரின் கேள்விக்கும் அம்மாணவன் குறிப்பேட்டில் பதில் எழுதிடும்போதும் இதேபோன்று செய்த குறிப்பேட்டினை அவ்வாசிரியர் பார்த்தார்.
தொடர்ந்து அந்த ஆசிரியர் அம்மாணவனிடம், ‘உன்னுடைய குறிப்புத்தாளில் பொத்தல்  உண்டாக்கும் அளவுக்கு உன் தவறை ஏன் அழிக்க முயன்றாய்?" என வினவியபோது அம்மாணவன் , "ஏனென்றால் மற்றவர்கள் என் தவறுகளைப் பார்க்க நான் விரும்பவில்லை", என பதிலளித்தான்.
இதைக் கேட்ட ஆசிரியர் சிரித்துக்கொண்டே, “எப்போது தவறு செய்தாலும் அதைக் கடந்து செல்க . அதற்கு பதிலாக  தவறுகளை அழிக்க முயற்சிப்பது உன்னுடைய குறிப்புத்தாளில் மட்டுமே சேதப்படுத்தும். என எ்ண்ணி தவறைத் துடைக்க முயற்சிப்பது உன்னுடைய குழப்பத்தைப் பற்றி பலருக்குத் தெரிய வைக்கும். அதனால்,அதைக் கடந்து செல்க. உன்னுடைய தவறை மறைக்க முயற்சிப்பதன் விளைவாக உன்னுடைய குழப்பத்தை வெளிப்படுத்திடவேண்டாம்."  என மிகநீண்ட அறிவுரை கூறினார்

என்ன வாசகரே நீங்களும் உங்களிடம் உருவான தவறை அழித்த ஒழிப்பதற்காக முயற்சி செய்து அதுகுறித்து தெளிவில்லாத உங்களுடைய குழப்பத்தை வெளிப்படத்திட போகின்றீர்களா

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...