சனி, 9 ஜூலை, 2022

ஆசிரியருக்கு மாணவர் பதில்!


ஒருமுறை வகுப்பில் ஆசிரியர் ஒரு மாணவனிடம், ‘நமக்கு எவ்வளவு சிறுநீரகங்கள் உள்ளன?” என கேள்வி கேட்டார்.
உடன் அம்மாணவன்"நான்கு" என பதிலளித்தான்.
"என்ன? நான்கா?”, என அந்த ஆசிரியர் ஆச்சரியபட்டார்
ஆசிரியர் தன்னிடம் பயிலும் மாணவனிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர்மீண்டும் , "இந்த பதிலில் நீ உறுதியாக இருக்கின்றாயா?" என உறுதிபடுத்திடு்மாறு மீண்டும் வினவியோது
அம்மாணவர் "ஆம்  உறுதியாக", என மீண்டும் பதிலளித்தான்
 அம்மாணவன்  கேள்வியை சரியாக புரிந்து  கொள்ளவில்லை அதனால் சரயான பதில் வரவில்லை. என எண்ணி அந்த ஆசிரியர் அந்த மாணவனிடம் சரியான பதிலை வரவழைக்க மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தார்,  அதனால் அவ்வாசிரியர் இம்முறை , "உனக்கு எத்தனை சிறுநீரகங்கள் உள்ளன?" என மீண்டும் வினவியபோது
இம்முறை அம்மாணவர், “இரண்டு” என மிகச்சரியாக பதிலளித்தான்.
அம்மாணவனிடமிருந்து  எத்தனை சிறுநீரகங்கள் உள்ளன எனும் சரியான பதில் கிடைத்ததில் ஆசிரியர் மிகமகிழ்ச்சி அடைந்தார். அதனால் அம்மாணவனிடம், ‘உனக்குதான் சரியான பதில் தெரிந்துள்ளதே இதற்கு முன் ஏன் நான்கு சிறுநீரகங்கள் உள்ளன எனபதில் கூறினாய்? ” என வினவியபோது அம்மாணவர் அப்பாவியாகப், “அப்போது, நம்மிடம் எத்தனை சிறுநீரகங்கள் உள்ளன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் - உங்களுக்கு இரண்டு எனக்கு இரண்டு. நம்மிருவருக்கும் சேர்ந்து  நமக்கு நான்கு தானே சரியாகும் நீங்கள் நமக்கு எத்தனை சிறுநீரகங்கள் என்றுதான் பன்மையாக கேள்விகேட்டீர்கள் அதனால் அதற்கு பதிலாக பன்மையாக நான்கு எனக்கூறினேன் தற்போது உனக்கு என மட்டும் கேள்விகேட்டதால் எனக்கு இரண்டு எனக்கூறினேன்." என மிக நீண்ட பதில் அளித்தான்  
என்ன வாசகரே அந்த மாணவரின் பதில் சரிதானே




கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...