சனி, 16 ஜூலை, 2022

புலிக்கும் கழுதைக்கும் (முட்டாளுக்கும்) இடையிலான வாக்குவாதம்

 
ஒருமுறை ஒரு கழுதைக்கும் புலிக்கும் புற்களின் நிறம் பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. புறஅகளின் நிறம் நீலம் என்று கழுதை சொன்னது, புற்களின் நிறம் பச்சை என்று புலி சொன்னது.
அதனைதொடர்ந்து விரைவில், இரண்டும் கட்டி புரளும் அளவிற்கு வாக்குவாதம் சூடுபிடித்தது அதனால் இருவரும் தங்களுடைய பிரச்சினையை நடுவர் மன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் விலங்குகளின் அரசனான சிங்கத்தினை அணுகினர்.
அவர்கள் சிங்கத்தை நெருங்கியதும், கழுதையானது, "அரசே நீங்கள்தான் எங்களைவிட மிக உயர்ந்தவர், புற்களானவை நீலநிறத்தில் இருப்பது உண்மையல்லவா" என பணிவாக கூறியது.
அதற்கு சிங்கம், "நீ நம்பினால், அதுதான் சரி" என்று பதிலளித்தது.
கழுதை தொடர்ந்தது, “ஆனால் புலி மட்டும் என்னுடன் உடன்படவில்லை. அவர் புற்களானவை பச்சையாக இருக்கின்றன, எனத்தவறாக கூறுகின்றது அதனாால் அரசே தயவுசெய்து அவரை தண்டித்திடுக " என தன்னுடைய குற்றச்சாட்டினையும் தன்னுடைய வாதத்தினையும்  கூறியது.
உடன் சிங்கம் புலிக்கு மூன்று நாட்கள் மவுன தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதைக் கேட்டு, கழுதை மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து,"புற்கள் நீலமானவை... புற்கள் நீலமானவை.." என திருப்தியுடன் கத்திகொண்ட திரும்பிச் சென்றது.

அங்கு உடன் நின்றுகொண்டிருந்த புலியானது இதைப் பார்த்தவுடன், சிங்கத்திடம், “எனக்கு ஏன் மூன்று நாட்கள் மவுன தண்டனை விதித்தீர்கள்? புற்களின் நிறம் நீலம் அன்று பச்சை என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா" என தன்னுடைய வாதத்தினை விலங்குகளின் அரசனிடம் வைத்தது
அதற்கு விலங்குகளின் அரசனான சிங்கம், "ஆம், உண்மையில் புற்களின் நிறம் பச்சைதான்" என்று பதிலளித்தது.
உடன் புலியானது, “அப்படியானால் ஏன் எனக்கு மவுன தண்டனை வழங்கினீர்கள்? ” என்றுப தில் கேள்வியை விலங்குகளின் அரசனான சிங்கத்திடம் கேட்டது
அதற்கு சிங்கம், “உனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கும் புற்களின் நிறம் நீலமா பச்சையா என்ற கேள்விக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பது உன்னைப் போன்ற துணிச்சலான, புத்திசாலித்தனமான நபருக்கு இழிவுபடுத்தும் செயல் என்பதால் உனக்குஅந்த கழுதையுடன் பேசவேண்டாம் என மவுனத் தண்டனை வழங்கப்பட்டது. ” எனக்கூறியது
கற்றல்:எல்லா ஆதாரங்களையும் முன்வைத்தாலும் உண்மையைப் புரிந்து கொள்ளும் திறன் இல்லாதவர்கள்,  ஈகோ, வெறுப்பு  ஆகியவற்றால் மாற்று பதில்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பதில் குறியாக இருப்பார்கள்.
உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாமல், தனது நம்பிக்கைகள் அல்லது மாயைகளின் வெற்றியில் மட்டுமே ஆர்வமுள்ள ஒரு முட்டாளுடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும்.
 அதாவது அறியாமை கத்தும்போது, புத்திசாலித்தனம் அவ்விடத்தினை விட்டு நகர்ந்துவிடுகிறது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...