ஞாயிறு, 24 ஜூலை, 2022

சிறந்த தரமான சோளத்தை விளைவிப்பது - விவசாயத்தின் இரகசியம்!

 
ஒரு விவசாயி தன் வயல்களில் நல்ல தரமான சோளத்தை பயிரிட்டு வந்தார். அவர் தேசிய பயிர் கண்காட்சியில் பங்கேற்று ஒவ்வொரு ஆண்டும் வெற்றி பெற்று பரிசினை பெற்றுசெல்வார். அந்த ஆண்டு தேசிய கண்காட்சியில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டபோது, இந்த ஆண்டும் அந்த விவசாயி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஒவ்வொரு வருடமும் அந்த விவசாயிமட்டும் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை அறியும் ஆர்வத்தில் ஒரு நிருபர் அவரைப் பேட்டி காண  வந்தார், .. இதற்கிடையில், நிருபர் அவரைப் பற்றி அவரது பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் அவருக்கு அருகிலுள்ள விவசாயிகளிடமும் அந்த விவசாயியை பற்றி நன்கு விவரங்களை கேட்டு அவரைப் பற்றிய நல்ல செய்திகளை அறிந்ததும், அவரைப் பேட்டி காணஅந்த நிருபர் அதிக ஆர்வம் காட்டினார்.வெற்றி பெற்றவர்களை பற்றி அறிவிப்பு முடிந்த பின்னர், நிருபர் அவரிடம் சென்று, “உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். நீங்களே ஒவ்வொரு வருடமும் வெற்றி பெறுகிறீர்கள், அதற்கான இரகசியம் என்ன என கூறமுடியுமா?" என வினவினார் .அதற்கு விவசாயி, “உங்கள் வாழ்த்துக்கு மிக்கநன்றி.  எங்கள் கிரமாத்திலுள்ள அனைவரின் முயற்சியாலும் கடின உழைப்பாலும் நான்வெற்றி பெற முடிந்தது. " என பதில் கூறினார்.தொடர்ந்து நிருபர், “உங்களைப் பற்றி உங்களுடைய கிராமத்தில் விசாரித்ததில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தரமான விதைகளை உங்கள் அருகிலுள்ள வீட்டுக் காரர்களுடனும் மற்ற விவசாயி களுடனும் இலவசமாகப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதை அறிந்தேன். ஏன் அவ்வாறு செய்கின்றீர்கள்?" என மற்றொரு கேள்வியை எழுப்பியபோது அவ்விவசாயி, “காற்று வீசுவதால்,  சோளத்தின் மகரந்தத் துகள்கள், சுற்றியுள்ள வயல்களில் பரவுகிறது. என்னுடைய அருகிலுள்ளவர்கள் தரமற்ற சோளத்தை விதைத்தால், அவருடைய வயல்களில் உள்ள மகரந்தத் துகள்களும் என் வயல் களில் பரவி விடும். அவ்வாறான தரமற்ற மகரந்தச் சேர்க்கை காரணமாக பல ஆண்டு களுக்குப் பிறகு, எனது பயிர்களின் தரமும் மோசமடையும். அதனால் நான் நல்ல சோளத்தை பயிரிட விரும்பினால், என் பக்தது வயல்களிலும் நல்லதரமான சோளத்தை பயிரிடுவது நல்லது அதற்காக நான் பக்கத்து வயல் விவசாயி களுக்கும் நல்ல தரமான விதைகளை இலவசமாக கொடுத்து உதவுவது நல்லது." என மிகநீண்ட  பதில் அளித்தார் கற்றல்நம் வாழ்க்கையின் யதார்த்தமும் இப்படித்தான். நாம் ஒரு நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், நம்முடன் தொடர்புடைய வர்களையும் அவ்வாறு இருக்குமாறு செய்ய ஊக்குவிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...