நாம் அனைவரும் பத்தாம் வகுப்பு வரை கண்டிப்பாக கணிதம் படித்திருப்போம். அந்த கணித பாடத்தில் முக்கோணவியலின் சிக்கலையும் அல்லது ஒரு கோளத்திற்கான கணஅளவையும். நம்முடைய முதல் முயற்சியிலேயே தீர்வு செய்து விட்டோமா? அந்த நேரத்தில் அது மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் ஒரு நிரலாளர் போன்று அனைத்து கேள்வி களுக்கான விடையை கண்டுபிடுத்திட முதல் முயற்சியில் தோல்வியடைந்த பிறகு பலமுறை முயன்று இறுதியில் வெற்றியடைந்தோம் அல்லவா.
சிறுவயதில் Mario அல்லது அதுபோன்ற வேறு விளையாட்டை விளையாடியிருப்போம்.அதில் முதல் முறை வெல்ல முடிய வில்லை அல்லவா? இதேபோன்று. ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பலமுறை முயன்று தீர்வு காண்கிறோம், ஆனாலும் நம்மால் இன்னும் நிறுவனங்களின் இருப்புநிலைக் குறிப்பைப் பொருத்தமாக சரிசெய்ய முடிய வில்லையே. கேள்விக்கான விடைகாணும் போது, விளையாட்டுகளை விளையாடும் போது,ஓட்டப் பந்தயத்தில் ஓடும்போது, படத்திற்கான கோடு வரையும்போது நாம் தோல்வியை அடைகின்றோம். தோல்வியின் கசப்பை நாமனைவரும் அனுபவித்திருக்கின்றோம்.
"தோல்வி" என்றால் என்ன?
இந்த தோல்வி எனும் சொல்லிற்கு பல விளக்கங்கள் உள்ளன.நம்முடைய பார்வை, பணி, இலக்கு, குறிக்கோள்கள் ஆகிய எதுவாகவும் இருந்தாலும் நம்முடைய இலக்குகளையும் தொலை நோக்குப் பார்வையையும் அடைவ தற்கான மனப்பக்குவத்தை நாம் பெற்றிருந்தால்,தயங்கிடாமல் நம்முடைய இலக்கினை அடைவதற்கேற்ப செயல்படுவதே இந்த தோல்வி என்பதற்கான மிகசுருக்கமான விளக்கமாகும் . வெற்றியும் தோல்வியும் நம் வாழ்வின் இரண்டு முக்கிய பகுதிகள். தோல்விகளை புறக்கணித்து வெற்றி பெறுவதற்கான வழியை நாம் எப்போதும் தேடிக்கொண்டே யிருக்கின்றோம். நம்முடைய விருப்பங்களும் நாம் தேடுவதும் வெவ்வேறாக இருக்கும்போது மிகவும் வலிக்கிறது. இருளின் சிறிய வட்டத்தில் உள்ள கரும்புள்ளியே நம்முடைய முடிவாகத் தோன்றுகிறது.
ஒரு பூ வாடுவது போன்று நம்முடைய புன்னகை தொலைந்து போகிறது. தவறான எண்ணங்களின் சூறாவளி நம் மனதில் சுழல்கிறது. நம்மைத் தவிர அனைத்தும் நகர்வது போன்று தெரிகிறது, ஆனால் அதைத்தானே நாம் தேடுகிறோம்? நமது பயணம் எது வரை நீடிக்கும்? இருண்ட பகுதியில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க வேண்டும் என விரும்புவது அவ்வளவுதானா? இதற்கான பதில் "இல்லை."என்பதாகும். முந்தைய முயற்சிகளில் தோல்வியுற்ற பிறகு, மரியா விளையாட்டில் வெற்றிடைந்தபோது பந்தயத்தில் ஓடிவெற்றிக் கோட்டை தொடும்போது அல்லது ஓவியம் வரைந்துமுடித்தபோது கேள்விக்கான விடையை எவ்வாறு தீர்வு செய்தோம் ஏற்கனவே நாம் அடைந்த தோல்வியே அடுத்தமுயற்சி நம்மைவெற்றியடைய வைக்கிறது. தோல்வி என்பது நாம் தேடும் புள்ளியை அடையாமல் இருப்பதைக் குறிக்கிறது, ஆனால் நாம் மிக நெருக்கமாகவோ அல்லது புள்ளியிலிருந்து வெகு தொலைவிலோ இருக்கலாம் . ஆக, தோல்வி என்பது நாம் இருக்கும் இடத்திற்கும் நாம் தேடும் இடத்திற்கும் உள்ள தூரமாகும். மிகவும் சரியான பாடங்களை இந்த தோல்விகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும், . நமது தவறுகள், உத்திகள் ஆகியவை இலக்கை நோக்கிச் செயல்படச்செய்கின்றன, வெற்றிகோட்டினை அடைவதற்கான தூரத்தை உருவாக்கு கின்றன. எவ்வாறாயினும், தோல்வியானது அந்த உத்திகளை தவறுகளை மாற்ற அனுமதிக்கிறது, நம்முடைய இலக்காக இருக்குகின்ற அந்த புள்ளியை நோக்கி நகரச்செய்கின்றது.
தோல்வி ஒரு மருந்தாக செயல்படுகிறது. எவ்வாறு?
ஏமாற்றத்தினால், திருப்தி யடையாமல் இருக்கின்ற சோம்பல். எனும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, தோல்வி என்பது ஒரு மருத்துவ சிகிச்சையாக செயல்படுகிறது, ஏனெனில் உடலில் மருந்து நச்சுயிர்களை அழிக்கிறது, நம் உடலில் உள்ள திசுக்கள் வேலை செய்யும் முறையை மாற்றுகிறது. அதனோடு உடலில் பற்றாக்குறை பொருட்களை மாற்றி முழுமையாக ஆக்குகிறது அதேபோன்றுதோல்வியானது நம்முடைய செயலற்ற தன்மையை அழித்து, நம்முடைய உத்திகளையும் கவனத்தையும் மாற்றி, வெற்றியைப் பெறுவதற்கான பயணத்தின் உத்தியை மாற்றுகிறது. இவை அனைத்திலும் மனதின் பார்வைகள் நேர்மறையாக இருப்பதற்காக. நேர்மறையாக சிந்திந்திடுக. எதிர்மறையான அம்சங்களைக் காட்டிலும் தோல்வியின் நேர் மறையான அம்சங்களை மட்டும் காண்க. சில சமயங்களில் நமது உத்திகள் உச்சத்தில் இருக்கும்,இலக்கை அடைய கடுமையாக உழைத்து அந்த வெற்றி யைப் பெறத் தவறிவிடுகின்றன. இது கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் நடக் கின்றது. பெரிய செயல்களுக்கு அதிகநேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்க, எனவே நாம் சரியான நேரத்திற்கு காத்திருக்க வேண்டும், அதற்கேற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் நம்பிக்கை, பொறுமை விடாமுயற்சி ஆகியவற்றை கொண்டிருந்தால். காலம் கணிந்தவுடன் உடனடியாக வெற்றி நம்மைத்தேடி வந்துசேரும்.