திங்கள், 10 ஏப்ரல், 2023

ஆடு எண் 3 காணவில்லை -

 ஐந்தாம் வகுப்பில் பயிலும் இரண்டு குறும்புக்காரக் குழந்தைகள்  அருகிலுள்ள பள்ளிக்கு ஒன்றாகப் சேர்ந்து நடந்து சென்று  படித்துவந்தனர்.
அவ்வாறு அவ்விருவரும் பள்ளிசென்றுகொண்டிருந்தபோது ஒரு நாள், முதலாமவன் தன்னுடைய நன்பனிடம், "அண்ணா, எனக்கு ஒரு ஆலோசனை தோன்றுகின்றது.. அதன் படி செயல்பட்டால்  நாமிருவரும் நாளைய வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியதில்லை." எனக்கூறினான்
உடன் இரண்டாமவன் மிகவும் ஆர்வமாக, "நாமிருவரும் நாளைய வகுப்புகளில் கலந்து கொள்ள  தேவையில்லாத அந்த  ஆலோசனை எதுவென சொல்லுங்க..தம்பி ?" எனக்கேட்டான்
அதனைதொடர்ந்து முதலாமவன் பள்ளிக்கு அருகிலுள்ள காலியான நிலத்தினை நோக்கி, "அங்கே பார், மூன்று ஆடுகள் மேய்கின்றன.." என்றான்.
இரண்டாமவன், "அவைகள் வழக்கமாக புற்களையும் செடிகொடிகளையும் மேய்கின்றன அதனால் என்ன?" என வினவினான்
தொடர்ந்து முதலாமவன், “இன்று மாலை பள்ளி  முடிந்தால் எல்லாரும் அவரவர்களின் வீடுகளுக்கு திரும்பி செல்வார்கள் ஆனால் நாமும் நம்முடைய வீடுகளுக்கு திரும்பி  செல்வதற்கு முன் இந்த மூன்று ஆடுகளையும் பிடித்து பள்ளிவளாகத்தில் விட்டிடுவோம்.அப்புறம் பார்  நாளை அனைவரும் காணாமல் போன ஆடுகளை தேடிக்கொண்டிருப்பார்கள் அதனால் நாம் நாளை பள்ளி திறக்கும்போது பள்ளிக்குள் வந்தாலும்  வகுப்பறைகளுக்கு செல்லவேண்டியதில்லை " எனக்கூறினான்
அதற்கு இரண்டாமவன், "அதெப்படி இவ்வளவு பெரிய ஆடுகளை கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமான காரியம் இல்லையே.. மூன்று ஆடுகள்தான் உள்ளன,பள்ளி திறந்தவுடன் எளிதாக அம்மூன்றையும் சிறிது நேரத்தில் கண்டுபிடித்திடுவார்கள், பிறகு நாம் படிக்கநம்முடைய வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டியதுதான்.." என பதிலளித்தான்.
உடன் முதலாமவன் சிரித்துக்கொண்டே, "அவர்களால் அவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்க முடியாது, நான் என்ன செய்கின்றேன்   பார்.." என்றான்.
அதன் பிறகு, அன்றைய வகுப்பு முடியும் வரை நண்பர்கள் இருவரும் காத்திருந்தனர். பள்ளியை விட்டு அனைவரும் சென்ற பிறகு,அவ்விருவரும் அந்த மூன்று ஆடுகளையும் பிடித்து பள்ளிக்குள் கொண்டு வந்தனர்.
ஆடுகளை பள்ளிவளாகத்திற்கு உள்ளே கொண்டு வந்த பிறகு, முதலாமவன், "இப்போது, இந்த ஆடுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண்ணை எழுதப் போகின்றேன்" எனக்கூறியவாறு அவ்வாடுகளுக்கு எண்களை எழுதத் தொடங்கினான்.
முதலாவது ஆட்டிற்கு - எண் 1 எனவும்
இரண்டாவது ஆட்டிற்கு - எண் 2  எனவும்
மூன்றாவது ஆட்டிற்கு - எண் 4 எனவும்  எண்களை எழுதினான்  
உடன் இரண்டாமவன் "என்ன இது? உனக்கு கணக்கு தெரியாதா ஏன் மூன்றாவது ஆட்டிற்கு 4 என எழுதினாய்?", என ஆச்சரியத்துடன் கேட்டான்.
அதனை தொடர்ந்து முதலாமவன்"இது தான் என்னுடய ஆலோசனை.. நாளைக்குப் பார்.. எல்லாரும் ஒரு நாள் முழுக்க மூன்றாம் எண்ணுள்ள ஆடு மட்டும் எங்கே கானோம் என அந்த ஆட்டைமட்டும் தேடித் தேடிக் கொண்டே இருப்பார்கள், ஆனால் அந்த ஆடு எண் 3 மட்டும் கிடைக்காது அதனால் நாமும் நம்முடைய வகுப்புகளுக்குள் செல்ல வேண்டியதில்லை.." என்று சிரித்துக் கொண்டே கூறினான் .
அடுத்த நாள், நண்பர்கள் இருவரும் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளி முழுவதும் அவரவர்களின் வகுப்புகளுக்குள் செல்லாமல் அங்கும் இங்கும் திரிந்து கொண்டும் விவாதம் செய்து கொண்டுமிருந்தனர் அதனோடு. எல்லோரும் காணாமல் போன ஆடு எண் மூன்றை  தேட ஆரம்பித் திருந்தார்கள், அதாவது அந்த பள்ளி வளாகத்திற்குள்ளே  வந்த  நான்கு ஆடுகளுள் மூன்று ஆடுகளைமட்டும் கண்டுபிடிக்க முடிந்தது.
ஆனால், ஆடு எண் 3-ஐக் கண்டுபிடிக்க முடியாததால்,  அந்தப் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆடு எண் 3-ஐத் தேடிக்கொண்டேயிருந்தனர்.
அந்த ஆடு எண் 3ஐக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும் அந்த ஆடு எண் 3 ஐ மட்டும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை....! அதனால் அந்த ஆடு எண் 3  ஆனது நம்முடைய பள்ளி வளாகத்திற்குள் காணாமல் போய்விட்டதே என எல்லாரும் வருத்தப்பட்டார்கள் ஆனால் அந்த குறும்புக்கார சிறுவர்கள் இருவரும் அன்றை வகுப்புகளுக்கு செல்லாமல் இதைபோன்ற எப்போதும்  அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்றவாறு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர் ஒரு ஆட்டைக் கண்ணுக்குத் தெரியாமல் தங்கள் புத்திசாலித்தனத்தால் காணாமல்ஆக்கிவிட்டார்கள்.
இந்தக் கதையைப் படித்த பிறகு நமக்கு அது முட்டாள்தனமாகத் தோன்றலாம் ஆனால் அதில் மறைந்திருக்கும் செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்பொழுதும் நாம்எதைபற்றியாவது  கவலைப்படுவது அவசியமா?
 நம் வாழ்வில் நமக்கு கிடைத்தவை  நம் வாழ்க்கையை முழுமையாக்க போதுமானதாக இருந்தாலும்.
 சில நேரங்களில் நாமனைவரும் உண்மையில் சாத்தியம் இல்லாத காணாமல் போன அந்த ஆடு எண் 3 போன்று.. சில விஷயங்களைத் தேடிக் கொண்டே இருப்போம். அதனால் இல்லாததை மறந்து இருப்பதை கொண்டு மகிழ்வாய் வாழ்வோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...