ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

கஞ்சன் -வெள்ளிக் கிண்ணம் - பொருளின் மதிப்பு!

 முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில்  மிகவும் கஞ்சனத்துடன் கூடிய  முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எந்த பொருட்களைப் பயன்படுத்துவதிலும் மிகவும் கஞ்சத்தனமாக இருந்துவந்தார்.
அவர் மிகவும் விலையுயர்ந்த வெள்ளித்தட்டு ஒன்றினை வைத்திருந்தார், அது அவருடைய மிகவும் மதிப்புமிக்க உடைமையாக இருந்தது. அதனால் அதனை தன்னுடைய வீட்டிலுள்ள மிகவலுவான பெட்டிஒன்றில் வைத்து பூட்டி மிக பத்திரமாக பாதுகாப்பது அவருடைய வழக்கமான பணியாகும். சரியான சந்தர்ப்பம் வந்தால் மட்டுமே அந்த வெள்ளித்தட்டினை எடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு நாள் அவருடைய வீட்டிற்கு  துறவி ஒருவர்வந்தார்.
தன்னுடைய வீட்டிற்கு வந்த துறவிக்கு உணவு பரிமாறும் போது  ஏன் தன்னுடைய வீட்டிலுள்ள வெள்ளித்தட்டில் உணவு பரிமாறக்கூடாது என ஒரு கணம் அந்த முதியவர்  நினைத்தார்.
ஆனால் அடுத்த நொடியே , "வெள்ளித்தட்டு மிகவும் மதிப்பு வாய்ந்தது. கிராமம் கிராமமாக அலைந்து திரியும் ஒரு ஏழை துறவிக்கு இதை நான் ஏன் பயன்படுத்த வேண்டும்.! நம் நாட்டு அரசர் என் வீட்டிற்கு வந்தால், அவருக்கு  இந்த வெள்ளி தட்டில் உணவு பரிமாறலாம். ." என உடன் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார்
அதனால் அன்று ஏழைத்துறவிக்கு உணவுபரிமாறுவதற்காக  முதியவர் அந்தவெள்ளித்தட்டினை வெளியே எடுக்கவே யில்லை.
சில நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டு அமைச்சர்  அவரது வீட்டிற்கு வந்தார். அமைச்சருக்கு உணவு பரிமாறும்போதும் முதியவர் அந்த வெள்ளிதட்டினை எடுத்து உணவு பரிமாறலம் என நினைத்தார், ஆனால் அடுத்த நிமிடமே, "அவர் நம் நாட்டு மன்னரின் அவையில் இவர் ஒரு சாதாரண அமைச்சர்தானே இவருக்கு வெள்ளித்தட்டில் உணவு பரிமாறுவது சரியாகுமா! நம் நாட்டு அரசர் என் வீட்டிற்கு வந்தால், அவருக்கு  இந்த வெள்ளி தட்டில் உணவு பரிமாறலாம். ." என தன் எண்ணத்தினை மாற்றிக்கொண்டார்
உண்மையில் சில நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டு அரசனே அந்த முதியவரின் வீட்டிற்கு வந்தார், ஆனால் அதற்கு சற்று முன்புதான் அந்த அரசன் அண்டைநாட்டு அரசனுடன்  போரிட்டு அதில் தோல்வியுற்றதால் தன்னுடைய நாட்டில் சிலபகுதிகளை இழந்திருந்தார்.
அம்முதியவர் தன்னுடைய நாட்டு அரசனு்ககு உணவு பரிமாறும் போது, இப்போது அந்த வெள்ளித்தட்டில் நம்முடைய நாட்டு அரசனுக்கு உணவினை பரிமாறலாமே என்று நினைத்தார்,  உடன், "! ஆனால் நம்முடைய நாட்டு அரசன் அருகிலுள்ள நாட்டு அரசனுடன் போரிட்டு அந்த போரில் தோல்வியுற்ற நம்முடைய நாட்டில் சில பகுதிகளை பறிகொடுத்துவிட்டார்  போரில் வெற்றிபெறுகின்ற அரசன்  மட்டுமே அந்த வெள்ளித்தட்டில் சாப்பிட வேண்டும். எனவே  அதை வெளியே எடுக்கக்கூடாது"என தன்னுடைய எண்ணத்தினை உடன் மாற்றிக்கொண்டார்
இதனால் அவரது வெள்ளி தட்டுமட்டும் இதுவரையில் பயன்படுத்தப் படாமலேயே  இருந்துவந்தது. ஒரு நாள் அம்முதியவரும் இறந்து போனார்.
அவர் இறந்த பிறகு, அவரது மகன் வெள்ளித்தட்டினை பாதுகாப்பாக வைத்து பூட்டி வைத்திருந்த அந்த பெட்டியை  பெட்டியைத் திறந்து பார்த்தான் அதிக நாள் பயன்படுத்தாமல் இருந்ததால் அந்த வெள்ளித்தட்டு ஒரே கருப்பாகமங்கி  பார்க்கவே சகிக்காமல் இருந்தது.
அதனால் அந்த வெள்ளித்தட்டினை தன் மனைவியிடம் காட்டி, "இதை என்ன செய்யலாம்  எதற்காக பயன்படுத்தலாம்?" என வினவியபோது
அவன் மனைவி கிண்ணத்தைப் பார்த்து, “எவ்வளவு அழுக்காக இருக்கின்றது.. அதனால், நம் வீட்டு நாய்க்கு உணவளிக்க பயன்படுத்தலாம்” என்றாள்.அன்று முதல் அந்த வெள்ளித்தட்டில் அவ்வீட்டின் செல்ல நாய் சாப்பிட ஆரம்பித்தது.
அம்முதியவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு தகுதிவாய்ந்த நபருக்கு உணவு பரிமாற பூட்டிவைத்திருந்த வெள்ளித்தட்டுஅந்த நோக்கத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை, இறுதியில் அதன் மதிப்பை இழந்து சாதாரண வழக்கமான பொருளாகிவிட்டது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...