சனி, 29 ஏப்ரல், 2023

.நான்கு பெண்களும் அவர்களின் மகன்களின் குணங்களும்.

முன்பெல்லாம் தற்போது போன்று குழாய் வழியாக பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்படுவதில்லை . பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய கிராமத்தில் உள்ள பொதுக் கிணற்றில் வாளி கயிறு ஆகியவற்றைஎடுத்துவந்து தத்தமது தேவைக்கேற்ப தண்ணீரை கினற்றிலிருந்து இறைத்து பாத்திரங்களில் வீட்டிற்கு எடுத்துசெல்வது வழக்கமாகும் ஒருநாள் அவ்வூரில் இருந்த நான்கு பெண்கள் அவ்வாறு பொதுக் கிணற்றில்  தண்ணீர் இறைத்து பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருக்கும் போதே ஒருவருக்கொருவர் தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்தனர்.
அவ்வாறான விவாதத்தின்போது அந்நான்கு பெண்களும் தங்களுடைய  மகன்களின் குணநலன்களைப் பற்றிவிவாதிக்க ஆரம்பித்தார்கள்.
முதல் பெண்மணி, "என் மகன் புல்லாங்குழல் வாசிக்கிறான். அவன் தன்னுடைய புல்லாங்குழலின் இசையைக் கேட்பவர்கள் மயங்கும் அளவுக்கு நன்றாக வாசிக்கிறான். இவ்வளவு திறமையான மகனைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என்றார்
இரண்டாவது பெண், "என் மகன் சிறந்த மல்யுத்த வீரன். இந்த கிராமத்தில் மட்டுமல்ல, தொலைதூர கிராமங்களிலும் பிரபலமானவன்.  ஒவ்வொரு குடும்பத்திலும் அவ்வாறு ஒரு மகன் கிடைப்பது மிகவும்நல்லது." என்றார்
அப்போது மூன்றாவது பெண் , "என் மகன் மிகபுத்திசாலி இந்த கிராமத்தில் அவனை விட வேறுயாரும் புத்திசாலியே இல்லை. ஏராளமானவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை அவனிடம் கூறி அதற்கான தீர்வினையும் , அவனுடைய ஆலோசனையையும் பெற்று மனமகிழ்ச்சியுடன் செல்கிறார்கள், நான் அத்தகைய மகனைப் பெற்றதற்கு மிகவும மிகழ்ச்சியடைகிறேன்." என்றார்
நான்காவது பெண் இம்மூவரின் பேச்சையும் கேட்டாள் ஆனால் அவள் எதுவும் பேசவில்லை.
இதைப் பார்த்த மற்ற மூன்று பெண்களும் அவளிடம், "நீயும் உன்னுடைய மகனை பற்றி ஏதாவது கூறேன்..  உன்னுடைய மகனின் திறன் என்ன? எங்களிடம் சொல்லேன்." என விடாப்பிடியாக வற்புறுத்தினார்கள்
நான்காவது பெண், "நான் என்ன சொல்ல முடியும். என் மகனுக்கு உங்கள் மகன்களைப் போன்ற எந்த குணங்களும் இல்லை." எனக்கூறினார் அந்த நான்காவது பெண் தன்னுடைய மகனை பற்றி அவ்வாறு சொல்வதைக் கேட்டு, மூன்று பெண்களும் தங்கள் மகன்களைப் பற்றி மிகவும்பெருமிதம் கொண்டனர்.
அவ்வாறு பேசிக் கொண்டே அனைவரும் தங்களுடைய  பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பினர். அவர்கள் தங்கள் வீட்டிற்குச் செல்ல தத்தமது பாத்திரங்களைத் தூக்கி இடுப்பில் வைக்கத் தொடங்கினர்.
அதே நேரத்தில், முதல் பெண்ணின் மகன் அந்தவழியாக புல்லாங்குழல் ஊதிக்கொண்டு சென்று கொண்டிருந்தான். அதனால் அவனது தாயால் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தினை தூக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டான். இருந்தாலும் தன்னுடைய தாய்க்கு உதவி செய்யாமல் தொடர்ந்த புல்லாங்குழல் ஊதிக்கொண்டு சென்று கொண்டே யிருந்தான்
இரண்டாவது பெண் மகன் தூரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். இரண்டாவது பெண் கிணற்றிலிருந்து பத்திரத்தை தூக்கியவுடன், அவள் கால் நழுவி கினற்றிற்குள் விழுப்போனால் அதனால். நேராக நிற்பதற்கு தடுமாறினாள். அவளுடைய மகன் இதைப் பார்த்தான், ஆனால் தன்னுடைய தாயினை காப்பதற்கா கதாயின் அருகில்  வரவில்லை, ஆயினும் அவனுடைய பயிற்சியைத் தொடர்ந்தான்.
அப்போது, மூன்றாவது பெண் மகனும் வீட்டில் இருந்து வெளியே வந்தான். அவனைப் பார்த்த அவனுடைய தாய், "மகனே! நான் பாத்திரத்தை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்தக் கயிற்றை மட்டும் எடுத்து என்னுடைய தோளில் போட்டுவிடு " என்றாள். ஆனால் அவளுடைய மகன் அவளது கோரிக்கைக்கு பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.
அப்போது நான்காவது பெண்ணின் மகனும் அந்த இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தான். அம்மாவின் இடுப்பில் ஒரு பாத்திரமும் தலையில் ஒரு பாத்திரமும் மற்றொருகையில் வாளியும் கயிறும் இருப்பதைப் பார்த்தவன் தன்னுடைய தாயின் அருகில் சென்று அவள் தலையில் இருந்த பாத்திரத்தினை  எடுத்து தன் தலையில் வைத்துக்கொண்டு அம்மாவுடன் சேர்ந்த நடக்க ஆரம்பித்தான்.
கிணற்றுக்கு அருகில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த ஒரு மூதாட்டி, “இங்கே உங்கள் நாள்வரில்  நல்ல இரக்கமனமுள்ள மகன் மட்டுமே சிறந்தவனாக நான் பார்க்கிறேன்..  தன்னுடைய தாய் இடர்படும் நேரத்தில் தன்னுடைய தாய்க்காக சேவை செய்யும் மகனை விட சிறந்த மகன் யார் இருக்க முடியும். .." என்றார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...