புதன், 27 பிப்ரவரி, 2019

. உணவகத்தொழில்துறையில் நெகிழ்வான கட்டுதல் (Flexible Packaging) எனும்வசதி


தற்போது உணவு மற்றும் பானங்கள் போன்ற நுகர்வு பொருட்களின் தேவை அதிகரித்து வருவதால், இவைகளின் உற்பத்தியாளர்கள் கட்டுதலில் கூடுதல் மதிப்பை உருவாக்க வேண்டிய தேவைஉருவாகின்றது. இந்நிலையில்நெகிழ்வான கட்டுதலானது உணவுத் தொழில்துறைக்கு மறுக்கமுடியாத ஆபத்துதவியாளராக விளங்குகின்றது, ஏனெனில் இது உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், நீடித்து நிலைக்கும் தன்மைக்கும் பொருந்தக்கூடிய தன்மையையும் வழங்குகிறது. நெகிழ்வானகட்டுதலை உணவகபொருட்கள் உற்பத்தியில் பயன்படுத்துவதால் பல்வறு நன்மைகள்கிடைக்கின்றன அவை பின்வருமாறு 1.நீடித்த உணவுப்பொருட்களின் பாதுகாப்பு , இந்த நடைமுறையில் உணவுப்பொருட்களை நீண்டகாலத்திற்கு சேமித்து வைத்திருக்கும்போது வழக்கமான நடைமுறையில் சேமித்து வைத்திடும்போது வீணாகி அழிந்து கெட்டுபோவதைபோன்றில்லாமல் நல்லநிலையில் நீண்டநாட்கள் இருக்கஉதவுகின்றது நெகிழ்வான கட்டுதலில் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள், ஈரப்பதம் ஆகியவற்றிலிருந்து உணவுப் பொருட்களை மிகப்பாதுகாப்பாகவும், புத்தம்புதியாதாகவும் வைத்திருப்பதற்கான வழியை வழங்குகின்றது. எனவே, நெகிழ்வான கட்டுதல் செய்திடும் நிறுவனங்கள் உணவு பொருட்களை நீண்டநாட்கள் கெடாமல் வைத்திட இதன்வாயிலாக உறுதிப்படுத்துகின்றன. 2 மிகச் செலவுகுறைந்தது இதனை நடைமுறைபடுத்திட அதிக செலவிடத்தேவயில்லை அதாவது பெரிய நிறுவனங்கள் மட்டுமே இதனை நடைமுறைபடுத்தமுடியும் என்றில்லாமல் சிறுதொழில்நிறுவனங்கள் கூட இதனைநடைமுறைபடுத்தி கட்டுதல் செலவினை குறைத்திடலாம் இவ்வாறு கட்டுதலுக்கு குறைந்தஅளவு பொருட்களும் எடைகுறைந்த வாறும் நம்முடைய உணவுப்பொருட்களின் உற்பத்தி தேவைக்கு ஏற்பவும் கட்டுதல் செய்துகொள்ளலாம் 3. பயனாளர் விரும்பியவாறு கட்டுதல்பல்வேறு வகைகளாலான உணப்பொருட்களின் தோற்றம் அளவிற்கு ஏற்ப வாடிக்கையாளர் விரும்பியவண்ணம் வரத்தக தேவைக்கேற்ப கட்டுகளின் அளவை தோற்றத்தை வடிவமைத்து அளவிடுதல் செய்து பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கட்டுதலை உருவாக்கிகொள்ளமுடியும் 4.சுற்றுச்சூழலின் நண்பன் தற்போதைய நடைமுறையில் கட்டும்பொருட்களால் அதிக கழிவுகள் உருவாகி பெரியஅளவ சுற்றுசூழல் பிரச்சினை பெரும் அச்சுறுத்தலாக உயர்ந்துவருகின்றது அதனை தவிர்த்து இந்த புதிய நெகிழ்வு கட்டுதல் முறையானது விரைவான மறுசுழற்சி வழிமுறையினால் சுற்றுசூழலின் இனிய நண்பனாக விளங்குகின்றது போக்குவரத்தின்போது ஏற்படும் சேதத்தினை தவிர்க்கின்ற மறுசுழற்சியாக பயன்படும் இந்த நெகிழ்வான கட்டுதல் (Flexible Packaging) எனும்வசதியை பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

நவம்பர்2018முதல் மின்னனு வழிபட்டியல்(E-WayBill)உருவாக்குவதிலான மாற்றங்கள்


16.11.2018 முதல் சரக்கு சேவை வரியின் கீழ் உருவாக்கபடும் மின்வழிபட்டியல்களை உருவாக்குவதில்பின்வருமாற்றங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன 1. ஒரேவிலைபட்டியல் எண்ணைகொண்டுபோலியான மின்னனு வழிபட்டியல் உருவாக்குவதை சரிபார்ப்பது பொருளை விற்பணை செய்பவரின் விலைபட்டியலுக்கு தேவையான மின்னனு வழிபட்டியலை பொருள்போக்குவரத்தாளர் அல்லது பொருளை பெறுபவர் ஒருமுறை மட்டும் உருவாக்கியிருந்தால் அதன்பின்னர் அதே பொருள்போக்குவரத்தாளரோ அல்லது பொருளை பெறுபவரோ அல்லது பொருளை விற்பணை செய்பவரோ அதே விலைபட்டியல் எண்ணிற்கு மின்னனு வழிபட்டியலை மீண்டும் உருவாக்க முனைந்தால் உடன் இந்த விலைபட்டியல் எண்ணிற்கான மின்னனு வழிபட்டிய-லொன்று ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது என்ற எச்சரிக்கை செய்தியைதிரையில் காண்பிக்கும் இருப்பினும்தொடர்ந்து தேவையென அவர்விருப்பபட்டால் நகல் மின்னனு வழிபட்டியலை16.11.2018 முதல் சரக்கு சேவை வரியின் கீழ் உருவாக்கஅனுமதிக்கின்றது 2. பொருட்களை மாநிலங்களுக்கிடையே ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்திடுவதற்கான போக்குவரத்தில் CKD/SKD/Lots எனும்வசதி மாநிலங்களுக்கிடையே பொருட்களைஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்திடுவதற்காக ஒட்டுமொத்த அளவிற்கு அனுமதிபெற்றிருப்பார்கள் நடைமுறையில் ஒட்டுமொத்த பொருட்களையும் ஒரேசமயத்தில் போக்குவரத்து வாகணத்தின் வாயிலாக கொண்டுசெல்லவோஅல்லது கொண்டுவரவோமுடியாது அதனால்பொருட்களை தனித்தனி தொகுப்பாக பிரித்து அனுப்புவார்கள் அல்லது பெறுவார்கள் அவ்வாறான நிலையில்CKD/SKD/Lots எனும்வசதியானது ஒட்டுமொத்த பொருட்களுக்கு வரி விலை பட்டியல் (Tax Invoice) அல்லது பொருள்நுழைவு பட்டியல் (Bill of Entry) ஒன்றினை மட்டும் தயார்செய்து அதன் நகலை ஒவ்வொரு தொகுப்புபொருட்களுக்கான பொருள் வழங்கும் பட்டியலுடன்( Delivery Challan) சேர்த்து அனுப்புவதற்கும் அல்லது பெறுவதற்கும் கடைசி தொகுப்பின்போது மட்டும் உண்மைவிலைபட்டியலை அல்லது பொருள்நுழைவு பட்டியலை பொருள் வழங்கும் பட்டியலுடன் சேர்த்து அனுப்புவதற்கும் அல்லது பெறுவதற்கும் அனுமதிக்கின்றது மாநிலங்களுக்கிடையே பொருட்களின் ஏற்றுமதியின்போது நாம் ஏற்றுமதி செய்யவிரும்பும் நபரின் முழுமுகவரியையும் Other Country எனும் பகுதியில் அவருடைய மாநிலத்தின் பெயருடன் குறிப்பிடவேண்டும் 2.1.இந்த வசதியின்படி பொருட்களை மாநிலங்களுக்கிடையே ஏற்றுமதிசெய்திடும்போது Bill To என்பதன்வாயிலாக அனுப்புவோரின் SEZ இன்URP அல்லது GSTIN விவரங்களுடன் எந்தவிமானதளம் அல்லது கப்பல் துறைமுகம் அல்லது சோதனை சாவடியின் வழியாக கொண்டு செல்லவிருக்கின்றது என குறிப்பிடவேண்டும் 2.2.இந்த வசதியின்படிமாநிலங்களுக்கிடையே பொருட்களை இறக்குமதி செய்திடும் போது Bill Fromஎன்பதன்வாயிலாக அனுப்புபவரின் SEZ இன்URP அல்லது GSTIN விவரங்களுடன் எந்தவிமானதளம் அல்லது கப்பல் துறைமுகம் அல்லது சோதனைஇடத்தின் வழியாக கொண்டு வரவிருக்கின்றது என குறிப்பிடவேண்டும் மாநிலங்களுக்கிடையே பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்திடும்போது பின்வரும் நான்குவகைகளில் ஒன்றினை பின்பற்றவேண்டும் 1 Regular இந்த வகையில் பொருளை விற்பவரும் பொருளை வாங்குபவரும் நேருக்கு நேராக பொருளை கொடுத்து பெற்றுகொள்வார்கள் 2. Bill To - Ship To இந்த வகையில் பொருளை கொண்டுசெல்வதற்கான போக்குவரத்தாளர் எனும் மூன்றாவது நபரும் இந்த நடவடிக்கைகளில் பங்குகொள்வார் 3.Bill From - Dispatch From: இந்தவகையில்பொருளை கொண்டுவருவதற்கான போக்குவரத்தாளர் எனும் மூன்றாவது நபரும் இந்த நடவடிக்கைகளில் பங்குகொள்வார் 4.Combination of both இந்த வகையில் இவைகள் கலந்ததான நடவடிக்கையாகும் 3.மாற்றப்பட்ட Bulk Generation Toolஎனும் கருவி பயனாளர் ஒருவர் மின்னனு வழிபட்டியல் தயார்செய்திடும்போது அதில் Transaction Details என்பதன்கீழுள்ள Transaction type , Sub Type ஆகியவற்றை தெரிவுசெய்து கொண்டவுடன் தானாகவே தொடர்புடைய Document Type என கீழிறங்கு பட்டியல் ஒன்று விரியும் அதில் தேவையானதை தெரிவுசெய்து கொண்டால் போதும் அவ்வாறே 'Bill From' & 'Bill To' என்பதில் சரியான அஞ்சலக குறியீட்டு எண்ணை குறிப்பிட்டால் போதும் உடன் தானாகவே தொடர்புடைய மாநிலத்தின் பெயர் பிரதிபலிக்கும் மேலும் தொடர்புடைய பொருளிற்கான HSNகுறியீட்டினையும் வரிவிகித்தை அதற்கான கீழிறங்கு பட்டியலி-லிருந்தும் தெரிவுசெய்து கொண்டால்போதும் உடன்CGST, SGST, IGST & CESS ஆகிய தொகைதானாகவே உருவாகிவிடும் மேலும்CESS Non-Advol Value" & "Other Amount (+/-)" எனும் புலத்தினை சேர்த்து பயனாளர் விரும்பினால் வேறு ஏதேனும் கட்டணங்கள் அல்லது கழிவுத்தொகைகளை இந்த பட்டியலில் குறிப்பிடலாம் அதற்கேற்ப விலைபட்டியலின் மொத்தத்தொகை தானாகவே மாறி யமையும் அதனோடு விலைபட்டியலின் மதிப்பு ரூ.10 கோடிக்குமேல் உயரும்போது இந்த மின்னனு வழிபட்டியல் (EWB) பற்றிய தகவலை தானாகவே குறுஞ்செய்தியாக (SMS) தொடர்புடைய நபருக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்புகின்றது அதனடிப்படையில் தொடர்புடைய நபர் உடன்இந்த நடவடிக்கைகளில தவறு ஏதேனும் இருந்தால் திருத்திகொள்ளமுடியும் போக்குவரத்தாளரின் சுட்டியை(I D) கண்டிப்பாக Part-A slip உம் Part-B உம் குறிப்பிடவேண்டும்

சனி, 2 பிப்ரவரி, 2019

ஃபெடரல்எக்ஸ்பிரஸ் எனும் நிறுவனம்


ஃபிரட்ஸ்மித் என்பவர் தன்னுடைய இளங்கலை பட்டத்தினை 1965 இல் முடித்தபோது ஐக்கிய அமெரிக்கநாட்டின் பொருள் போக்குவரத்தினை குறைந்த செலவில் எவ்வாறு கையாளுவது என்ற பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றினை சமர்ப்பித்திருந்தார் அப்போது வியாபாரிகள் அனைவரும் தங்களுடைய பொருட்களை தரைவழி அல்லது வான்வழியில் திட்டமிடாமல் தங்களுடையமனதில் தோன்றியவாறு அதிக செலவிட்டு தங்களுடைய பொருட்களை கொண்டு செல்லும் நடைமுறையை பின்பற்றிவந்தனர் அதனால் பொருட்களின் விலை அதிமாக இருந்தன இதனை தீர்வுசெய்திட எடை அதிக மான பொருட்களை தரைவழியிலும் எடைகுறைவான பொருட்களை வான்வழியிலும் கொண்டு செல்லும்போது போக்குவரத்து செலவு குறையும் எரிபொருள் செலவும் குறையும் அதனை தொடர்ந்து பொருட்களின் விலையும் குறையும் என தன்னுடைய ஆய்வறிக்கையின் வாயிலாக பரிந்துரை செய்தார் அதன்பின்னர் இதனை ஏன் தானே முயற்சிசெய்து செயற்படுத்திடக்கூடாதுஎன இவர் ஃபெடரல்எக்ஸ்பிரஸ் எனும் நிறுவனத்தினை துவங்கினார் அதில் அதிக எடையுள்ள பொருட்களை தரைவழியில் கொண்டு செல்லுமாறும் குறைந்த எடையுள்ள பொருட்களை பயனிகளின் விமானத்திலும் கொண்டுசென்று சேர்த்திடுமாறும் தன்னுடைய நிறுவனத்தினை கட்டமைவு செய்தார் ஆயினும் வாகணங்களின் எரிபொருள் செலவு உயர்ந்ததால் இவருடைய ஃபெடரல்எக்ஸ்பிரஸ் நிறுவனமானது ஆண்டு ஒன்றிற்கு ஒருமில்லியன் டாலர் நட்டத்தை ஈட்டியது அதனால் போதுமான அளவிற்கு நடைமுறை மூலதனம் இல்லாமல் அன்றாட செலவிற்கு அவருடைய நிறுமம் அல்லாடி கொண்டிருந்தது .அப்போது அவருடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்தின் வங்கி கணக்கில் வெறும் 5000 டாலர் மட்டுமே கையிருப்பில் இருந்தது பொதுவாக இந்நிலையில் திவால் கடிதம் கொடுத்து நிறுவனத்தை கலைத்துவிடும் பணியையே நாம் அனைவரும் பின்பற்றிடுவோம் ஆனால் ஃபிரட்ஸ்மித் ஆனவர் அவ்வாறான முடிவிற்கு செல்லாமல் தன்னுடைய ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு ஒரு வர்த்தக வங்கியிடமிருந்து நடைமுறை மூலத்தனத்திற்காக 35000 டாலர் அளவிற்கு தன்னுடைய சொந்த பொறுப்பில் பெற்று நிறுவனத்தின் இயக்கம் தடைபெறாமல் தொடர்ந்து செயல்படுமாறு பராமரித்தார் அதனை தொடர்ந்து வாடிக்கையாளர் அனைவரும் அவருடைய நிறுவனத்தையே நாடினர் மேலும் வாகணங்களின் எரிபொருள்விலையும் குறையத்துவங்கியது அதனால் அதற்கடுத்தாண்டில் ஃபெடரல்எக்ஸ்பிரஸ் நிறுவனம் நல்ல இலாபம் ஈட்டியது அதனை தொடர்ந்துஅந்நிறுவனம் தொடர்ந்து வலுவான நிறுவனமாக மிளிரத்தொடஙகியது மேலும் தற்போதும்இந்நிறுவனம் 220 நாடுகளுக்குமேல் ஆண்டுவருமானம் 45 பில்லியன் ஈட்டுகின்றவகையில் செயல்பட்டுவருகின்றது பொதுவாக எந்தவொரு இக்கட்டானநிலையிலும் துவண்டு போகாமல் சரியான முடிவெடுத்து துனிச்சலாக நிறுவனத்தை தொடர்ந்து நடத்தினால் நிறுவனம் நிலைத்து நிற்பது உறுதி என்ற அறிவுரையை மனதில் கொண்டு செயல்படுக

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

குழந்தைகள் படம்வரைவதன் வாயிலாக தங்களுக்கு தேவையான ஆடைகளை பெற்றுக்கொள்ள முடியும்


ஜெய்மி நியூபெர்ரி எனும் தாய் தங்களுடயை குழந்தைகளின் படம்வரைதலின் திறனை ஊக்குவிப்பதன் வாயிலாக அக்குழந்தைகளக்கான ஆடைகளை பெறலாமே என்ற ஆலோசனையின்படி நல்ல அருமையான ஆடை வடிவமைக்கப்பட்டு கிடைக்கப்பெற்றன அதனை தொடர்ந்து அந்த குழந்தைகளின் நண்பர்கள் அவர்களின் பெற்றோர்களும் அவ்வாறே தங்களுடைய பிள்ளைகளுக்கான ஆடைகளை அவர்கள் வரையும் ஓவியத்தின் வாயிலாக பெற்றனர் இதனடிப்படையில் ‘Picture This’எனும் தலைப்பில் , Newberry’sநியூபெர்ரி எனும் நிறுவனம் ஓவியம் வரைக ஆடையை பெறுக (“Picture This” –) என்ற திட்டத்தை செய்ல்படுத்தி விளம்பரப்படுத்தி மிகபிரபலமாக நடைமுறைபடுத்தி வருகின்றது இதன்மூலம் பிள்ளைகள் தாங்கள் அணியும் ஆடையை ஓவியம் வரைவதலின் வாயிலாக பெறமுடியும் https://www.newberry.org/எனும் இந்த இணைய தளபக்கத்திற்கு சென்று வண்ணதாளை தேவையானஅளவு தெரிவுசெய்து அச்சிட்டு கொள்க அல்லது மாதிரி படிமத்தை பதிவிறக்கம்செய்து அச்சிட்டுகொள்க அதன்அபின்னர் அதில் நம்முடைய பிள்ளைகள் அவர்களுக்கு தெரிந்த படத்தை ஓவியமாக அந்த தாளில் வரையச்செய்திடுக பின்னர் இந்த தளத்தில் அந்த ஒவியத்தை பதிவேற்றம் செய்திடுக இரண்டுவாரம் கழித்தபின்னர் கூரியர் அல்லது அஞ்சல் வாயிலாக அந்த பிள்ளைகளுக்கான ஆடை வந்துசேரும் நம்முடைய பிள்ளைகள் தங்களுடையகற்பணையை ஆடையாக அணிந்து மகி்ழ்வதை காணலாம் பிள்ளைகள் தங்களுக்கு ஆடைதேவையில்லை அதற்குபதிலாக தங்களுடைய விளையாட்டு பொம்மைகளுக்கு தேவையான ஆடையை ஓவியமாக வரைந்து பெற்றுகொள்ளலாம் இவ்வாறே நாமும் நம்முடைய மனதில் உதிர்த்த ஆலோசனைகளை புதிய தொழிலாக துவங்கிடலாமே

சனி, 29 டிசம்பர், 2018

தகவல் தொழில்நுட்ப காலகட்டமானஇந்த 21 ஆம் நூற்றான்டில் சிறிய அளவில் ஏராளமான வகையில்தொழிலை துவங்கலாம்


1.Online Tutorialsபொதுவாக தற்போது நம்மில் பெரும்பாலோர் இருந்த இடத்திலிருந்தவாறே எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் கற்க விரும்புகின்றனர் அதனால் அவ்வாறான கற்றலை வழங்குகின்றஇணையவழிகல்வியாக தொழிலநுட்பம் இசை நாட்டியம் ஓவியம் சமையல்ஆகியவற்றிற்கான ஆன்லைன் டுட்டோரியல் கல்வி எனும் தொழிலை குறைந்தசெலவில் நடத்தலாம் 2. Animation தற்போதைய தகவல்தொழில்நுட்ப காலகட்டத்தில் அசைவூட்டு (Animation)படங்கள் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றன அதிலும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைபடுத்திடுவதற்கு இந்த அசைவூட்டுபடங்கள்மிகமுக்கிய பங்களிக்கின்றன அதனால் சிறிய அளவில் அசைவூட்டு படங்களை உருவாக்கி டும் பணியைசெய்யலாம் 3. Advertisement Makingதற்போத எந்தவொரு உற்பத்தி பொருளும் விளம்பரமில்லாமல் சந்தையில் நிலைத்து இருக்கமுடியாத என்றநிலையில் பொருளிற்கான விளம்பரங்களை உருவாக்கிடும் பணியை செய்திடலாம் 4.Advertisement Agencyஇவ்வாறான விளம்பரதயாரிப்பாளர் தனியுலகமாகவும் பொருள்உற்பத்தி தனியுலகமாகவும் இருக்கின்றநிலையில் அவைகளுக்கு இடையேஇணைப்பு பாளமாக விளங்கிடும்விளம்பர முகவர் பணியை செய்யலாம் 5. Photographyஎந்தவொரு செய்தியையும் உரையாக வழங்குவதைவிட அவ்வுரையுடன் விளக்கப்படமும் இணைத்து வழங்கும்போது மக்களின் மனதில் அந்த செய்தி உடன் பதியும் அதற்காகபடப்பிடிப்பு மிகமுக்கிய இடத்தைவகிக்கின்றது இவ்வாறான படபிடிப்பு தொழில் குறைந்த முதலீட்டில் செய்திடமுடியும் 6. Freelance Writerசெய்திகளை உரையாக எழுதி உருவாக்குவது அதிலும் எந்தவொரு செய்தி நிறுவனத்தையும் சாராமல்சுதந்திரமாக எழுதுவது மிகச்சிறந்த தொழில் வாய்ப்பாகும் இவ்வாறான யாரையும் சார்ந்திராத சுதந்திர எழுத்தாளர் பணியை செய்திடுக 7.Translation servicesஅனைத்து தொழில்களும் உலகளாவிய இன்றையை நிலையில் நாடுகளுக்கு இடையேஅந்நாடுகளின் பேசப்படும் மொழிகளுக்கு இடையே பாளமாக விளங்குவது மொழிபெயர்ப்பு பணியாகும் அவ்வாறான மொழிபெயர்ப்பு பணியானது மிகமுக்கியஇடத்தினைவகிக்கின்றது அதனால் இந்த மொழிபெயர்ப்பு பணியைசெய்திடலாம் 8. Domain and Hostingதற்போது இணையமில்லாது எந்தவொரு செயலும் இல்லை அதிலும் வியாபரத்திற்குஇணை பக்க்கள்தான் அடிப்படையாக விளங்குகின்ற இன்றையை நிலையில் வியாபார நிறுவனங்கள் அனைத்தும் தத்தமக்கு என தனியாக இணையபக்கத்தை உருவாக்கிடவிரும்பிடுகின்றன அதனை எளிமையாக செயல்படுத்திபடுவதற்காக Domain and Hosting என்ற சேவைத்தொழிலை மேற்கொள்க 9.Search Engine Optimization (SEO)Consultantஇணையத்தில் கூகுள் யாகூ .பிங்க்போன்றவை தேடுபொறியில் முதன்மை இடத்தை வகிக்கின்றன அவ்வாறான தேடுபொறிகளில் நம்முடைய இணையபக்கத்தைமுதல் பத்து இடங்களில் கொண்டு வருமாறு செய்வதற்காக நம்முடைய இணையபக்கத்தின் உள்ளடக்கங்களை மாற்றியமைத்திடவேண்டியுள்ளது அவ்வாறு தேடுபொறியில் இணையபக்கத்தை முதலிடங்களை கொண்டுவருவதற்கானஆலோசகர் பணிமிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது அவ்வாறான தேடுபொறி ஆலோசகர் பணியை செய்திடுக

சனி, 22 டிசம்பர், 2018

இந்தியாவில் ஒரு புதிய நிறுவனத்தை பதிவு செய்வது எவ்வாறு


தற்போது இந்தியாவில் புதியதாக தொழில் துவங்கவிருப்பமுடையவர்கள் அப்புதிய நிறுவனத்தை மிகவிரைவாக ஏழேநாட்களில் பதிவுசெய்திடமுடியும் என்ற மிக எளிமையான நடைமுறையை நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகம்(MCA) செயல்படுத்திடுகின்றது இதற்காக நாம்எந்தவொரு அரசு அலுவலகங்களுக்கும் நேரடியாக செல்லத்தேவையில்லை மேலும் நாம் இந்தியாவில் எந்தவொரு இடத்திலிருந்தும் அனைத்து ஆவணங்களையும் மின்னனு முறையில் பூர்த்திசெய்து பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானதாகும் இவ்வாறு புதிய நிறுவனங்களை பதிவுசெய்வதற்காகவே பல்வேறுநிறுவனங்களும் நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சக குழுக்களும் நமக்கு உதவதயாராக இருக்கின்றன இதற்காக முதலில் 1 தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமம் 2. பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் 3.ஒருநபர் நிறுமம் 4.தனிநபர் உடைமை நிறுமம் 5.பொதுவான கூட்டாண்மை நிறுமம் ஆகிய ஐந்துவகைகளில் பதிவு செய்திட முடியும் இவை ஒவ்வொன்றும் வசதி வாய்ப்புகளில் பல்வேறு வகைகளில் வேறுபட்டவையாக இருப்பதால் இவற்றுள் ஒரு வகையை மட்டும் நாம் பதிவு செய்யவிரும்பும் நிறுவனத்தின் வகையாக முடிவுசெய்து தெரிவுசெய்து கொள்க அதற்கடுத்ததாக இந்தியாவில் ஒரு வியாபார நிறுவனத்தை பதிவு செய்வதற்கான நடைமுறையை எளியதாக ஆக்குவதற்காக நிறுவனங்களின் விவகார்த்துறை அமைச்சகம் (MCA)ஆனது INC-29 எனும் படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அதாவது பதிவுசெய்திட விரும்பும் ஒரு நிறுவனத்திற்கான வணிக பெயர் ஒப்புதல் பெறுதல், இயக்குனரின் அடையாள எண் (DIN),நிறுவனத்தை பதிவுசெய்வதற்கான விண்ணப்பம் ஆகிய மூன்று செயல்களையும் இந்த (INC-29)படிவத்திலேயே செயற்படுத்திடுமாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மூன்றாவதாக நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகத்திலிருந்து (MCA) பதிவுசெய்யப்படும் நிறுவனத்தின் இயக்குனர்களுடைய DSC எனும் மின் கையொப்ப சான்றிதழ்களை பெறவேண்டும் இதற்காக தேவையான ஆவணங்களை இணையத்தின் வாயிலாக சமர்ப்பித்தால்போதும் அவைகள் சரியாக இருந்தால் இந்தமின்கையொப்ப சான்றிதழை இரண்டு நாட்களுக்குள் பெறமுடியும் தகவல் தொழில்நுட்ப சட்டம்200-இன் விதிகளின்படி, மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக அவைகளுடன் இந்தமின் கையொப்பங்களைப் பயன்படுத்துவதை குறிப்பிடுகின்றன, அவைகளின்படி சமர்ப்பிக்கப்படும மின்னணு ஆவணம் பாதுகாப்பானது என்றும் உண்மையானது என்றும் அனுமதிக்கின்றது. எனவே, MCA21 எனும் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் / வரையறுக்கப்பட்டகூட்டாண்மை நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அனைத்து கோப்புகளும் கையொப்பமிட அனுமதிக்கப் பெற்ற நபர் தனக்கு அளிக்கபபட்ட மின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் இந்த INC-29படிவத்தை தயார் செய்யவேண்டும் அதற்காக இயக்குனரின் அடையாள எண் (DIN ),நிறுவனத்தின் பெயர் ஒப்புதல்சான்றிதழ் , MOA மற்றும் AOA ஆகிய அடிப்படை ஆவணங்களின் விவரம் ,பதிவுசெய்யப்பட்ட அலுவலக சரிபார்ப்புவிவரம் ,இயக்குநர்களின் நியமனக்கடிதங்கள் அறிவிப்புகள் ஆகிய விவரங்கள்இந்த INC-29 படிவத்தில் பூர்த்தி செய்யப்படவேண்டும் ஒரு நிறுவனத்தை பதிவு செய்ய இந்த INC-29 படிவத்துடன் சமர்ப்பிக்கத் தேவையான ஆவணங்கள் பின்வருமாறு மார்பளவு உருவப்படம் , நிரந்தரவருமானவரி எண்அட்டை(PAN card), சமீபத்திய வங்கி கணக்குஅறிவிக்கை,தொலைபேசிஅல்லதுசெல்லிடத்து பேசியின் பட்டியல் அல்லது எரிவாயு இணப்பு பட்டியல், ஒட்டுரிமைசான்றட்டை , பதிவு அலுவலகம் வாடகையாக இருந்தால் ஆங்கிலத்தில் வழக்குரைஞரின் சான்றளிக்கப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம் ,வாடகை பதிவு அலுவலகம் வழங்குவதற்கான மறுப்பின்மை சான்று, பதிவுஅலுவலகத்தின் முகவரிஅடையாள சான்று ஆகிய ஆவணங்களின் வருபட்ட நகல்கள் இந்த படிவத்துடன் இணைக்கப் படவேண்டும் அதாவது மேலே கூறிய அனைத்து ஆவணங்களின் வருடப்பட்ட நகல்களும் இந்த INC-29 படிவத்துடன் இணைக்கப் படவேண்டும் அதன்பின்னர் INC-29 படிவத்தில் தேவையானஅனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு தயாராக உள்ளதெனில்இந்த INC-29 படிவத்தை இணையத்தின் வாயிலாக நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் (MCA) இணைய வாயிலில் சமரப்பிக்கவேண்டும் பிறகு இந்த INC-29 படிவம் சரியான விவரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட நிறுமம் பதிவுசெய்யப்பட்டதாக அதற்கான பதிவுஎண்ணுடன் certificate of incorporation எனும் நிறுவன பதிவு சான்றிதழ்கிடைக்கும் அதனை தொடர்ந்து இந்த நிறுவனங்களின் பதிவெண் அடிப்படையில் நம்முடை ய நிறுவனத்திற்கான வருமான வரி அலுவலகத்தின் வாயிலாக நிரந்தர வருமான வரி கணக்குஎண் பெறமுடியும் மேலும் நம்முடைய நிறுவனத்திற்கென தனியாக வர்த்தக வங்கியில் வங்கி கணக்கு ஒன்றினை துவங்கமுடியும் அதற்குப் பிறகு நம்முடைய நிறுவனத்தின் வணிக வகை மற்றும் அளவை பொறுத்து பொதுசரக்குசேவைவரி (GST) பதவிற்காக விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக நாம் துவங்கவிருப்பது தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் எனில் குறைந்தபட்சம் 2 இயக்குநர்களும் அதிகபட்சம் 15 இயக்குநர்களும் அவ்வாறே குறைந்தபட்சம் 2 பங்குதாரர்களுடனும் அதிகபட்சம் 50 பங்குதாரர்களுடனும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக பதிவுசெய்திடலாம் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமமாக (LLP) கூட நாம் பதிவுசெய்திடமுடியும் ஆனால் சிறிது கூடுதலான நடைமுறையை நம்முடைய நிறுவனத்தை பதிவுசெய்வதற்கு பின்பற்றிடவேண்டும் ஒரேயொரு பங்குதாரரும் இயக்குநரையும் கொண்ட சிறிய ஒருநபர் நிறுமமாக கூடபதிவுசெய்திடமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

சனி, 15 டிசம்பர், 2018

தனியார்வரையறுக்கப்பட்ட நிறுமம் ,ஒருநபர் நிறுமம் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆகியவை குறித்து ஒருஅறிமுகம்


வெளியிலுள்ள நபர்களிடமிருந்துமுதலீடு பெற்றுஒருநிறுமத்தை துவங்குவது தனியார்வரையறுக்கப்பட்ட நிறுமம்(Private Limiited)ஆகும் . தனிநபர் ஒருவர் தான்மட்டும் தன்னுடைய முதலீட்டுடன் ஒருநிறுமத்தை துவங்குவது ஒருநபர் நிறுமமாகும். நான்கைந்து நபர்கள் கூட்டாக சேர்ந்து தங்களுடைய முதலீட்டினை கொண்டு நிறுமத்தை துவங்குவது வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமமாகும்(LLP) . வெளிப்புற நிதி உதவி எதுவுமில்லாமலேயே தங்களுடைய சொந்த நிதியை கொண்டு வியாபாரத்தை நடத்த விரும்பும் எவருக்கும், வணிகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் திறமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க விரும்புகிறவர்களுக்கும் ஒருநபர் நிறுமமும் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமமும் சிறந்தவையாகும் பொதுவாக தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் பங்குதாரர்களின் பொறுப்பு முதலீட்டின் தொகை வரை மட்டுமே என வரையறுக்கப்பட்டு விடுவதால் இந்த வகை நிறுமமானது அனைவராலும் விரும்பப்படுகின்றது தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தை துவங்கவிரும்புவோர்கள் நிறுமங்களின் பதிவாளரின் இணையதள பக்கத்தில் (Ministry of CorporateAffairs(MCA)) நேரடியாக இணையத்தின் வாயிலாக எளிய ஒருபக்க படிவத்தில் சரியான விவரங்களை உள்ளீடுசெய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் மின்னணு வடிவத்தில் சமர்ப்பித்தால்போதும் உடன் அந்த தனியார் நிறுமத்தை பதிவுசெய்யப்பட்டதாக அதற்கென தனியானபதிவெண் ஒன்று ஒதுக்கப்பட்டு பதிவுசான்றிதழ் ஒன்று அந்நிறுமத்திற்கு வழங்கப்படும் அதனை தொடர்ந்து இவ்வாறு பதிவுசெய்யப்படும் அதனை தொடர்ந்து அந்த தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் பலர் முதலீடு செய்வார்கள் வணிக வங்கிகளும் அந்த தனியார் நிறுமத்திற்கு தேவையான நீண்டகாலகடன், நடைமுறை மூலதனகடன் ஆகியவற்றை விரைவாக வழங்குவார்கள் வெளிப்புற நிதி தேவைப்படாத ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டாக சேர்ந்து தங்களுடைய சொந்த முதலீட்டினை கொண்டு வரையறுக்கப்பட்டகூட்டாண்மை நிறுமத்தை துவங்கிடமுடியும் மேலும் மற்ற பங்காளிகளால் எழும் எதிர்மறை சிக்கல்களிலிருந்து மிகுதியுள்ள பங்குதாரர்களை பாதுகாப்பதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் அனுமதிக்கிறது. அதுமட்டுமல்லாது கூட்டாளிகள் தங்களுடைய பொறுப்பினை வரையறைக்குள் கொண்டுவருவதற்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகின்றது அதைவிட தேவையெனில் பிந்நாட்களில் இதனை தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக மாற்றியமைத்து கொள்ளமுடியும் தனிப்பட்ட நபர் தான் விரும்பும் தொழிலை தன்னுடைய பொறுப்பு வரையறுக்குட்-பட்டதாக துவங்குவதற்கு இந்த ஒருநபர் நிறுமம் சிறந்த தேர்வாகும் ஆயினும் இவ்வாறான ஒருநபர் நிறுமத்தின் கடந்த மூன்றாண்டுகளின் சராசரி வருவாய் இரண்டு கோடிக்கு மேல் உயரும்போதும் செலுத்தப்பட்ட பங்குமூதலீடுகள் ஐம்பது இலட்சத்தை விட உயரும்போதும் அந்த ஒருநபர் நிறுமத்தினை அவர் கண்டிப்பாக தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக மாற்றி கொள்ளவேண்டும் இவ்வாறான ஒருநபர் நிறுமத்தை துவங்குவிரும்வோர் நிறுமங்களின் பதிவாளரின் இணையதளபக்கத்தில் (Corporate Affairs(MCA)) நேரடியாக இணையத்தின் வாயிலாக எளிய ஒருபக்க படிவத்தில் சரியான விவரங்களை உள்ளீடுசெய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் மின்னணு வடிவத்தில் சமர்ப்பித்தால்போதும் உடன் அந்த ஒருநபர் நிறுமத்தை பதிவுசெய்யப்பட்டதாக அதற்கென தனியாக பதிவெண் ஒன்று ஒதுக்கப்பட்டு பதிவுசான்றிதழ் அந்த ஒருநபர் நிறுமத்திற்கு வழங்கபடும் இந்த மூன்றில் தங்களுடைய தொழிலிற்கு பொருத்தமான ஒன்றினை தெரிவுசெய்து தாங்கள் துவங்கவிருக்கும் தொழிலிற்கு பயன்படுத்தி துவங்கிடுக என பரிந்துரைக்கப்படுகின்றது

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...