அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் மிக அதிக மழை பொழிந்து வெள்ளக்காடாக இருந்ததால் வழக்கமான மக்களின் இயக்கம் தடைபட்டது அதனுடன் கூடவே மக்கள் அனைவரும் கடன் தொல்லையில் அவதிபட்டுகொண்டிருந்தனர் அந்நிலையில் வசதியான சுற்றுலா பயனி ஒருவர் தங்கும் விடுதி யொன்றில் தான் தங்குவதற்காக வசதியான அறையொன்று கிடைக்குமாஎன பார்வையிட வந்தார் அவர் வரவேற்பாளரிடம் 100 யூரோ தாளை முன்பணத் தொகையாக கொடுத்துவிட்டு தமக்கு பிடித்தமான அறை அங்குள்ளதாவென உள்ளே சுற்றிபார்க்க சென்றார்
உடன் அந்த தங்கும்விடுதியின் முதலாளி தம்மிடம் சமையல் பணிபுரியும் வேலையாளிற்கு நிலுவையாக இருக்கும் கொடுபடவேண்டிய அந்த மாத சம்பளத்தை அந்த 100 யூரோ தாளை கொண்டு தீர்வுசெய்தார்
உடன் அந்த சமையல் பணிபுரியும் வேலையாள் தாம் நிலுவையாக வைத்திருக்கும் தான்குடியிருக்கும் வீட்டு வாடகையை அந்த 100 யூரோ தாளை கொண்டு தீர்வுசெய்தார்
உடன் அவ்வீட்டு சொந்தகாரர் அந்தமாத எரிபொருள் கட்டணத்தை அந்த 100 யூரோ தாளை கொண்டு செலுத்தினார்
உடன் அந்த எரிபொருள் வழங்குபவர் தம்நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த நடிகைக்கு வழங்கவேண்டிய கட்டணத்தை அந்த 100 யூரோ தாளை கொண்டு தீர்வுசெய்தார்
உடன் அந்த விளம்பர நடிகைஅந்த தங்கும் விடுதியில் தாம் தங்கியிருந்தாதற்கான கட்டணத்தை அந்த 100 யூரோ தாளை கொண்டு செலுத்தினார்
இந்நிலையில் அச்சுற்றுலா பயனி அந்த தங்கும் விடுதியின் உட்புறம் அனைத்தையும் சுற்றி பார்த்துவிட்டு ஒரு அறையும் தாம்விரும்பியவண்ணம் இல்லையென தாம் முன்பனமாக வழங்கியஅந்த 100 யூரோ தாளை வாங்கி கொண்டு கிளம்பிவிட்டார்
இந்நிகழ்வால் அந்நகர மக்கள் பொருள்ஏதும் ஈட்டிடவில்லை ஆனால் அவர்களின் அனைவருடைய கடன்களும் தீர்வுசெய்யபட்டுவிட்டன அதனை தொடர்ந்து மக்களும் நிம்மதியுடன் இருந்தனர் இதுதான் தற்போதைய ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கையாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக