திங்கள், 23 ஏப்ரல், 2012

எந்தவொரு நற்செயலையும் முதலில் நாம் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என்ற நீதிக்கதை


ஒருசமயம் பக்கத்து நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு உணவில்லாமலும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு குடிப்பதற்கு பால் கிடைக்காமலும் பெறும் அல்ல்லுற்றனர் அதனால் அந்த பக்கத்து நாட்டிலுள்ள சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு குடிப்பதற்கு தன்னுடைய நாட்டிலிருந்து பசும்பால் மட்டுமாவது வழங்கலாம் என அரசன் முடிவுசெய்து தன்னுடைய மக்கள் அனைவரையும் ஊருக்கு மத்தியில் வைத்துள்ள கொப்பரையில் தத்தமது வீடுகளில் பசுவிலிருந்து கரந்திடும் பசும்பாலை கொண்டுவந்து விடியற்காலைக்குள் ஊற்றி செல்லும்படி அறிவிப்பு செய்தான்

அதனடிப்படையில் அவ்வூரில் வசிக்கும் ஒருவன் தன்னுடைய பசுமாட்டில் பாலை கரந்து கொண்டு சென்று கொப்பரையில் ஊற்றிவரலாம் என புறப்படும்போது ஊரிலுள்ள அனைவரும் பாலினை கொப்பரையில் ஊற்றவிருக்கின்றனர் அதனால் நாம் மட்டும் நம்முடைய பங்கிற்கு தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகின்றது என முடிவுசெய்து யாரும் பார்க்கவில்லை என உறுதிபடுத்தி கொண்டு தம்முடைய பங்கிற்கு தண்ணீர் கொண்டு அந்த கொப்பரையில் ஊற்றினார்

அவ்வாறே அவ்வூரில் உள்ள அனைவரும் தத்தமது பங்கிற்கு தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகின்றது என முடிவுசெய்து அனைவரும் கொப்பரையில் தண்ணீரை மட்டுமே கொண்டு வந்து ஊற்றி சென்றனர் மறுநாள் காலையில் அவ்வூர் அரசன் ஊருக்கு மத்தியில் வைத்த கொப்பரையில் எவ்வளவு பால் நிரம்பியிருக்கின்றது என பார்க்கலாம் அதன்பின் பக்கத்து நாட்டிற்கு எடுத்துசென்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம் என முடிவுசெய்து தம்முடைய மந்திரிகளோடு அந்த கொப்பரையை சென்று பார்த்தால் அதில் முழுவதும் தண்ணீர் மட்டுமே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்

உடன் ஊர்மக்கள் அனைவரையும் ஒன்றுகூடச்செய்து எந்த வொரு நற்செயலையும் நாமேமுதலில் செய்யும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் அதை மற்றவர்கள் செய்து கொள்வார்கள் நாம் நம்முடைய வேலையை மட்டும் செய்வோம் எனஇருந்திடவேண்டாம் என்றும் அவ்வாறே நமக்கு ஒரு பணி வழங்கினால் அதனை நாம் உண்மையாக முழுமனதோடு செய்யும் எண்ணம் நம்ஒவ்வொருக்கும் வரவேண்டும் என்றும் அறிவுரை வழங்கியபின் தன்னுடைய சொந்த பால்பண்ணை யிலிருந்து பசும்பாலினை பக்கத்து நாட்டிற்கு அந்த நாட்டு அரசன் வழங்கினார்

இதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டியநீதி என்னவென்றால் : எந்தவொரு நற்செயலையும் முதலில் நாம் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் அவ்வாறே நமக்கு அளித்த பணியை நாம் உண்மையாக முழுமனதோடு செய்து முடிக்கவேண்டும் என்பதே

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...