ஞாயிறு, 27 மே, 2012

ஒரு நிறுவனத்தின் மேலாளரும் ஒரு நல்ல தலைவனும் சமமானவர்களா


ஒரு நிறுவனத்தின் மேலாளரும் ஒரு நல்ல தலைவனும் சமமானவர்களா எனில் பின்வரும் காரணங்களினால் இருவரும் சமமானவர்கள் அன்று என தெரியவரும் 1 ஒரு நிறுவனத்தின் மேலாளர் முன்கூட்டியே திட்டமிடபப்பட்ட அந்நிறுவனத்தின் குறிக்கோளை அடைவதற்காக தம்முடைய குழு சரியான நோக்கில் செயல்படுகின்றதா என மேற்பார்வை யிடுகின்றார் ஒரு நல்ல தலைவன் தம்முடைய குழுசரியான முடிவை அடைவதற்காக குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கின்றார்

2 ஒரு நிறுவனத்தின் மேலாளர் சரியான முடிவை அடைய குழுஉறுப்பினர்களின் செயலை மேற்பார்வையிடுகின்றார் ஒரு நல்ல தலைவன் சரியான முடிவை அடைய குழு உறுப்பினர்களுடன் தாமும் ஒரு உறுப்பினராக சேர்ந்து செயல்படுகின்றார்

3 ஒரு நிறுவனத்தின் மேலாளரின் குறிக்கோள் சரியான முடிவை அடைவதாகும் ஒரு நல்ல தலைவனின் குறிக்கோள்தம்முடைய குழு உறுப்பினர்களை சிறந்தவர்களாக உருவாக்குவதாகும்

4ஒரு நிறுவனத்தின் மேலாளரின் செயல் அந்நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுதல்களாகும் ஒரு நல்ல தலைவனின் செயல் அந்நிறுவனத்தின் சிறந்த வழிகாட்டுதல்களை உருவாக்குவதாகும்

5ஒரு நிறுவனத்தின் மேலாளர் தம்கீழ் பணிபுரிபவர்கள் தாம் இட்டபணியை சரியாக செய்கின்றார்களா என மேற்பார்வையிடுவதாகும் ஒரு நல்ல தலைவன் தம்முடைய குழுஉறுப்பினர்களின் செயல் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு சரியாக வழிகாட்டுதல்களை செய்கின்றார்

6ஒரு நிறுவனத்தின் மேலாளர் தம்கீழ் பணிபுரிபவர்களில் தவறு செய்பவர்களை தண்டிக்கின்றார் ஒரு நல்ல தலைவன் தம்கீழ் பணிபுரிபவர்கள் தவறுசெய்தால் அதனை ஆய்வுசெய்து சரியாக செய்வதற்காக வழிகாட்டுகின்றார்

7ஒரு நிறுவனத்தின் மேலாளர் தம்கீழ் பணிபுரிபவர்களுக்கு அந்நிறுவனத்தின் குறிக்கோளை அடைவதற்காக எவ்வாறு செயல்படவேண்டும் என கட்டளை யிடுகின்றார் ஒரு நல்ல தலைவன் தம்கீழ் பணிபுரிபவர்களின் செயலை கவணித்து அக்குழுவின் குறிக்கோளை அடைவதற்கான வழியை அவர்களே பெறுமாறு செய்கின்றார்

8ஒரு நிறுவனத்தின் மேலாளர் அந்நிறுவனத்தின் குறிக்கோளை அடைவதற்கான செயல் எந்த நிலையில் உள்ளது என ஆய்வுசெய்வதற்காக அவ்வப்போது தம்கீழ் பணிபுரிபவர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் கூட்டத்தை கூடுவதற்காக கட்டளை இடுகின்றார் ஒரு நல்ல தலைவன் அக்குழுவின் கூட்டத்தை கூட்டி தம்முடைய குறிக்கோளை அடைவதற்கான செயல் எந்த நிலையில் உள்ளது என விவாதித்து முடிவுசெய்திடுமாறு ஊக்கவிக்கின்றார்

9ஒரு நிறுவனத்தின் மேலாளர் குழு உறுப்பினர்களின் அவரவர்களுக்கு உரிய மரியாதையை கட்டுபடுத்துபவர் ஆவார் ஒரு நல்ல தலைவன் குழுஉறுப்பினர்களின் மரியாதையை அவரவர்களுக்கு உரியதாக்குகின்றார்

10 ஒரு நிறுவனத்தின் மேலாளரின் அனுகுமுறை தொழில்நுட்பம் சார்ந்ததாகும் ஒரு நல்ல தலைவனின் அனுகுமுறை பகுத்தாயும் செயலாகும்

11 ஒரு நிறுவனத்தின் மேலாளர் தம்கீழ்பணிபுரிபவர்களின் செயலை ஈடு செய்கின்றார் ஒரு நல்ல தலைவன் தம்கீழ் பணிபுவர்களின் செயலை ஊக்குவிக்கின்றார்

12 ஒரு நிறுவனத்தின் மேலாளர் தம்கீழ்பணிபுரிபவர்களிடம் எப்போதும் கட்டளை யிடும் தொனியிலேயே பேசுகின்றார் ஒரு நல்ல தலைவன் தம்கீழ் பணிபுவர்களிடம் அறிவுரை கூறும் தொனியில் பேசுகின்றார்

திங்கள், 14 மே, 2012

மக்கள் தொடர்பு கலையை எவ்வாறு வளர்த்து மேம்படுத்துவது


தற்போது நாம் அனைவரும் ஒரு குழுவாக சமுதாயமாக சேர்ந்து வாழும் நிலையில் இருந்து வருகின்றோம்.இந்நிலையில் ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்தோடு தொடர்பு கொள்வதற்கான ஏதேனுமொரு தகவலை எவ்வாறு அளிப்பது என்பது மிக முக்கியமான தகவல்தொடர்பு கலையாகும் இவ்வாறான சமுதாயத்தோடு தொடர்பு கொள்வதற்கான தகவல் தொடர்பு திறனை பின்வரும் வழிகளில் மேம்படுத்தலாம்

1.மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு நம்முடைய செய்தியை பகிர்ந்து கொள்ளும் முதல் படிமுறையாக நம்மைவிட வயதில் மூத்தவர்களை உறவுமுறையிலும் நம்மைவிட இளையோரை பெயரிட்டும் அழைத்து தொடர்பு கொள்வது இருவருக்குமான தொடர்பை மிக நெருக்கமானதாக அமைத்திடும்

2. நாம் கூறவரும் செய்தியை மிக விரிவாக எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி கூறுவது நன்று

3. நாம் கூறவிரும்பும் செய்தி தொடர்பான அனைத்து விவரங்களையும் அதனுடன் சேர்த்து விவரமாக கூறுவது நன்று

4. தகவலை கூற ஆரம்பிக்கும்போதே அதன் முடிவை கூறுவது நாம் கூற விரும்பும் செய்தியை கேட்பவர்கள் அரைகுறையாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படும் அதனால் முதலிலிருந்து வரிசை கிரமமாக செய்தி தொடர்பு விவரங்கள் அனைத்தையும் கூறுவது அதனினும் நன்று

5.செய்தியை மறைமுகமாக யூகித்து அறியுமாறு கூறுவது சரியன்று அதாவது நாம் கூறவிழையும் செய்தி ஒன்றாகவும் அதிலிருந்து பெறுபவர் அறிந்து கொண்ட செய்தி வேறுஒன்றாகவும் இருந்திடுமாறு கூறவேண்டாம்

6. நாம் கூறவிழையும் செய்தி நம்முடைய சொந்த சொற்களாக இருக்கவேண்டும் திரித்து புனைந்து கூறியதாக இருக்கவேண்டாம்

7.கூறும் செய்தி தெளிவாகவும் எளிதாகவும் பெறுபவர் அறிந்து கொள்ளும் வகையிலும் இருந்திடுமாறு பார்த்துகொள்க

8 பெறுபவர் கூறும் செய்திகேற்றவாறு நம்முடைய பதில் இருக்குமாறு பார்த்து கொள்க பதில் செயல் தேவையில்லை

இவ்வாறு மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நம்முடைய செய்தி தொடர்பு கலையை வளர்த்து மேம்படுத்தி கொள்க

செவ்வாய், 8 மே, 2012

மற்றவர்களிடம் குறைகாண்பதைவிட அந்த குறையை நாமே எவ்வாறு சரிசெய்வது என தெரிந்து செயல்படுக


ஓவியம் வரைவதற்கு கற்றுகொடுக்கும் குருவிடம் பயிற்சி ஓவியர் ஒருவர் நன்குபயிற்சி பெற்று கற்று தேர்ந்தபின் இரண்டொரு நாட்கள் மிக கடுமையாக முயற்சி செய்து இந்த பயிற்சி ஓவியர் ஓவியம் ஒன்றைவரைந்து முடித்தார் தான் புதியதாக வரைந்த ஓவியத்தை பற்றி மக்கள் எந்தவிதமான கருத்துகளை கொணடுள்ளனர் என தெரிந்துகொள்ள விரும்பினார் அதனால் அப்பயிற்சி ஓவியர் வாழ்ந்துவரும் அவருடைய நகரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மையப்பகுதியில் அந்த ஓவியத்தை ஒருநாள் காலை நேரத்தில் வைத்து இந்த ஓவியத்தை காண்பவர்கள் இதில் குறை ஏதேனுமிருந்தால் அருகிலுள்ள வரைவு கருவியால் ஒரு பெருக்கல் குறியை வரைந்து குறிப்பிடும் படி அறிவிப்பு செய்திருந்தார்

பிறகு அன்றுமாலை தன்னுடைய ஓவியத்தில் பார்வையாளர்கள் குறைஏதேனும் கண்டு பிடித்தார்களா என தெரிந்து கொள்ள பயிற்சி ஓவியர் தன்னுடைய ஓவியத்தை சென்று பார்வையிட்டார்

என்ன கொடுமை அவருடைய ஓவியம் முழுவதும் பார்வையாளர்கள் பெருக்கல் குறியால் பூசி மெழுகியிருந்தனர் உடன் பதை பதைப்புடன் தனக்கு பயிற்சியளித்த குறுவிடம் சென்று அழுதபடியே தன்னுடைய ஓவியம் முழுவதும் குறையுள்ளதாக பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளதை காண்பித்தார்

உடன் குருவானவர் வருத்தபடாதே மீண்டும் மற்றொரு ஓவியத்தை வரைந்து கொண்டுவா என்று கூறியதை தொடர்ந்து அவ்வாறே பயிற்சிஓவியரும் மற்றொரு ஓவியத்தை வரைந்து குருவிடம் எடுத்துசென்றார்

குருவானவர் அந்த பயிற்சி ஓவியரை அழைத்து கொண்டு ஏற்கனவே பார்வையாளர்களுக்காக பயிற்சி ஓவியரின் ஓவியத்தை வைத்திருந்த அதே இடத்தில் மறுநாள் விடியற்காலை எடுத்து சென்று வைத்துவிட்டு அதனுடன் இந்த ஓவியத்தில் தவறுஏதேனுமிருந்தால் பார்வையாளர்கள் திருத்தம் செய்யலாம் தவறு எதுவுமில்லை யெனில் பார்வையாளர்கள் ஒன்றும் செய்யாது செல்லலாம் என அறிவிப்பு பலகையை வைத்து சென்றனர்

அதன்பிறகு அன்று மாலை பயிற்சி ஓவியர் தன்னுடைய ஓவியத்தில் பார்வையாளர்கள் ஏதேனும் திருத்தம் செய்துள்ளனரா என பார்வையிட்டார் என்ன ஆச்சரியம் அவருடைய ஓவியத்தில் எந்த திருத்தமும் யாரும் செய்யவில்லை மறுநாளும் அதற்கடுத்தநாளும் அவர்வைத்தஓவியம் அப்படியேதான் இருந்தது

பயிற்சி ஓவியர் தன்னுடைய குருவிடம் இதுஎவ்வாறு சாத்தியமாயிற்று என வினவினார் பொதுவாக மக்கள் அனைவரும் மற்றவர்கள்மீது எப்போதும் குறை காண்பதில் மட்டும் முனைப்பாகவும் முன்னிலையிலும் இருப்பார்களே தவிர அந்த குறையை எவ்வாறு நிவர்த்திசெய்வது எனும்போது மட்டும் இதே மக்கள் யாருவம் முன்வராமல் பின்வாங்கிவிடுவார்கள் என்ற அடிப்படை கருத்தினை கூறினார்

ஞாயிறு, 6 மே, 2012

நம்முடைய திறனை அவ்வப்போது புதுப்பித்து வளர்த்து கொண்டே இருந்திட வேண்டும்


ஒரு மரவியாபாரியிடம் நல்ல திடகாத்திரமான மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் தனக்கு மரம் வெட்டும்பணியை வழங்குமாறு கோரினார் உடன் மரவியாபாரியும் நல்ல கோடாரி ஒன்றை அவரிடம் கொடுத்து நாளொன்றுக்கும் அதிகபட்சம் எவ்வளவு மரங்களை மரம் அந்த மரம்வெட்டும் தொழிலாளி வெட்டுகின்றாரோ அந்த அளவிற்கு தாம் அவருக்கு கூலி வழங்குவதாக கூறியதை தொடர்ந்து அந்த மரம்வெட்டும் தொழிலாளியும் அதனை ஏற்றுகொண்டு அன்று 15 மரங்களை வெட்டினார் பரவாயில்லை நன்றாக மரம் வெட்டுகின்றாய் இவ்வாறே தினமும் மரம் வெட்டும் பணியை செய்திடுமாறு பாராட்டி அதற்கேற்ற கூலியையும் மரவியாபாரி வழங்கினார்

அதற்கடுத்த நாளில் மரம்வெட்டும் தொழிலாளியால் 12 மரங்களை மட்டுமே வெட்டமுடிந்தது

மூன்றாவது நாளில் 10 மரங்களை மட்டுமே அந்த மரம்வெட்டும் தொழிலாளியால் வெட்டமுடிந்தது

இவ்வாறு ஒவ்வொருநாளும் மரம்வெட்டும் தொழிலாளியால் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது என்னடா இது சோதனை நமக்கு மரம் வெட்டும் திறன் குறைந்து விட்டதோ என எண்ணி அந்த மரம் வெட்டும் தொழிலாளி மனம் கலங்கினார்

பின்னர் நேரடியாக மரவியாபாரியிடம் சென்று தன்னால் தற்போது முதல் நாளில் வெட்டிய அளவிற்கு மரங்களை வெட்டமுடியவில்லை அதற்காக மன்னித்து கொள்ளுமாறு வேண்டினார்

அதற்கு அம்மரவியாபாரி “உனக்கு வழங்கபட்ட கோடாரியை எப்போது கூர் தீட்டினாய் “ என வினவியதற்கு “கோடாரிக்கு கூர் தீட்டுவதா மரம் வெட்டுவதற்கே எனக்கு நேரம் போதுமானதாகஇல்லை இதில் கோடாரிக்கு கூர் தீட்டுவதற்கெல்லாம் நேரமே இல்லை “ என மரம்வெட்டும் தொழிலாளி கூறினார்

“அடடா முதலில் உன்னிடம் கொடுத்த கோடாரிக்கு கூர் தீட்டு “என்று அம்மரவியாபாரி கூறியபின் அவ்வாறே மரம்வெட்டும் தொழிலாளியும் தனக்கு வழங்கிய கோடாரிக்கு கூர் தீட்டியபின் அன்று மிகுதி பொழுது 5 மரங்களை வெட்டினார்

முன்பே இந்த ஆலோசனை தெரியாமல் போய்விட்டதே என எண்ணி அதன்பின்னர் தமக்கு வழங்கிய கோடாரிக்கு அவ்வப்போது கூர் தீட்டி அதிக எண்ணிக்கையில் அதாவது முதல் நாளில் வெட்டிய அதே அதே அளவு மரங்களை ஒவ்வொரு நாளிலும் மரங்களை வெட்டி போதுமான கூலியை பெற்று நிம்மதியாக வாழ்ந்துவந்தார்

இவ்வாறே நாமும் நம்முடைய திறனை மழுங்கிட விட்டிடாமல் அவ்வப்போது போதுமான அளவிற்கு புதுப்பித்து வளர்த்து கொண்டே இருந்தால் தான் இந்த போட்டிமிகுந்த உலகில் நம்மால் தலைநிமிர்ந்து வாழமுடியும்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...