செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

நம்முடைய வாழ்க்கையின் முழுபயன் யாது


தத்துவ பேராசிரியர் ஒருவர் தம்முடைய வகுப்பில் ஒருநாள் பெரிய காலியான ஜாடி ஒன்றை கொண்டுவந்துவைத்து அதில் பெரிய உருண்டையான பந்துகள் சிலவற்றை இட்டு நிரப்பியபின் தம் வகுப்பு மாணவர்களிடம் “தற்போது அந்த ஜார் முழுவதும் நிரம்பிஉள்ளதா” என வினவினார்

“ஆம் ஐயா ஜாடி முழுவதும் பந்துகள் நிரம்பிஉள்ளன இனி நிரப்புவதற்கு இந்த ஜாடியில் மிகுதி காலியிடம் இல்லை ” என கூறி அதனை ஏற்றுக்கொண்டனர்

பிறகு அப்பேராசிரியர் அருகிலிருந்த கொஞ்சம் கூழாங்கற்களை பொறுக்கி அதே ஜாருக்குள் இட்டு அந்த ஜாடியை குளுக்கியபின் தம் வகுப்பு மாணவர்களிடம் “தற்போது அந்த ஜார் முழுவதும் நிரம்பிஉள்ளதா” என வினவினார்

“ஆம் ஐயா ஜாடி முழுவதும் பந்துகளோடு கூழாங்கற்களும் சேர்ந்து நிரம்பிஉள்ளன இனி நிரப்புவதற்கு இந்த ஜாடியில் மிகுதி காலியிடம் இல்லை” என கூறி ஏற்றுக்கொண்டனர்

பிறகு மீண்டும் அந்த தத்தவ பேராசியர் அருகிலிருந்த கொஞ்சம் மணலை அள்ளி அதே ஜாருக்குள் இட்டு அந்த ஜாடியை குளுக்கியபின் தம் வகுப்பு மாணவர்களிடம் “தற்போது அந்த ஜார் முழுவதும் நிரம்பிஉள்ளதா” என வினவினார்

“ஆம் ஐயா ஜாடி முழுவதும் பந்துகளோடும் கூழாங்கற்களோடும் மணலும் சேர்ந்து நிரம்பிஉள்ளன இனி நிரப்புவதற்கு இந்த ஜாடியில் மிகுதியாக காலியிடம் ஏதும் இல்லை “ என கூறி மீண்டும் ஏற்றுக்கொண்டனர்

பிறகு மூன்றாவது முறையாக அருகில் ஒருபாத்திரத்திலிருந்த கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதே ஜாருக்குள் ஊற்றி ஜாடியை நிரப்பியபின் தம் வகுப்பு மாணவர்களிடம் “தற்போது அந்த ஜார் முழுவதும் நிரம்பி உள்ளதா” என வினவினார்

“ஆம் ஐயா ஜாடி முழுவதும் நிரம்பிஉள்ள பந்துகளோடும் கூழாங்கற்களோடும் மணலும் சேர்ந்து நிரம்பியுள்ள அந்த ஜாடியில் சிறுசிறு இடைவெளியில் தண்ணீர் சென்று நிரம்பியுள்ளது இனி நிரப்புவதற்கு இந்த ஜாடியில் மிகுதியாக காலியிடம் ஏதும் இல்லை” என கூறி ஏற்றுக்கொண்டனர்

“நன்றாக கவனியுங்கள் மாணவர்களே இந்த ஜாடி போன்றதுதான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையாகும் அதில் பெரியபெரிய பந்துகள் பேன்றதுதான் நம்முடைய குடும்பம் பிள்ளைகள் ஆவார்கள் இவர்களாலும் நம்முடைய வாழ்க்கை முழுவதம் நிரம்பி விட்டதாக இருக்கவேண்டாம்

இவை மட்டும் நம்முடைய வாழ்க்கையன்று நாம் உயிர் வாழ பொருளீட்ட வேண்டுமல்லவா அதற்காக நாம் செய்யும் வேலை நாம் வாழுகின்ற நம்முடைய வீடு ,நம்முடைய தோட்டம் துறவு ,நிலம் போன்றவைகள் இந்த ஜாடிக்குள் இட்ட கூழாங்கற்களை போன்றவையாகும்

அது மட்டுமா நம்முடைய வாழ்க்கை நம்முடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் இந்த ஜாடிக்குள் நிரப்ப பட்ட மணல் போன்றவர்கள் இதுமட்டுமா நம்முடைய வாழக்கை அன்று

நாம் அவ்வப்போது நம்முடைய பிள்ளைகளோடு வாழ்க்கைத் துனையோடும் ஒட்டிஉறவாடவேண்டும் இந்த செயலே நம் ஒவ்வொருவரின் முதல் கடமையாகும் இதனால்மட்டும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் முடிந்ததாக எண்ணிவிடவேண்டாம் இரண்டாவதாக நம்முடைய பணியை செவ்வன செய்வது நமக்கு தேவையான வீடு நிலம் போன்ற இதர பொருட்களை ஈட்டுவது ஆகியவை நம்முடைய இரண்டாவது கடமையாகும் இந்த இரண்டாவதால்மட்டும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் முடிந்ததாக எண்ணிவிடவேண்டாம்

மூன்றாவதாக நம் உற்றார் உறவினர் நண்பர்களோடு உறவாடுவது நான்காவது கடமையாகும் இந்த மூனாறாவதால்மட்டும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் முடிந்ததாக எண்ணிவிடவேண்டாம்

ஏழை எளியோர்களுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் இயலாவதர்களுக்கும் நம்முடைய உடல் பொருள் ஆகிய ஏதாவதொன்றால் நம்முடைய உள்ளன்போடு செய்யும் உதவியே இந்த ஜாடிக்குள் நிரப்பிய தண்ணீர் போன்றதாகும்” என விளக்கமளித்தார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...