நிறுவனங்களில் பயன்படுத்தபடும் நிருவாக உரையாடலின் உண்மையான அர்த்தம் பின்வருமாறு
1."We will do it"
"நாங்கள் அதை செய்கின்றோம்" என்றால் "நீ அதைச்செய்" என அர்த்தமாகும்
2."You have done a great job"
"நீ நன்றாக உன்னுடைய பணியை செய்தாய் " என பாராட்டினால் " மேலும் அதிகமான பணி உனக்கு வழங்கவதற்காக காத்திருக்கின்றது " என அர்த்தமாகும்
3."We are working on it"
" நாங்கள் அதற்காக பணிசெய்து வருகின்றோம் " என்றால் " அவ்வேலையை நாங்கள் இதுவரையில் செய்யவே தொடங்கவில்லை " என அறிந்து கொள்ளலாம்
4."Tomorrow first thing in the morning"
" நாளை காலையில் முதலில் இந்த பணிதான் செய்யவிருக்கின்றோம்" என்றால் "இதுவரையில் இந்த பணியை செய்யவே தொடங்கவில்லை நாளையாவது அதனை செய்யதொடங்கலாம் " என தெரிந்து கொள்ளலாம்
5."After discussion we will decide-I am very open to views"
"நீண்ட விவாதத்திற்கு பிறகு நாங்கள் இதனை "நான் மிகதிறந்த மனதுடன் காண்பதாக" முடிவுசெய்தோம் " என்றால் "நான் ஏற்கனவே முடிவுசெய்துவிட்டேன் அதனை நீ எவ்வாறு செய்வது என நான் விரைவில் அதனைபற்றி கூறுவேன்" என அறிந்து கொள்க
6."There was a slight miscommunication"
" சிறிது தவறான தகவல் தொடர்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்றால் " நாங்கள் உண்மையில் பொய்சொல்கிறோம் " என அர்த்தமாகும்
7."Lets call a meeting and discuss"
" நாம் ஒரு கூட்டத்தை அழைத்து கூட்டி அதைபற்றி விவாதிப்போம் " என்றால் "தற்போது இதுபற்றி பேசுவதற்கு எனக்கு நேரமில்லை பின்னர் இது பற்றி பேசலாம் " என அர்த்தமாகும்
8."We can always do it"
" நாங்கள் அதனைஎப்போதும் செய்யமுடியும்"என்றால் "எங்களால் உண்மையில் அதனை சரியான நேரத்தில் செய்யமுடியாது" என அறிந்து கொள்ளலாம்
9."We are on the right track but there needs to be a slight extension of the deadline"
" நாங்கள் சரியான பாதையில் செல்கின்றோம் ஆனால் முடிவிற்கான சிறு விரிவாக்கம் மட்டும் தேவையாகஉள்ளது " என்றால் " இந்த செயல் குழம்பமாகிவிட்டது அதனால் அதனை சரியான நேரத்தில் முடித்து தருவதற்கு முடியாத நிலையுள்ளது" என அர்த்தமாகும்
10."We had slight differences of opinion "
"நாங்கள் சிறிது கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம் " எனில் " உண்மையில் எங்களுக்குள் உட்பூசலில் நாங்கள் சிக்கியுள்ளோம் " என அர்த்தமாகும்
11."Make a list of the work that you do and let's see how I can help you"
"முதலில் நீசெய்யவேண்டிய பணிகளை பட்டியலிடு அதன்பின் நான் அவற்றுள் எவ்வாறு உதவுமுடியும் என பார்க்கின்றேன் " என்றால் "எப்படியோ நீ மட்டும் முயன்று அந்தபணியை செய்து முடித்துவிட முயற்சிசெய் அதற்காக என்னிடமிருந்து எந்தவித உதவியும் எதிர்பார்க்காதே" என அர்த்தமாகும்
12."You should have told me earlier"
"எப்போதும் எந்த தகவலையும் முன்கூட்டியே எனக்கு தெரிவித்து விடு " என்றால் " முன்பே சொல்வதாக இருந்தாலும் செயல் நடந்த பின் தகவல் சொல்வதாக இருந்தாலும் முடிவு ஒன்றமில்லை" என அர்த்தமாகும்
13."We need to find out the real reason"
" உண்மையான காரணம் என்னவென அறிந்துகொள்ள வேண்டியுள்ளது " எனில் "நீ எந்தவிடத்தில் தவறினாய் என நான் ஏற்கனவே அறிந்து கொண்டுள்ளேன் " என அர்த்தமாகும்
14."Well Family is important; your leave is always granted. Just ensure that the work is not affected,"
" உன்னுடைய குடும்பம் மிகமுக்கியம்தான் அதனால் உன்னுடைய விடுப்பும் அனுமதிக்கபடுகின்றது ஆனால் உன்னுடைய பணியை கண்டிப்பாக முடித்து கொடுப்பதை உறுதிசெய்து கொள் " என்றால் " உனக்கு அளிக்கபட்ட உன்னுடைய பணியை முடித்தால் மட்டுமே நீ கோரும் விடுப்பை அனுமதிப்போம் " என அர்த்தமாகும்
15."We are a team,"
"நாங்கள் ஒரே குழுவாக உள்ளோம் " எனில் "நான் மட்டும் அத்தவறுக்கு பொறுப்பாக மட்டேன் " என அர்த்தமாகும்
16."That's actually a good question"
"அது மிகச்சிறந்த கேள்விதான் "என்றால் அதனை பற்றி எந்த விவரமும் எனக்கு தெரியாது " என அர்த்தமாகும்
17."All the Best"
"எல்லாம் நல்லவிதமாக அமையட்டும் " என்றால் " நீ மிக இக்கட்டான நிலையில் மாட்டிகொண்டுள்ளாய் " என அர்த்தமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக