ஒருநாள் அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் வழக்கமான பணியை தொடங்கினார் அவரோடு சேர்ந்து பணிபுரிந்துவரும் பேருந்து ஓட்டுநரும் அவர்களுடைய வண்டியை பேருந்து நிலையத்திலிருந்த மிக சீராக செலுத்தி வந்தார்
முதல் நிறுத்தத்தில் ஏராளமான பயனிகளுடன் வாட்டசாட்டமான திடகாத்திரமான பயில்வான போன்ற நபர் ஒருவர் அப்பேருந்தில் ஏறி நடத்துநரை நோக்கி “பெரியண்ணன் பேருந்து கட்டணம் செலுத்தமாட்டார் “என கூறிவிட்டு முன்னிருக்கையில் அமர்ந்தார் நடத்துநர் நோஞ்சான் போன்றிருந்ததால் அந்த பயில்வான போன்ற நபரிடம் பேருந்தில் பயனம் செய்வதற்கான கட்டணத்தை எவ்வாறு கேட்டு பெறுவது என பயந்து தயங்கியபின் சரி நாமே நம்முடைய சொந்த பணத்தை அந்த பெரியண்ணன் பேருந்திற்கான கட்டணம் வாங்கியதாக சரிசெய்து கொள்ளலாம் என பெரியண்ணனிடம் பேருந்தில் பயனம் செய்வதற்கான கட்டணத்தொகை கேட்பதை விட்டுவிட்டார் அதன்பின் கடைசியான பேருந்து நிலையத்தில் அந்த பெரியண்ணன் இறங்கி சென்றார்
மறுநாளும் அவ்வாறே முதல் நிறுத்தத்தில் ஏராளமான பயனிகளுடன் அதே வாட்டசாட்டமான திடகாத்திரமான பயில்வான போன்ற பெரியண்ணன் அப்பேருந்தில் ஏறி நடத்துநரை நோக்கி “பெரியண்ணன் பேருந்து கட்டணம் செலுத்தமாட்டார்” என கூறிவிட்டு முன்னிருக்கையில் அமர்ந்தார் நடத்துநர் நோஞ்சான் போன்றிருந்ததால் அவரிடம் எப்படி பேருந்தில் பயனம் செய்வதற்கான கட்டணத்தை கேட்டு அந்த பயில்வான போன்ற நபரிடம் பேருந்தில் பயனம் செய்வதற்கான கட்டணத்தை எவ்வாறு கேட்டு பெறுவது என பயந்து தயங்கியபின் சரி நாமே நம்முடைய சொந்த பணத்தை அந்த பெரியண்ணன் பேருந்திற்கான கட்டணம் வாங்கியதாக சரிசெய்து கொள்ளலாம் என பெரியண்ணனிடம் பேருந்தில் பயனம் செய்வதற்கான கட்டணத்தொகை கேட்பதை விட்டுவிட்டார் அதன்பின் கடைசியான பேருந்து நிலையத்தில் அந்த பெரியண்ணன் இறங்கி சென்றார்
இவ்வாறே அந்நிகழ்வு தொடர்ச்சியாக தினமும் நடந்துவந்தது தினமும் நடைபெறும் இவ்வாறான நிகழ்வினால் நமக்கு பெருத்த அவமானமாக உள்ளதே இதனை எவ்வாறு தீர்வுசெய்வது என ஆலோசணை செய்து இறுதியாக அவரை போன்று தாமும் பயில்வானாக தம்முடைய உடலை வளர்த்து கொண்டால் அவரை தட்டி கேட்கமுடியும் என முடிவுசெய்து அவ்வூரில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று தன்னுடைய உடல்வலிமையை கட்டுடல் போன்று வலிமையாக்கி வந்தார்
தமக்கு போதுமான உடல்வலு உள்ளது என திருப்தி ஏற்பட்டபின் மறுநாள் தம்முடைய பணியை தொடங்கினார் இன்று வரட்டும் அந்த பெரியண்ணன் எனும் பயிலவானுடன் நேருக்கு நேர் மோதி இன்று இரண்டில் ஒன்றை பார்த்துவிடுகிறேன் என தம்முடைய மனத்தில் திட்டுமிட்டுகொண்டு வழக்கமான கட்டணம் வசூல் செய்திடும் பணியை ஆற்றிவந்தார்
இந்நிலையில் அப்பேருந்தின் முதல் நிறுத்ததில் வழக்கமாக ஏராளமான பயனிகளுடன் வாட்டசாட்டமான அந்த திடகாத்திரமான பயில்வான் போன்ற பெரியண்ணன் அப்பேருந்தில் ஏறி முன்கூட்டியே செலுத்தபட்ட மாதாந்திர பயனஅனுமதி சீட்டு தன்னிடம் இருப்பதாக அந்த பேருந்து நடத்துநரிடம் காண்பித்து “இந்த அனுமதிசீட்டு தன்னிடம் இருப்பதால் பெரியண்ணன் பேருந்து கட்டணம் செலுத்தமாட்டார் ” என கூறிவிட்டு முன்னிருக்கையில் அமர்ந்தார்
அதன்பின் அடடா நாம் ஏன் அவர் செலுத்தமாட்டார் என பெரியண்ணனிடமே கேட்டறிந்த பின் நம்முடைய முடிவை எடுத்திருக்கலாமே என நடத்துநர் வெட்கபட்டார்
இவ்வாறே ஒருதலைமை நிருவாகி ஏதனுமொரு பிரச்சினை ஏற்பட்டவுடன் அதனைபற்றிய முழுவிவரமும் தெரிந்து கொள்ளாமல் தெரிந்த அரைகுறையான விவரங்களை கொண்டு தவறாக முடிவுசெய்து வீணாக அதை தீர்வுசெய்கிறேன் என தவறான முயற்சியை மேற்கொள்வது நிருவாகத்தின் நடைமுறைக்கும் அந்த பிரச்சினையை தீர்வுசெய்வதும் சரியான முன்னுதாரணம் அன்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக