திங்கள், 6 ஆகஸ்ட், 2012

பொதுவாக ஒரு நிறுவனத்தில் அவ்வப்போது எழும் சிக்கல்களும் அவைகளுக்கான தீர்வும்


ஒருநாள் என்னுடைய நண்பர் ஒருவர் மிகவும் மனவருத்தத்தில் இருந்தார் என்னவென்று வினவியபோது தன்னுடைய மேலாளர் அன்று தன்னை மிகவும் தரக்குறைவாக நடத்தியதாக வருத்தத்துடன் கூறினார் அதாவது தான் குறிப்பிட்ட அலுவலக மின்அஞ்சலை கையாண்ட செய்தியை மற்றொரு அலுவலக நண்பருடன் பகிர்ந்து கொண்டதுதான் தன்னுடைய தரப்பில் தவறியதாகவும் ஆனால் அவ்வாறு மற்ற அலுவலக நண்பர்களுடன் மின்அஞ்சலை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது அம்மேலாளருக்கு பிடிக்கவில்லையென்றும் கூறினார்

இவ்வாறான செயல் ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழில்முறை முதிர்ச்சியின்மை மற்றும் நெறிமுறை சார்ந்த சிக்கல்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைவதற்கு ஏதுவாகின்றது

பொதுவாக பின்வரும் சிக்கல்கள் ஒவ்வொரு நிறுவனத்திலும் அவ்வப்போது எழுகின்றன

1தவறான வள தேர்வு (சரியான வேலைக்கு தவறான நபரை தேர்வு செய்தல்), அல்லது சரியான வேலைக்கு சரியான நபரை தேர்வுசெய்வதை கண்டு கொள்ளாமல் விடுதல்

2, இனம், மொழி சார்பாக ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளுதல்

3.பணியாளர்கள் தம்முடைய பணியை காலத்தில் நன்றாக முடித்தால் பாராட்டுவதும் இல்லை ஊக்கபடுத்துவதுமில்லை

4,புறங்கூறுதல் மற்றவர்களின் காலை வாரிவிடுதல்

5, மற்றவர்களைபற்றி பொய்யான தகவலை அல்லது கிசுகிசுக்களை அனைவரிடமும் பரப்புதல்

6-பணியாளர்களுக்கு முரன்பாடான பதவிஉயர்வை வழங்குதல் அல்லது பரிந்துரைத்தல்

7,பணியாளர்களுக்கு ஒரே மாதிரயாக அல்லது சமமாக பணிகளை ஒதுக்கீடு செய்யாமல் தாம் விரும்பியவாறு தவறான வகையில் பணிகளை ஒதுக்கீடு செய்தல்

8, பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மெருகூட்டல் நிகழ்வில் தவறான வழியில் செயல்படுதல்

9-பணியாளர்கள் தவறுபுரியும்போது அவர்களை கடுமையாகவும் தரக்குறைவாகவும் நடத்துதல்

இவ்வாறான சிக்கல்களுக்கு பின்வரும் சரியான நடைமுறைகளை பின்பற்றினால் நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

ஒவ்வொரு நிறுவனத்திலும் நெறிமுறை உதவியை தொலைபேசிமூலம் அனைத்து பணியாளர்களும் தத்தமது குறைகளை கூறுவதற்காக கிடைக்குமாறு செய்யவேண்டும். இந்த செயல்முறை முற்றிலும் நடுநிலையாகவும் இயற்கையானதாகவும் இருக்க வேண்டும்.

நிருவாக நிலை தணிக்கையானது இயற்கையாகவும் நடுநிலை பிறழாதவாறும் உள்ள ஊழியர்களால் செய்யபட்டு பணியாளர்கள் அனைவருக்கும் ஒருதலைபட்சமின்றி நடுநிலையாக தீர்வு கிடைப்பதை அதன்மூலம் உறுதி செய்யவேண்டும்

முதிர்ந்த ஊழியர்கள் கிசுகிசுக்கள் புறங்கூறல் , கிடைத்தபோது சமயம் பார்த்து மற்ற பணியாளர்களின் காலை வாரிவிடுதல் போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே மோப்பம் பிடித்து அவற்றை தவிர்த்து சரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பொருத்தமாக செயற்படுதல்.

நன்றாக பணியை செய்தபணியாளர்களுக்கு அவர்களின் திறமையை அங்கீகாரம்செய்வதும் அவர்களுக்கு பரிசு அளிப்பதும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.

திறமை அடிப்படையில் பதவிஉயர்வு அளிப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...