ஒரு நிறுவனம் எந்த அளவிற்கு தம்முடைய ஊழியர்களின் உற்பத்தி திறன் உள்ளது என அறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களின் உற்பத்தி திறனை உயர்த்துவதற்கான அல்லது மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு ஒரு நிறுவனத்தின் ஊழியர்களின் உற்பத்தி திறனை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்
1.முதல் வழிமுறையாக தம்மிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலஇடைவெளியில் அவ்வப்போது நேரடி பணியில் பயிற்சி ,வகுப்பறை பயிற்சி, இணையத்தின் மூலம் பயிற்சி, கல்விச்சுற்றுலா அழைத்து செல்லுதல் ஆகியவற்றை அளித்தால் ஒருநிறுவனத்தின் வெற்றி ஏறுமுகமாக அமையும்
2. தம்முடைய ஊழியர்களை அவரவர்கள் சார்ந்த தொழில் நுட்பக் குழுக்களில் உறுப்பினராக சேரச்செய்து அதற்கான ஆண்டு சந்தா தொகையை நிறுவனமே செலுத்துமாறு செய்திடும்போது ஊழியர்கள் அவ்வாறான தொழில்பக்குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டு புதுப்புது ஆலோசனகள் கருத்துகள் உருவாகி ஒருநிறுவனத்தின் உற்பத்திறன் உயர ஏதுவாக அமையும்
3. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து ஒரு நிறுவன்த்தில் ஏற்பாடு செய்துள்ள விருந்து கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொள்ளுமாறு செய்திடும்போது அவர்களின் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் ஏற்படுகின்றது அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஊழியரும் அதற்கேற்ப தம்முடைய பணியை புது உத்வேகத்துடன் செய்துவர காரணமாகின்றது
4. ஒரு நிறுவனத்தில் அதிக உற்பத்தி செய்பவர்களுக்கு பரிசு அளித்தல் தொடர்ந்து விடுப்பு ஏதுவும் துய்க்கமால் தம்முடைய பணிக்கு வரும்ஊழியர்களுக்கு பரிசளித்தல் இவ்வாறான பரிசை ரொக்கமாக அளித்தல் என்பன போன்ற நவடிக்கைகளால் ஒரு நிறுவனத்தின் உற்பத்திறன் உயர வாய்ப்பு ஏற்படுகின்றது
5. ஒவ்வொரு மாதமும் அல்லது வாரமும் தொழில்நுட்ப கருத்தரங்குகள் ,குறிக்கோளை அடைவதற்கான சொற்பொழிவு கூட்டங்களை ஏற்பாடு செய்தல் அவ்வாறான நிகழ்ச்சியை நடத்துதல் இவ்வாறான கருதரங்குகளில் ஊழியர்களும் தம்முடைய கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பினை அளித்தல் என்பன போன்ற நிகழ்வுகள் ஒருநிறுவனத்தின் உற்பத்திறன் உயருவதற்கான மறைமுக காரணிகளாக அமைகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக