திங்கள், 31 டிசம்பர், 2012

எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டும்


வேட்டைகாரன் ஒருவன் காட்டில் ஒரு முயலை பிடிப்பதற்காக அந்த காட்டின் மையபகுதிவரை துரத்தி சென்றிடும்போது அது தப்பித்து புதருக்குள் சென்று மறைந்து போய்விட்டது அதனால் அம்முயலை பிடிக்கமுடியாமல் சோர்வுற்று திரும்பி வரும்போது வழியில் ஏராளமான எலும்புத்துண்டுகள் கறித்துண்டுகளும் இருப்பதை பார்த்தான்

அந்நிலையில் அவனுக்கு அருகே சிறுத்தை ஒன்று இவனை பார்த்துவிட்டு இவனை அடித்து கொன்று தின்றிட இவனைநோக்கி பாய்ந்து வந்தது

உடன் அவ்வேட்டைக்காரண் ஏ நண்பா நம்முடைய முயற்சியில் பாதிகூட வெற்றிபெறமுடியாது போல் இருக்கின்றது ஒன்றிற்கு மேற்பட்ட சிறுத்தையை பிடிக்கலாம் என இவ்விடத்தில் எலும்புத்துண்டுகளையும் கறித்துண்டுகளையும் போட்டு வைத்தோம் ஆனால் இப்போதுதான் ஒரு சிறுத்தை வருகின்றது சரி பரவாயில்லை இதனை மட்டுமாவது முதலில் பிடிப்போம் பின்னர் அடுத்து என்ன செய்வது என முடிவு செய்வோம் என மிக சத்தமாக கூறினான்

இதனை காதால் கேட்ட அந்த சிறுத்தையானது இவன் நம்மை பிடிப்பதற்காக இந்த எலும்புத்துண்டுகளையும் கறித்துண்டுகளையும் போட்டு வைத்துள்ளான் நாம் மாட்டினால் நம்முடைய உயிர் அவ்வளவுதான் என தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி போய்விட்டது

வேட்டைக்காரணும் இன்று வேட்டையில் ஒன்றும் கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை நாம் உயிரோடு வீடுபோய்சேருவோம் என வீட்டிற்கு திரும்பி சென்றான்

எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாக அதிலிருந்து மீண்டு வந்து சேருவதற்காக மிகச்சரியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டும் என்பதே இதில் நாம் அறியவேண்டிய நீதியாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...