ஞாயிறு, 30 டிசம்பர், 2012

எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாக செயல்படவேண்டும்


தொழிலாளி ஒருவர் வார கடைசி நாளன்று தன்னுடைய அந்த வார கூலித்தொகையை வாங்கிகொண்டு தன்னுடைய வீட்டிற்கு குறுக்கே இருக்கும் சிறு முட்புதர்காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்தார் ு

அந்த சமயத்தில் திடீரென வழிப்பறி திருடன் ஒருவன் அவர்முன் துப்பாக்கியுடன் வந்து ஒழுங்காக பையில் உள்ள அந்த வார கூலி தொகையை அனைத்தையும் கொடுத்துவிடும்படியும் இல்லையென்றால் தன்னுடைய கையில் உள்ள துப்பாக்கியால் அவரை சுட்டு கொன்று விடப்போவதாகவும் மிரட்டினான்

உடன் “நான் என்னுடைய பையில் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டு சென்றால் என்னுடைய மனைவி என்னை சந்தேகபடுவாள் அதனால் என்னுடைய சட்டையில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த துப்பாக்கியால் சுட்டால் அதனை காண்பித்து திருடன் வந்து இந்த வார கூலித்தொகையை வழிப்பறி செய்துகொண்டு போய்விட்டதாக கூறிவிடுவேன்” எனக்கூறியதை தொடர்ந்து ஒருமுறைமட்டும் அவருடைய சட்டையில் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுவிட்டு “சரி பணத்தை எடு” என கூறினான்

பின்னர்“இது பத்தாது என்னுடைய சட்டை முழுவதும் சல்லடையாக உன்னுடைய துப்பாக்கியால் சுட்டால்தான் மிக கடுமையாக உன்னோடு போராடி முடியாமல் இறுதியாகபணத்தை இழந்துவிட்டதாக கூறமுடியும்” எனக்கூறியதை தொடர்ந்து வழிப்பறிதிருடனும் சரியென தன்னுடைய துப்பாக்கியால் அத்தொழிலாளியின் மேற்சட்டையை கழற்றி முழுவதும் சல்லடையாக தோன்றிடுமாறு சுட்டுதள்ளியபின் இறுதியாக “என்னுடைய துப்பாக்கியில் குண்டுகள் ஏதும் இல்லை அனைத்தும் காலியாகிவிட்டன அதனால் இப்போதாவது உன்னுடைய பணத்தை கொடுத்துவிடு” என கூறினான்

இறுதியா க“அப்படி வா என்னுடைய வழிக்கு நண்பா ஒழுங்காக உன்னுடைய வீட்டிற்கு செல்வதாக இருந்தால் விட்டுவிடுகின்றேன் இல்லையெனில் உன்னை அப்படியே கையை கட்டி இழுத்து சென்ற எங்களுடைய ஊரிலிருக்கும் காவல் நிலையத்தில் உன்னை கொண்டு சென்று சேர்த்து நீஎன்னிடம் கூலித்தொகையை வழிப்பறி செய்ய முயன்றதாக கூறி சிறைசாலைக்கு அனுப்பிவைத்துவிடுவேன்” எனக் கூறியதும் “ஐயோ அப்படியெதுவும் செய்தவிடாதீர்கள் நான் உங்களுடைய வழிக்கு குறுக்காக வரமாட்டேன்” என பயந்து ஓடிவிட்டான்

இவ்வாறே எந்தவொரு இக்கட்டான சூழலிலும் நாம் சமயோசிதமாக அதிலிருந்து மீண்டு வந்து சேருவதற்காக மிகச்சரியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டும் என்பதே இதில் நாம் அறியவேண்டிய நீதியாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...