புதன், 20 மார்ச், 2013

செய்யும் பணியை முழு ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் செய்திடுக


மூன்று தொழிலாளர்கள் செங்கல்லை கொண்டு ஒரு வீட்டிற்கான சுவற்றினை கட்டும் பணியினை செய்துகொண்டு இருந்தனர் அந்தவழியே சென்ற வழிபோக்கன் அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி என்ன செய்து கொண்டு உள்ளனர் என வினவியபோது

முதலாமவன் இது கூடவா தெரியவில்லை நான் மனிதர்கள் வாழும் வீட்டினை கட்டுகின்றேன் என பதில் கூறினார்

இரண்டாவது நபர் நான் செய்யும் பணியை பார்த்தால் தெரியவில்லையா செங்கல்லை கொண்டு சுவற்றினை கட்டும் பணியினை செய்துகொண்டு இருக்கின்றேன் என பதில் கூறினார்

மூன்றாமவர் நான் மிக அழகான நினைவிடத்தை கட்டும் பணியை செய்து கொண்டு இருக்கின்றேன் என பதில் வழங்கினார்

இங்கு நன்றாக கவணியுங்கள் அந்த மூவர்களும் செய்யும் பணிஎன்னவோ ஒன்றுதான் ஆனால் இவர்கள் மூவரும் தங்களுடைய பணியினை வெவ்வேறு நோக்கத்தோடும் அக்கறையோடும் செய்து வந்தனர் அதனால் அவர்கள் அதனை வெவ்வேறு தோற்றமாக காணுகின்றனர் என்பதேயாகும்

பொதுவாக நாம் செய்யும் பணியானது தெருவை சுத்தம் செய்வதாக அல்லது ,தட்டச்சு செய்வதாக அல்லது சுத்தியலை தூக்கி அடிப்பது என எதுவாக இருந்தாலும் அதனை முழு ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் செய்யும்போதுதான் அந்த பணியானது முழுமையாக நிறைவு பெறுகின்றது அதன்மூலம் அந்த பணியினை செய்கின்ற நமக்கும் முழு மனத்திருப்தியும் மனமகிழ்வும் கிடைக்கின்றது

அதாவது அரைகுறையாக செய்யும் பணியானது அரைகுறை யாகவும் இறுதியில் ஒன்றும் இல்லாதும் முடியும் மேலும் எந்தவொரு பணியின் பண்பும் அந்த பணியை செய்கின்ற நபரின் பண்பும் பிரிக்கமுடியாது அதனால் எந்த நோக்கோடு அல்லது பண்போடு ஒருவர் ஒரு பணியை செய்கின்றாரோ அதே பண்புதான் அவருடைய பணியிலும் பிரதிபலிக்கும் என்பதே எதார்த்தமான உண்மையாகும் என இதிலிருந்து அறிந்து கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...