திங்கள், 25 மார்ச், 2013

பெற்றோர்களை உதாசினப்படுத்தாமல் பேணிக்காப்போம்


வயதான தந்தையும் அவருடைய மகனும் ஒரு வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தினர் மகன் மும்முரமாக எதோ எழுதி கொண்டருந்தார் அப்போது அவர்களின் வீட்டு தோட்டத்தில் காகம் ஒன்று காகா என கரைந்தது வயதான தந்தைக்கு காது சிறிது கேட்காது அதனால் என்னப்பா அது சத்தம் என வினாவினார் உடன் மகனும் காகம் ஒன்று கத்துவதாக கூறினார்

மீண்டும் அதே காகம் கரைந்தது மீண்டும் அது என்ன சத்தம் என அந்த தந்தை வினவியபோது மீண்டும் அம்மகன் காகம் ஒன்று கத்துவதாக கூறினார்

மூன்றாவது முறையாக அதே காகம் காகா என கத்தியது மூன்றாவது முறையாக அந்த வயதான தந்தை மகனிடம் அது என்ன சத்தம் என வினவியபோது தோ பெருசு சும்மா வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்தை விட்டுவிட்டு அதுஎன்ன இதுஎன்ன என கேள்வியெல்லாம் கேட்காதே எனக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்துவிடும் அதனை தொடர்ந்து உன்னை முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்துவிடுவேன் என அவருடைய மகனும் கோபமாக கத்தினார்

நிரம்ப சரிமகனே நீ சிறிய வயதில் இதேபோன்று நாம் அமர்ந்து இருந்தபோது இதேபோன்றே ஒரு காகம் பத்து தடவை கத்தியது ஒவ்வொரு தடவையும் அது என்ன என நீ வினவியபோது நானும் இவ்வாறு கோப படாமல் நம்முடைய மகன் இந்த உலகை பற்றிய இதனுடைய செயல்களைபற்றி அறிந்து கொள்ளவேண்டும் என அக்கறையோடு பொறுமையாக மகிழ்வோடு பதில் கூறிவந்தேன் என அமைதியாக பதிலளித்தார்

ஆம் நாம் அனைவரும் இந்த அவசர யுகத்தில் பொறுமை யின்றி மிகவேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றோம் ஆயினும் நாம் நல்ல மனிதனாக வளருவதற்காக நம்முடைய பெற்றோர்கள் என்னென்ன தியாகம் செய்தார்கள் என்ற நன்றியுனர்வு சிறிதும் இல்லாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிடும் நன்றியுனர்வற்ற மனப்பான்மை இன்றி நாளை நமக்கும் இதே நிலைமை வரும் என்ற உணர்வும் சிறிதும் இல்லாமல் உதாசினப்படுத்துகின்றோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...