ஞாயிறு, 3 மார்ச், 2013

பிள்ளைகளிடம் நல்லொழுக்கத்தை வளர்த்தல்


நல்லொழுக்கத்துடன் வளரும் பிள்ளைகளே பிற்காலத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும வாழ்க்கையில் வெற்றிபெற்றவனாகவும் மிளிரமுடியும் அதனால் பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் வளருவதற்கு பின்வழிமுறைகளை பின்பற்றிடுக

1 பொதுவாக சமுதாயத்தின் யாரோ ஒருவரின் செயலை முன்மாதிரியாக கொண்டு பின்பற்றுவதுதான் பிள்ளைகளின் நல்லொழுக்கத்திற்கு அடிப்படை செயலாகும். ஆனால் அப்பிள்ளைகளுக்கு சமுதாயத்தின் முதன் தொடர்பாக இருப்பது பெற்றோர்களே அதனால் பெற்றொர்களே முதலில் தம்முடைய பிள்ளைகளுக்கு அந்த யாரோ ஒருவர் என்பதற்கு பதிலாக ஒவ்வொரு பெற்றொரும் தாமே முன்மாதிரியாக இருந்து நல்வழிகாட்டிடுவது நன்று

2சமுதாயத்தில் நாளேடுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒலிஒளிபடங்கள் புத்தகங்கள் போன்றவைகளிலிருந்து ஒவ்வொரு பெற்றோரும் தான் பெறும் நல்ல கருத்துகளையும் அதனால் பெறும் நன்மைகளையும் தம்முடைய பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களையும் அதனை பின்பற்றிடுமாறு செய்வது நன்று

3 பிள்ளைகளுக்கு நன்னடத்தையை கற்பித்தல் என்பது திட்டமிடப்பட்டு வருவதன்று ஆனால் எதிர்பாராத விதமாக வந்தமையும் முக்கிய தருணங்களை பயன்படுத்தி அவர்களது வாழ்நாள் முழுதும் பயன்படும் தார்மீக நம்பிக்கைளை வளர்க்க உதவுவதற்கான தனது நடத்தையை தம்முடைய பிள்ளைகளும் பின்பற்றிடுமாறு செய்வது நன்று

4தங்களது தவறுகளை திருத்தி மீண்டும் வருங்காலத்தில் அதுபோன்ற தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துகொள்ளுதல் அதுபோன்ற தருணங்களில் சரியாக எவ்வாறு செயல்படுவது என்பன போன்ற சிறந்த ஒழுக்க பாடத்தை கற்றுக்கொள்ளுமாறு செய்திடுக மேலும் அதுபோன்ற நேரங்களில் நன்னடத்தை விதிகளை கண்டிப்பாக பின்பற்றிடுமாறு அவர்களை கண்கானித்திடுக

5பிள்ளைகளின் நன்னடத்தை எவ்வாறு மற்றவர்களை கவரும் என அவர்களுக்கு அறிவுறுத்துவதோடுமட்டுமல்லாம்ல் எப்போதும் அந்த நன்னடத்தைகளை முன்னிலைப்படுத்தி அவர்கள் செயல்படுமாறு கவணித்து கொள்க.

6நல்லொழுக்கத்துடன் செயல்படும் தருணங்களின் அவர்களின் செயலை பராட்டுவதால் பிற்காலத்தில் அவர்களின் செயல்கள் அவர்களுடைய நன்னடத்தைகளை வலுப்படுத்துவதாகவே அமையும்

7பிள்ளைகள் எப்போதும் மற்றவர்களை சார்ந்திருக்காமல் தம்முடைய செயலிற்கே தாமே பொறுப்பேற்குமாறு செய்திடுக

8நம்மை எவ்வாறு நடத்தவேண்டும் என விரும்புகின்றோமோ முதலில் அதேபோன்று நாம் மற்றவர்களை நடத்தவேண்டும் என்ற நல்லொழுக்கத்தின் மிகமுக்கிய வழியை நம்முடைய பிள்ளைகள் பின்பற்றிடுமாறு செய்திடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...