ஞாயிறு, 16 ஜூன், 2013

நாம் கூறும் சொல் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு பாதிப்பெதுவும் ஏற்படாமல்இருக்குமாறு பார்த்து கொள்க


ஒரு வயதான மனிதன் தன்னுடைய வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளைஞன்தான் அவ்வூரில் நடைபெறும் அனைத்து திருட்டிற்கும் காரணம் என்று பார்ப்பவர்கள் அனைவரிடமும் பொய்யான வதந்தி செய்தியை பரப்பிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்

அதனால் உண்மையாகவே அந்த இளைஞன் திருடியிருப்பானோ என்றும் அவ்வூரில் நடைபெறும் திருட்டிற்கும் அந்த இளைஞனுக்கும் என்றும் அந்த ஊரின் காவல்துறையானது சந்தேகபட்டுஅந்த இளைஞனை கைதுசெய்து சிறையில் அடைத்தது சிறிது காலம் கழித்தபின் அந்த இளைஞனுக்கும் அவ்வூரில் நடைபெறும் திருட்டிற்கும் தொடர்பே இல்லை என்றும் அவன் நிரபராதி என்றும் தீர்ப்பு கிடைக்கபெற்று அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டான்

பிறகுஅந்த இளைஞன் வீடுவந்து சேர்ந்ததும் பக்கத்து வீட்டு வயாதனவன் மீது இதுகுறித்து நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்தான் அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது அவ்வழக்கினை விசாரித்துவரும் நீதிபதியானவர் அந்த வயதான பெரியவரிடம் "ஏன் ? இவ்வாறு பொய்யான வதந்தியை பரப்பிவிட்டீர்கள்" என வினவியபோது "சும்மாபொழுது போக்காக இருக்குமாறுதான் நான் கூறினேனே தவிர உண்மையில் அவ்விளைஞன் பாதிக்குமாறு நான் ஏதும் செய்யவில்லை" என சாதித்தார் உடன் நீதிபதியானவர் அன்றைய தினமனி செய்திதாளை அந்த வயதான பெரியவரிடம் கொடுத்து "இந்த செய்திதாளை உங்களுடைய வீடுபோய்சேரும்வரை சிறுசிறு துண்டாக கிழித்தெரிந்துகொண்டே செல்க நாளை காலையில் நீதிமன்றத்திற்கு வந்து சேருக" என கூறிஅனுப்பினார்

அன்று அந்த வயதான பெரியவர் தன்னுடைய வீட்டிற்கு போய்ச்சேரும் வரை நீதிபதி கூறியவாறு செய்திதாளை சிறுசிறு துண்டுகளாக கிழித்து எறிந்துகொண்டே சென்று மறுநாள் நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார்

மறுநாள் நீதிபதிவந்ததும் அந்த வயதான மனிதனை பார்த்து "நேற்று உங்களிடம் கொடுத்த செய்திதாளை முழுமையாக சேகரித்து ஒட்டிஎடுத்துவருக " எனக்கூறியவுடன் வயதானவர் "அதுஎப்படி முடியும் நான்தான் அந்த செய்திதாள் முழமையும் சிறுசிறு துண்டுகளாக கிழித்து தரையில் எறிந்துவிட்டேனே அவைகள் எல்லாம் காற்றில் பறந்து போய்விட்டிருக்குமே" என பதில் கூறியபோது "அவ்வாறே நீங்கள் அந்த இளைஞனை பற்றிய அவதூறாக செய்தியை மற்றவர்களிடம் கூறியவுடன் அவை செய்திதாள்துண்டுகள் காற்றில் பரந்து சென்றவாறு இந்த தவறான அக்கப்போரான செய்தியும் உடன் பரவி அனைவரும் அவ்விளைஞனை பற்றிய தவறான நோக்கத்தில் பார்த்திடுமாறு அந்த இளைஞனுக்கு மனஉளைச்சலும் மனவருத்தமும் ஏற்பட்டுவிட்டது

அதனால் இனி அவ்வாறு நடந்துகொள்ளாதீர் மீறினால் உங்களுக்கு தக்க அபராதம் இந்த நீதிமன்றம் விதிக்கும்" என எச்சரித்து அனுப்பினார் அதை போன்றே நாம் கூறும் சொல் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு பாதிப்பெதுவும் ஏற்படாமல்இருக்குமாறு பார்த்து கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...