ஞாயிறு, 2 ஜூன், 2013

சக மனிதர்களை மனிதாபமானத்தோடு நடத்திடவேண்டும்


முன்னொரு காலத்தில் அரசன் ஒருவனுக்கு வாரிசு இல்லாததால் தனக்கு பிறகு அந்த நாட்டை ஆளுவதற்கான ஒருநபரைஅரசனாக நியமிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை உருவானது உடன் அவ்வரசன் தன்னுடைய நாடு முழுவதும் உள்ள இளைஞர்களில்" நமக்கு மேல் சக்தியுள்ள கடவுளை நேசிக்கவேண்டும் ","சக மனிதர்களை மனிதாபமானத்தோடு நடத்திடவேண்டும்!" ஆகிய நிபந்தனைகளுடன் கூடிய நேர்முகத்தேர்வை விருப்பபடும் இளைஞர்கள் கலந்து கொண்டு வெற்றிபெறுபவர்கள் அந்த அரசனுக்கு பின் அரசனாக பதவிஏற்கமுடியும் என அறிவிப்பு செய்தான் .

உடன் ஏராளமான இளைஞர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ள தலைநகருக்கு வந்து சேர்ந்தார்கள் மிகவும் வறுமையில் வாடும் ஏழைஇளைஞன் ஒருவனும் அதே நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள விரும்பினான் ஆனால் அவனுக்கு அணிந்து கொள்ள போதுமான நல்ல உடையோ தலைநகருக்கு செல்வதற்கு தேவையான பொருளாதார வசதியோ இல்லை இருப்பினும்அக்கம் பக்கத்தில் கெஞ்சி கூத்தாடி கடன்பெற்று நல்ல தரமான உடைகளை தயார்செய்து அனிந்து கொண்டு நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தான்

அந்நிலையில் பிச்சைக்காரன் ஒருவன் "ஐயா! தரும பிரபு உண்ணுவதற்கு போதுமான உணவில்லை ஐயா! உடுத்துவதற்கும் தரமான உடையில்லை ஐயா!" என யாசித்தபோது உடன் தன்னுடைய கையலிருந்த பணம் முழுவதையும் அந்த பிச்சைகாரனிடம் கொடுத்தது மட்டுமில்லாமல் தான் அணிந்திரிந்திருந்த புதிய உடையையும் கழற்றி அந்த பிச்சைக்காரணிடம் அணிந்து கொள்ளுமாறு வழங்கிவிட்டு வழக்கமான தன்னுடைய பழைய ஆடையை அணிந்து கொண்டு ஆங்காங்கு உள்ள அன்ன சத்திரத்தில் பசியாறி கொள்ளலாம் என்று மனதை தேற்றிகொண்டு தலைநகரை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தான்

ஒருவழியாக தலைநகரை வந்த சேர்ந்த பின் நேர்முக தேர்விற்கு வந்துள்ள இளைஞர்களின் கூட்டத்தில் இவனும் வரிசையில் நின்று இவனுடைய முறைவரும்போது அரச சபைக்குள் நுழைந்தான்

முதலில் அரசனுக்கு தலைகுனிந்து வணக்கம் செய்தபின் நிமிர்ந்து பார்த்தபோது ஆச்சரியமாகிவிட்டது "சாலை யோரத்தில் என்னிடம் என்னுடைய புதிய உடையையும் பொருளையும் பெற்றுக்கொண்ட பிச்சைகாரனா, நீங்கள்! "என வினவியபோது "ஆம் !அதே பிச்சைகாரன்தான் நான் என்னுடைய நிபந்தனைகளை யார் மிகச்சரியாக பூர்த்தி செய்வார்கள் என அறிந்துகொள்ள நான் அரசனுடைய உடையில் வந்தால் நான் கேட்பதை மக்கள் அனைவரும் கொடுக்கு தயாராக இருப்பார்கள் ஆனால் உண்மையாக மனமாற யார் சகமனிதர்களுக்கு உதவிடுவார்கள் என கண்டுபிடிக்கமுடியாது"

" அதனால் பிச்சைகாரனாக மாறுவேடமிட்டு நாட்டிற்குள் உலாவந்தேன் "அந்த அரசன் பதில் கூறியதோடு மட்டுமல்லாது "நீஒருவன் மட்டுமே என்னுடைய நிபந்தனையை பூர்த்தி செய்துள்ளாய் அதனால் நீதான் எனக்குபிறகு இந்த நாட்டிற்கு அரசன் "என அந்த அரச சபையில் அறிவிப்பு செய்தான்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...