வெள்ளி, 31 மே, 2013

எதிர்மறை எண்ணங்களை அவ்வப்போது நீக்கி நல்ல எண்ணங்களை கொண்டு நம்முடைய வாழ்வை வளப்படுத்த முயற்சி செய்க


புறநகரில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய வீட்டை சுற்றி காலியிடம் ஏராளமாக இருந்ததால் அதனை வீணாக புறம்போக்கு நிலம்போன்று விட்டுவிடாமல் காய்கறி செடிகளையும் பூஞ்செடிகளையும் நட்டு நல்ல அருமையான தோட்டமாக பராமரித்து வந்தார்

அந்நிலையில் அவருடைய தோட்டத்தில் நாம் வெளிநாட்டில் இருந்து அரசுபள்ளிகளில் ஏழைக்குழந்தைகளின் மதிய உணவிற்காக இறக்குமதிசெய்த மக்காச்சோளத்தோடு கூடவே இலவசஇணைப்பாக தாணாகவே வந்து சேர்ந்த பர்தீனியம் எனும் விசமுள்ள களைச்செடி முளைத்திருப்பதை பார்த்து அதனால் நம்முடைய தோட்டத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என அலட்சியமாக விட்டுவிட்டார்

ஏதோவொரு அவசரவேலையாக குடும்பத்துடன் அருகிலிருந்த உறவினரின் ஊருக்கு சென்று ஓரிருவாரம் கழித்து வீடு திரும்பி வந்தார்

நம்முடைய வீட்டுத் தோட்டம் எவ்வாறு உள்ளது என சுற்றிபார்த்தபோது அவருடைய தோட்டத்தில் இருந்த காய்கறி பூஞ்செடிகள் அனைத்தையும் அந்த பர்தீனியம் எனும் களைச்செடி பரவி அழித்து விட்டதை கண்டு அதிர்ச்சியுற்றார்

அடடா ஒற்றையாக சிறியதாக இருந்தபோது அந்த பர்தீனிய களைச்செடியை பிடுங்கி விட்டிருந்தால் அரும்பாடுபட்டு உருவாக்கிய நம்முடைய தோட்டம் இவ்வாறு அழிந்திருக்காதே மேலும் நம்முடைய தோட்டத்தை திரும்பவும் அனைத்து செடிகளுக்குமான புதியதாக நாற்று வாங்கி நட்டு உருவாக்கவேண்டுமே என வருத்தபட்டு அந்த பர்தீனிய களைச்செடியை அழித்து ஒழிப்பதற்கு மிகசிரமபட்டு பிடுங்கி கொண்டிருந்தார்

அதேபோன்றே நாமும் நம்முடைய வாழ்வில் எதிர்ப்படும் தீங்கான எதிர்மறை எண்ணங்களை அவ்வப்போது நீக்கி நல்ல எண்ணங்களை கொண்டு நம்முடைய வாழ்வை வளப்படுத்த முயற்சிக்காமல் பெரியதாக முற்றவிட்டு நம்முடைய மனத்தையும் வாழ்வையும் வீணாக்கி கொண்டிருக்கின்றோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...