சனி, 25 மே, 2013

அவரவர் பணியை விருப்பு வெறுப்பின்றி முழுமையாக செய்திடுக


நல்ல திறமையான கொத்தானார் ஒருவர் தான் பணிபுரியும் முதலாளியிடும் தன்னுடைய வயது முதிர்வினால் தன்னால் இனி அவரிடம் பணிசெய்ய இயலாத நிலையில் உள்ளதால் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்

உடன் முதலாளியானர் நீங்கள் நல்ல திறமையான பணியாளராக இருக்கின்றீர் உங்களை பணியில் இருந்து ஓய்வளிக்க எனக்க மனம் இடந்தரவில்லை இருந்த போதிலும் உங்களுடைய விருப்படி நீங்கள் பணியிலிருந்து ஓய்வெடுத்து கொள்ள அனுமதிக்கின்றேன் அதற்குமுன் இந்த வீட்டைமட்டும் கடைசியாக உங்களுடைய திறமையை பயன்படுத்தி விரைவில் கட்டிமுடித்துவிட்டு பணிஓய்வெடுக்க செல்லுங்கள் என கேட்டு கொண்டதற்கினங்க வேண்டா வெறுப்பாக அரைகுறையாகவும் ஏனோதானோவென்றும் தரம் குறைந்த பொருட்களை கொண்டு அந்த வீட்டை கட்டிமுடித்தார்

ஒருவழியாக அந்த வீட்டின் அனைத்து பணிகளும் முடிந்த அன்று தன்னுடைய முதலாளியிடம் விடைபெறசென்றபோது முதலாளியானவர் அந்த கொத்தனார் கடைசியாக கட்டிமுடித்த வீட்டின் சாவியை அந்த கொத்தானாரிடமே கொடுத்து அதனுடன் கொத்தனாரின் பெயருக்கு மாற்றம் செய்த அந்த வீட்டிற்கான உரிமை பத்திரத்தையும் வழங்கி இதுநாள் வரையில் செய்த அவருடைய பணிக்கான பரிசாக இந்த வீட்டினை வைத்து கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்

அந்த கொத்தனாருக்கு நெருப்பை விழுங்கிய கோழிபோன்று மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் நிலையாகிவிட்டது

அவரால் கடைசியாக கட்டபட்டஇந்தவீடானது தனக்கு பரிசாக கிடைக்கபோகின்றது என தெரிந்திருந்தால் மிகசிறப்பாக தரமான பொருளை கொண்டு கட்டியிருக்கலாமே என வருத்தபடமட்டுமே அந்நிலையில் அவரால் முடிந்தது .

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: