திங்கள், 13 மே, 2013

தேவையற்ற செய்திகளையும் நிகழ்வுகளையும் நம்முடைய மனதில் குப்பை போன்று தேக்கிவைத்திட வேண்டாம்


ஒரு முதிய துறவியும்(சாமியாரும்) அவருடைய உதவியாளரான இளைய துறவியும்(சாமியாரும்) அங்காங்கு கோவில்,மடம் என நாடுநகரங்கள் அனைத்தும் சுற்றி திரிந்து தங்களின் காலத்தை கழித்து வந்தனர்

இந்நிலையில் அவ்விருவரும் ஒரு ஆற்றை கடக்கவேண்டிய நிலையில் ஒருஇளம்பெண்ணும் அதே ஆற்றை கடப்பதற்காக எவ்வாறு கடந்து செல்வது என தயங்கி கொண்டிருந்ததை கவணித்த முதியதுறவியார் தான் அந்த இளம்பெண்ணிற்கு உதவுவதாக கூறி அப்படியே இருகைகளாலும் ஏந்திகொண்டு அந்த கரைக்கு ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் கடந்து சென்றார்

அவருடன் கூடவே வந்த அவருடைய உதவியாளரான இளைய துறவிக்கு இந்த நிகழ்வை கண்டு மிக அதிக அதிர்ச்சி ஆகிவிட்டது ‘துறவி என்றால் முற்றும் துறந்தவராயிற்றே பெரியவர் எப்படி அந்த இளம்பெண்ணைதன்னுடைய கைகளால் தொடலாம் தொட்டதுமட்டுமல்லாமல் இருகைகளாலும் தூக்கிகொண்டுவேறு செல்கின்றாறே’ என மனதிற்குள் பொருமி கொண்டே சென்றார்

அடுத்த கரை சென்றவுடன் முதியதுறவியானவர் அந்த இளம்பெண்ணை தரையில் இறக்கி விட்டு “பத்திரமாக வீடு போய் சேரு தாயே!” என அறிவுரைகூறிவிட்டு அவர் அடுத்தஊருக்கு செல்லும் பாதையில் தம்முடைய பயனத்தை தொடர்ந்தார். இளையதுறவியும் மனதிற்குள் பொருமிக்கொண்டே அவரை பின்பற்றி சென்றார்

அன்று சாயுங்காலம் அருகிலிருந்த ஊருக்க அவ்விரு துறவிகளும் சென்று சேர்ந்தனர் அவ்வூரில் உள்ள தருமசத்திரத்தில் இரவு உணவை இருவரும் அருந்திய பின் ஓய்வுகொள்ள முனைந்திடும்பேது இளந்துறவி தன்னுடைய மனதில் குடைந்து கொண்டிருந்த கேள்வியை வாயை திறந்து கேட்டுவிட்டார்” ஐயா! நீங்களோ முற்றும் துறந்த துறவியார் ஆவீர்! அதனால் எந்த ஒரு பெண்ணையும் உங்கள் கைகளால் தொடக்கூடாது. அப்படியான நிலையில் இன்று ஆற்றை கடக்கும்போது எவ்வாறு ஒரு இளம்பெண்ணை இருகைகளால் ஏந்தி தூக்கி கொண்டு வரலாம்? அது உங்களுடையை துறவிற்கு பங்கம் இல்லையா? “என வினவினார்

“தம்பி! நான் அந்த இளம் பெண்ணை ஆற்றங்கரையிலேயே இறக்கிவிட்டுவிட்டேனே! ஆனால், நீ இன்னும் உன்னுடைய மனதில் இருந்து இறக்கிவிடவில்லையா?” என பதிலுக்கு வினவிய போதுதான் அந்த இளந்துறவிக்கு தான் இன்னும் அந்த முதியதுறவிபோன்று மனபக்குவம் அடையவில்லையென தெரிந்துகொண்டு அந்த முதிய துறவியிடம் தன்னை மன்னித்துவிடும்படி கோரினார்

நாம் பல்வேறு தேவையற்ற செய்திகளையும் நிகழ்வுகளையும் நம்முடைய மனதில் குப்பை போன்று தேக்கிவைத்து ஆக்க சிந்தனை எதுவுமின்றி நம்முடைய பொழுதினை வீணடிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களின் மனதையும் புண்படுத்திவிடுகின்றோம் இதனை தவிர்த்திடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...