திங்கள், 27 மே, 2013

தேவையற்ற செய்திகளை நம்முடைய நினைவில் நீண்ட நாட்களுக்கு வைத்துகொள்ளவேண்டாம்


ஒரு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் தன்னுடைய வகுப்பு மாணவர்களிடம் மறுநாள் அனைத்து மாணவர்களும் அவர்கள் வெறுக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருஉருளை கிழங்கு வீதம் எத்தனை நபர்களை வெறுக்கின்றார்களோ அத்தனை உருளை கிழங்குகளை ஒரு பிளாஷ்டிக் பையிலிட்டு எடுத்துவரும் படி கூறினார் .

மறுநாள் அவ்வாறே அனைத்து மாணவர்களும் ஒன்று இரண்டு என அவரவர்கள் வெறுக்கும் நபர்களுக்கு ஏற்ற எண்ணிக்கையில் உருளைகிழங்குகளை தத்தமது பையிகளிலிட்டு பள்ளிக்கு எடுத்து வந்தனர் .

உடன் அவ்வாசிரியர்”இந்த பையை சாப்பிடும் போதும் தூங்கும் போதும் எந்தவேலை செய்தாலும் எங்கு சென்றாலும் எப்போதும் உங்கள் கையிலேயே இருக்கவேண்டும் “ எனக்கூறினார்

ஓரிரு நாட்கள் அவ்வாறே அம்மாணவர்களும் நடந்துகொண்டனர் ஆனால் மூன்றாவது நாட்களுக்கு மேல் அனைவரும் அவ்வாசிரியரிடம் “ஐயா! நீங்கள் கூறியவாறு உருளைகிழங்குகள் உள்ள இந்த பையை எப்போதும் எங்களிடம் வைத்திருந்தால் அழுகிய நாற்றம் வீசஆரம்பித்துவிட்டது. இதற்குமேல் இந்த பையை எங்களால் வைத்து கொண்டு வேறு பணிகளை செய்யமுடியாது” என புகாரிட ஆரம்பித்தனர்.

“நல்லது. மாணவர்களே! சாதாரண உருளைகிழங்குகளையே உங்களால் இரண்டு அல்லது மூன்ற நாட்களுக்குமேல் வைத்திருக்கமுடியவில்லை அழுகிய நாற்றம் வீசஆரம்பித்துவிட்டது என கூறுகின்றீர்கள். ஆனால் நீங்கள் வெறுக்கும் நபரை மட்டும் உங்களின் நினைவில் நீண்ட நாட்களுக்கு வைத்துள்ளீர்களே! அது ஏன் ? அவ்வாறு அந்நபர்களை பற்றிய செய்தியை மிக நீண்ட நாட்களுக்கு உங்களுடைய நினைவில் வைத்திருந்தால் உங்களால் உங்களுடைய வேறுமுன்னேற்ற செயல்கள் எதையும் செய்யமுடியாது அதனால் இன்றோடு அவைகளை நினைவில் இருந்து அழித்துவிட்டு உங்களின் முன்னேற்றம் வளர்ச்சி ஆகியவைபற்றி மட்டும் சிந்தித்து செயல்பட உங்கள் நினைவை பயன்படுத்துக” என அறிவுரைகூறினார் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...