புதன், 22 மே, 2013

மிககுறுகிய நம்முடைய இந்த வாழ்வை மகிழ்வோடு உடல்நலனையும் மனநலனையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம்


பேராசிரியர் ஒருவர் பொதுமக்களுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றில் அவர்களுடைய வாழ்வில் ஏற்படும் இடர்களை தவிர்த்து நிம்மதியாக எவ்வாறு தத்தமது வாழ்வை வெற்றிகொள்வது என அறிவுரை வழங்கிகொண்டிருந்தபோது அவர் தம்முடைய கைகளால் நீர்நிறைந்த சிறுடம்ளர் ஒன்றை தூக்கி வைத்து கொண்டு “இது எவ்வளவு எடைஇருக்கும்” என தன்னுடைய அறிவுரையை கேட்பதற்காக குழுமியருந்தவர்களிடம் கேட்டார்

உடன் “கால்கிலோ இருக்கும்” என ஒருவரும் “200 கிராம் இருக்கும் “ என மற்றொருவரும் என்றவாறு அனைவரும் ஆளாளுக்கு மனதில் யூகித்த எடையை கூறினர். அந்த பேராசியர் .”அமைதி! அமைதி! இங்கு இந்த டம்ளரில் இருக்கும் உண்மையான தண்ணீரின் எடை ஒரு பொருட்டன்று. இதனை நாம் எவ்வளவு நேரம் நம்முடைய கைகளால் தாங்கி கொண்டுள்ளோம் என்பதற்கேற்ப நம்முடைய கைகள் அதனுடைய எடை எவ்வளவு என உணரச்செய்கின்றது. உதாரணமாக ஒருசில நிமிடங்கள் எனில் டம்ளரின் தண்ணீருடன் கூடிய எடை ஒரு பொருட்டாக தெரியாது. அதையே ஒருமணிநேரம் கைகளில் வைத்திருந்தால் கைகளில் வலி ஏற்பட்டு அதிக எடையை தாங்குவதாக உணருவோம். அதையே நாள்முழுவதும் எனில் உடனடியாக நம்மை மருத்துவமனைக்கு ஏழைத்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.. அதாவது நீர்நிறைந்த சிறுடம்ளரை கைகளால் வைத்திருப்பதற்கே இவ்வாறான நிலை எனில்? நாம் தினமும் அலுவலகத்தில் அல்லது வாழ்வில் எதிர் கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் அவ்வப்போது மனதில் இருந்து அப்புறபடுத்திவிடவேண்டும் அதாவது அன்றன்று நாம் வீடு திரும்பும்போது அலுவலகத்தோடு அவைகளை விட்டிட்டு வீட்டின் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தபின் மறுநாள் அலுவலகம் சென்று அதனை எதிர்கொணடால் அதற்கான தீர்வை மிகசுலபமாக எளிதாக காணமுடியும் அதனைவிடுத்து எப்போதும் அவைகளை நம்மோடு கொண்டு சென்றால் நம்மை அவை படுக்கையில் நோயாளியாக வீழ்த்திவிடும்” என அறிவுரை கூறினார் .

ஆம் நாமும் இந்த அறிவுரையை பின்பற்றி மிககுறுகிய நம்முடைய இந்த வாழ்வை மகிழ்வோடு உடல்நலனையும் மனநலனையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...